மழை அருந்தாது கிடக்கும் எம் மண்
கருவேலத்தோடு காட்டரளிகளைத்
தின்று செரிக்காமலிருக்கிறது.

அது செரித்து - நானும் போய்
மழையை வேண்டும் நாள்
அருகிலுண்டு !!

ஆனாலும் என் அப்பன்
சீக்கிரம் மழையோடு மழையாய் வருவான்.
அவன் கண்ணுக்குள் வைத்திருந்த
நான் மீதம் வைத்திருக்கிற
கனவுப்பச்சையை உயிரெழுப்ப..

அவரப்பன் வராது
இவர் சென்றது குறித்து
எந்த ஒரு
நம்பிக்கையிழப்பும் எனகில்லை,
எங்கோ விதைக்கும் விதை
இங்கேனும் பொசியக்கூடும்..

குறைபட்சமாக என் கற்ற மகனிடமிருந்து
நிலம் காக்கும் பொருட்டு
என்னை
ஒரு
பாவம் செய்யாது வளர்த்து விட்டார்.

ஒரு வேளை
பாவத்தின் சம்பளம் தான் மழையோ ??!!!

- முருகன்.சுந்தரபாண்டியன்

Pin It