வடக்கே அமைந்த ஊரிலிருந்து
அன்று
துரத்தப்பட்ட
இரவோடு இரவாக
தொடங்கிற்று இழப்பு....

தெற்கே
இடப்பெயர்ச்சி இயலாமை
எதிலிப் பெயர்
தாயின் நெஞ்சுவலி
தந்தையின் பக்கவாதம்
மருத்துவமனை மன்றாட்டம்....

மேற்கே
அறுவடைக்கு ஆளற்று
சீனி தொழிற்சாலைக்கு அருகே
மூத்தகரும்பு பூத்து மெலிகிறது
கண்டத்தில்......

கிழக்கே
மனைவியின் தாலிக்கொடி
குத்தகை காணிக்குள்
வில்லுக் குளத்தோரம்
மூழ்கிக்கிடக்க....
.....................
மத்தியில் இன்றின் இருப்பு
எல்லா 'கருமம்'களையும்
திசைகளே தீர்மானிப்பதால்
அழுத்தத்தின் கனம்கூட
அவஸ்தையில்
கழுத்துப்பிடி இறுக
தொண்டைக்குள் கிடக்கிறது
சீவன்!


- ரோஷான் ஏ.ஜிப்ரி

Pin It