கோடி புண்ணியம்
கிட்டியதேயில்லை
கோபுர வாசலிலேயே
தவமிருக்கும்
பிச்சைக்காரனுக்கு.......

____________

வலிகள் வழக்கமாகிவிட்ட
ஒன்றுதான்
எப்பொழுதோ வரும்
வசந்தங்கள் தான்
வலிக்க துவங்கிவிடுகிறது இப்பொழுதெல்லாம்........
____________


நாம் செய்யும் செயலுக்கு
நாம் எஜமானன் என்றால்
அந்த செயலின் முடிவுகளுக்கு
நாம் அடிமை..........

____________

வேரோடு
சாய்த்ததற்கு
நம்மை ஊரோடு
கூறுபோடுகிறது
வெயிலெனும்
வெட்டரிவாள்.........

- மு.கௌந்தி, சென்னை

Pin It