ஆச மக
பெத்து பிழைச்ச
நேரத்தில
ஒத்தாசைக்கு
வந்த கிழவி...
கொள்ளை அழகு
பேரப்பிள்ளை
பொக்கிஷமா
பார்த்துகிட்டா ..
மணிக்கணக்கா
மடிக்கணினி
முறைச்சு கிடக்கும்
மருமவனோ
செல்போனில்
சிரிச்சுப் பேசுற
சிறுக்கி மவளோ
ஆசையா
நாலு வார்த்தை
பேசிப்பார்க்க
காத்துக் கிடந்த
மவராசி
ஆறு மாச
கணக்கு முடிஞ்சு
ஏரோபிளான்
ஏறும்வரை
ஆறுதலா
அணைச்சுக்க
ஆளில்லை ..
ஆயா வேலைக்கு
கூலி போல
பெட்டியிலே
கசந்து கிடக்கு
அயல்நாட்டு
சாக்லேட்டு ....

Pin It