தன் விதியைச் சிறுகூண்டிற்கு
வித்திட்டுச் சகிக்கும்
பறவையின் சிறகிற்காய்
பரந்து விரிந்து கிடக்கிறது
பாழும் பெருவானம்.

பிடிப்பிலிருந்து விடுபட்டு
மடிந்து சருகாகிப் போன
இலைகளின் வறட்சிக்காய்
துளிர்த்து நிற்கிறது
காய் கனிப் பெருமரம்.

உயிர்வலி பொங்கும் சீவிதத்தில்
மிகும் கண்ணீர் ஒழுகலின் பின்புலத்தில்
மறைந்து நின்று கேலிக்கிறது
எக்காளப் பெருஞ்சிரிப்பு.

வாழ்வியலைத் தடயமின்றி
துடைத்து அழிக்கும்
மரணத்தின் நுழைவாயிலில்
மண்டியிட்டு
மலர்ந்து கிடக்கிறது
வாழ்ந்து கெட்ட பெருவாழ்வு.

- வான்மதி செந்தில்வாணன்

Pin It