சுறுசுறுப்பாகத்தான் இயங்குகிறார்கள்..
படிக்கிறார்கள்.. பாஸ் ஆகிறார்கள்...
அரும்பு மீசையை அடிக்கடி
தொட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள் ..
என் சி சி சீருடையில்
போலீஸ் அதிகாரியைப் போல் கெத்தாக
பெண்கள் எதிரில் மிடுக்குடன் போகிறார்கள்..
அப்பாவிடம்.. அம்மாவிடம்.. சுணங்கி
சலித்துக் கொள்கிறார்கள்..
வெளியூரில் வேலைக்குப் போகிறார்கள்..
முதல் மாத சம்பளத்தில்
முகேஷ் அம்பானியாய் உணர்கிறார்கள் ..
மெஸ்களில் அம்மாவை நினைத்துக் கலங்குகிறார்கள் ..
அஞ்சப்பரில் பில் தொகை தரும்போது
அப்பாவின் அன்பை நினைத்துக் கொள்கிறார்கள்
பெண் பார்க்கிறார்கள்.. கல்யாணம் செய்கிறார்கள்
கழுத்தில் மூன்று பவுன் சங்கிலியில் வலம் வருகிறார்கள்..
மனைவியின் வயிறு தொட்டு
முதல் குழந்தையின் தலை முட்டுவதை தடவி பூரிக்கிறார்கள்..
பெற்ற பிள்ளைகளுக்கு அட்மிஷனுக்கும் அப்புறம்
கட் ஆப் மார்க் பற்றியும் கவலைப்படுகிறார்கள்..
இடையில் நட்பு துரோகம் எல்லாம் பார்க்கிறார்கள்..
..

அவர்களின் பிள்ளைகள்
இப்போது முதல் வரியிலிருந்து
ஆரம்பிக்கிறார்கள் ..!
..
புனரபி ஜனனம் ..புனரபி மரணம்
மறுபடி ..மறுபடி..சுழலும் உலகம்!

- கருணா

Pin It