நடந்து கொண்டேயிருந்தேன்  

அடிக்கு ஒரு கடை எதையாவது 

விற்றுக் கொண்டிருந்தது

சாலையின் திசையெங்கும்

ஏதாவதொரு தேநீர் கடை 

நோக்கியே விரிந்திருந்தது

கொஞ்சம் வேகமாக நடக்கத் 

தொடங்கினேன்

அந்தக் கடை இந்தக் கடை என 

சாலையின் இரு புறங்களுமே

புற முதுகையே காட்டிக் 

கொண்டிருந்தன

கண்களில் வியர்வை முட்டியது

நடையைக் கூட்டினேன்

எதிர்ப்பட்டவர் காட்டிய 

பேருந்து நிலைய பின் பக்கம் 

வந்துசேர அடுத்த பத்து நிமிடங்கள்

அதற்குள் பர்ஸையும் 

தொலைத்திருந்தேன் 

பாலியல் சேவைக்கு வருகிறேன் 

என்ற பெண் இருவர் மற்றும்  

ஒரு திருநங்கை   

இவர்களையும் தவிர்த்திருந்தேன்   

அடித்து பிடித்து சிறுநீர் 

கழித்து விட்டு திரும்பும் போது

உற்றுப்பார்த்த ஒருவனை  

வேகமாக கடந்திருந்தேன்  

பிறகு ஆசுவாசமாக தேநீர் 

குடிக்கையில் தோன்றியது 

பேருந்து நிலையம் என்பது 

பேருந்து வந்து போக 

பிறகு சிறுநீர் கழிக்க மற்றும் 

பாலியல் சேவைக்கு மற்றும் 

பர்ஸ் திருட்டு கொடுக்க  

எப்போதாவது இப்படி தேநீர் குடிக்க....! 

- கவிஜி 

Pin It