வந்து பார்த்தவர்களின் கணக்கு
இருநூறை மீட்டது!

பதில் சொல்லி கடந்தவர்
ஆறேழு பேர்!

சொல்லாமல் கடந்தவர்
முக்கால் சதத்திற்கும் மேல்!

ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணம்
உரைத்ததில் பெரிதாய்
துன்பம் இல்லை அபலைக்கு!

ஊரார் பேச்சுக்கு அஞ்சி
ஒரு நாளும் வெதும்பியதில்லை!

நேரம் கூடிவரவில்லை என
உற்றார் உறவினர் சொல்லும் போதும்
மெத்தனம் தான்!

மனமற்று 'உனக்கு வயதாகிவிட்டது' என்ற அம்மாவின் சொல்லில்
அன்னிச்சையாய் கண்களில்
நீர் பெருகியது என்பதைத் தவிர
சாலசுகம்!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Pin It