மறதிகளின் அன்பாக
முத்தமிடு

காதலாகவும் இருக்கலாம்
இருந்துவிட்டு போகட்டும்!
கவிதைக்காடு உன் தலை முடியிலிருந்து தொடங்குகிறது
என்பதும் ஜென்தத்துவம் தான்!

கொலை செய்தபின்
பதைபதைப்பதும்
பின்பு மீள்வதும் நேசங்களுக்கும்
உரியதாகவே இருக்கலாம்!

நான் இறகாகி இருக்கிறேன்
இனி உன்னால்
நிறைவாகியும் இருப்பேன்!

அன்னிச்சை மிச்சமாய்
உன் குறுந்தகவல்
இனி
இடைவெளிகளில் என்னை
நிறைக்காமல் இருந்திடவேண்டும்!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It