ஸ்ரீரங்கத்து ஜீவாத்மாக்களுடன் சேர்ந்து
பரமாத்மாவும் விலை போனான்.
மிடாசின் போதையில் கிறங்கிப்
பாம்பு படுக்கைக்குப் பதில்
பன்றிக் குடிசையில் படுத்துக் கிடந்தான்.
ஊழலைப் பற்றிக் கேட்டேன் - அவன்
இன்னும் கொஞ்சம் ஊற்றிக்கொடு என்றான்.
வெற்றிதான் தண்டனையா என்றேன்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்று
குனிந்து குண்டியைக் காட்டினான்.
தீர்ப்பைப் பற்றி கருத்துக் கேட்டேன்
அவன் பூணூலைக் காட்டி கோபப்பட்டான்.
அண்ணாந்து பார்த்து
அன்னலட்சுமியே என்றான்.
போதையால் கழன்ற தன்
நிஜாரை சரி செய்கையில்
காவிரித்தாயே என்றான்.
தடுமாறி எழுந்து நின்று
தங்கத்தாரகையே என்றான்.
ஓட்டுக்கு எவ்வளவு என்றேன்
அவன் பாட்டுக்கு உளறினான்
தேவடியா பயலுகளா....
எங்க அம்மாவ யாரும்..ம்...ம்..ம்....
எம்ஜிஆரையே......
எத்தனை பேர...
ஒன்றும் புரியாமல் விழித்தேன்.
சட்டையைப் பிடித்து சண்டைக்கிழுத்தான்.
ஒழுங்காகப்போ இல்லையென்றால்
கஞ்சா வழக்கு போடுவோம்
நில அபகரிப்பு வழக்குப் போடுவோம்
மானநாஷ்ட வழக்குத் தொடுப்போம்
அடங்கவில்லையா ஆள்வைத்து
ஆசிட் அடிப்போம் என்றான்.
மிரண்டு போனேன்
கிழவிகள் மலம் கழிப்பது போல
குனிந்து கும்பிடு போட்டேன்
தொண்டையை ஒருமுறை செருமிவிட்டு
வெற்றிக் களிப்பில் குத்தாட்டம்
போட்டுக்கொண்டிருந்த
தன் இருமனைவிகளுடன்
கோவிலுக்குள் நுழைந்தான் ரங்கநாதன்

Pin It