உன்
நெடுந்தூரப் பயணத்திற்கான
கையசைப்பு - என் விழிகள்
உன்னை தொலைக்கும்
தூரம் தான்...
அடுத்த நொடி தனிமையை
கவ்விக்கொண்டு வந்துவிடும்
என் அருகில் ...
கதவினைத் தாழிட்டுக்கொண்டு
நம் அறை முழுதும்
பரப்புரை நிகழ்த்தத்
தொடங்கிவிடும் உன்
நினைவுகள் ...
காலை மாலை இரவென
விசாரிப்புகள்
விசாலமாகும்..
ஆயினும் என் விழிகள்
உன்மீது தாவிக்கொள்ளும் வரை
கணந்தோரும்
கூடிக்கொண்டே இருக்கும்
என் தனிமையின் ரணம்...
- சுரேகா