ஒரு மரம்
முறிவதைப் போலல்ல
மனம் முறிவதென்பது

அதற்கென
துளித்துளியாய்
வெறுப்பை
விதைக்க வேண்டும்!

துளித்துளியாய்
ப்ரியத்தில்
கசப்பேற்ற வேண்டும்!

துளித்துளியாய்
வன்மம்
வளர்க்கவேண்டும்!

இதுவெதுவுமில்லாமல்
மனம் முறிப்பதென்பது
எளிதல்ல!
மரம் முறிப்பதைப் போல...

- இசைமலர்

Pin It