சொடுக்கிய விரலில்
பத்து பேர் நின்றாலும்
சொன்னதற்கெல்லாம்
தலையாட்ட வேண்டியதிருக்கிறது
நாவிதனிடம்.
_______________________

ஆவுடையப்பன்
ஆழக்குழி தோண்ட
மாடசாமி
மணலள்ளித் தூர்வாற
குப்பனும் சுப்பனும்
கோடாரி கடப்பறை சுமக்க
வாங்கி வைத்த
அமைச்சரை எழுதினார்கள்
அமைச்சர் மரம் நட்டதாய்.
________________________

வெளிச்சங்களற்ற
இரவின் இருளொன்றில்
அந்தக் கண்ணாடி
எதைப் பிரதிபலித்துக் கிடந்திருக்கும்

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.