திறன்மிகுந் தோரும் திறன்குறைந் தோரும்
பிறழா தனைத்து வகுப்பிலும் இருக்கப்
பார்ப்பனர் உயர்நிலைப் பணிகளில் நிரம்பியும்
தேர்ந்து தெளிந்த தாழ்நிலைப் பணிகளை
ஏற்க மறுப்பது சமூக அநீதியே
பஞ்சம சூத்திர மக்களில் திறனோர்
செஞ்செய லாக உயர்நிலை அடைவது
மட்டுமே சமூக நீதி அல்ல
தட்டிச் சென்ற பணிகளில் பார்ப்பனர்
தப்பா திருப்பதே சமூக நீதி

(திறமையுடையவர்களும், திறமைக் குறைவானவர்களும் விதி விலக்கு இல்லாமல் அனைத்து வகுப்பு மக்களிலும் இருக்கையில், உயர்நிலைப் பணிகளில் (அனைத்து வகுப்பு மக்களும் தேர்ந்து எடுக்கப் பட வேண்டிய இயற்கை நியதிக்கு மாறாகப்) பார்ப்பனர்கள் நிரம்பி வழிவதும் (அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த) தாழ்நிலைப் பணிகளை பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் ஏற்க மறுப்பதும் சமூக அநீதியே. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களில் உள்ள திறமையானவர்கள் (எவ்விதத் தடையும் இன்றி) நேரடியாக உயர்நிலைப் பணிகளை அடைவது மட்டுமே சமூக நீதி ஆகி விடாது; தாழ்நிலைப் பணிகளைச் செய்வதில் இருந்து தப்பிச் செல்லும் பார்ப்பனர்கள் அவ்வாறு தப்ப முடியாமல் அவற்றில் ஈடுபட்டே தீர வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்துவதும் ஆகிய இரண்டு கூறுகளும் சேர்ந்தது தான் சமூக நீதியாகும்)

- இராமியா

Pin It