ஒரு முறை ஏறி விட்டு இறங்கத் தெரியாமல்
தவித்தது ஞாபகம்
கீழே மாமா நின்றிருந்தார்
பின் அவரே இறங்குவதாக என்னை இறக்கினார்
இன்று மாமாவும் இல்லை
கொய்யா மரமும் இல்லை
ரயில் பயணத்தில் கொய்யா பழம்
வாங்கப் பிடிக்காமல்
ஜன்னலில் தவித்திருக்கிறேன்
வழி நெடுக எத்தனையோ மரங்கள்
யார் ஏறினாலும் இறக்கி விட நான் இருக்கிறேன்
யாராவது ஒரு கொய்யா மரத்தை
நட்டுப் போங்கள்....

- கவிஜி

Pin It