கீற்றில் தேட...

lovers conversationஒரு சொல்லில்
உதிர்கிறோம்..!
ஒரு சொல்லில்
மலர்கிறோம்..!

ஒரு சொல்லிற்காக
வாழ்வை முடிக்கிறோம்..!

ஒரு சொல்லிற்காக
வாழத் துடிக்கிறோம்..!

சொல்லப்படாத
ஒரு சொல்லுக்காக
ஏங்கித் தவிக்கிறோம்..!

சொல்லப்பட்ட
ஒரு சொல்லிற்காக
நம்பிக்கை இழக்கிறோம்..!

சில சொற்களுக்காகப்
போர் தொடுக்கிறோம்..!
சில சொற்களுக்காகப்
போரை முடிக்கிறோம்..!

ஒரு சொல்
சொல்லப்பட கூடாதே..!
என்று தான்
வரலாற்றில் இத்தனை
தியாகங்கள் நிகழ்ந்திருக்கிறது

சொற்களின்
பாலத்தைக் கடந்து தான்
கடவுளையும் சாத்தானையும்
சந்திக்க நேர்கிறது..!

சொற்கள்
அரூப வடிவிலான
ஆயுதங்கள்..!

கண்ணுக்கு தெரியாத
சொற்களின் வாள் வீச்சில்
வெட்டுப்பட்டுக் கிடக்கின்றன
பிரிக்க முடியாத
பிரியங்கள்..!

அமீர் அப்பாஸ்