வெப்பத்தைச் சூடி புழுங்கும்
இவ்விரவு
தலைகோதி நெற்றியிலிடும் முத்தமென இனிக்கிறது

அலைபேசியில் காதலினியாள்

சடங்குகள் சூழ்
இப்பிரபஞ்ச வெளியில்

வெட்கத் திரையென
நகராத மேகங்களின் பின்னால்
நிலவும் தூரத்து நட்சத்திரங்களும்
வெளிச்சத்தால் புணர்ந்து கொண்டிருந்தன.

- சிவ.விஜயபாரதி

Pin It