இவ்விருள் கூறும் கதைகளைக்
கேட்டவாறு
நெடுந் தூரம் பயணித்துவிட்டேன்
ஒரு மௌனியாய்.

இருப்பினும்
நிற்கும் இடம் விட்டு
துளியும் நகரவில்லை நான்.
எதையும் நகர்த்திடவும்
இயலவில்லை என்னால்.

நீர்த்துப்போனதென்று
நான் தூக்கி எறிந்த இரவு
மீண்டும் என்மீதே வந்து விழுகிறது
இன்னுமின்னும் அடர்த்தியாய்..

- வான்மதி செந்தில்வாணன்

Pin It