பொதுப் பாதைகள் மறுக்கப்பட்டன எமக்கு
நீர்நிலைகள் எமது தாகத்துக்கு பயன்படாமல்போக
கோவில் கதவுகள் மூடிக்கொண்டன எம்மைக்கண்டு
பாடசாலைகளை ஏக்கங்கொண்டு நோக்கினோம்
உங்களது தெருக்களைத் துப்புரவுச் செய்துவிட்டு
நாற்றம் வீசும் அழுக்கு மனிதர்களென ஆனோம்
ஊருக்குத் தெற்குப் பக்கம் ஒதுக்கப்பட்டோம் சோ¢யரென         
எங்களது கைத்தீண்டலால் விளைந்தத் தானியம் தின்று
கொழுத்தத் தொந்திகள் தீண்டப்படாதவன் என்றன எம்மை
தீண்டப்பட்டது எமது அல்குல் அவனது குறித்தினவுக்கு
சவுக்கடிகள் தின்று சாணிப்பால் குடித்து நலிந்தோம்
ஒரு மீட்பா¢ன் வரவுக்கு தவங்கிடந்த அடிமைகளுக்கு
ஏப்ரல் பதினாங்கு ஆயிரத்தென்னூற்று தொண்ணூற்றொன்று
அன்றுதான் கீழ்வானில் ஓர் ஒளிக்கீற்றுப் பிறந்தது
சட்டச் சாவிகள் அடைக்கப்பட்ட கதவுகளைத் திறந்தன
துடைப்பங்கள் சுமந்த கைகள் கோப்புகளைப் புரட்டின
நுகத்தடித் தளர்ந்து முதுகு பாரம் குறைந்தது சற்று
அவ்வொளிக்கீற்று அமரத்துவம் கொண்ட துக்க நாளின்று
சொல்லிக்கொள்ளும் படியாய் இல்லை எமது நிகழ்காலம்
காதல் நாடகங்கள் கௌரவக் கொலைகளென இன்று
சாதிவெறி அரசியல் வெளிச்சம்பெற எ¡¢கின்றன எம்குடிசைகள்
கேட்பாரற்றுப்போக இழுத்து விடப்படுகிறோம் பின்னுக்கு
நீ வேண்டும் மீண்டும் அண்ணலே எங்கள் வீதிக்கு
இம்முறை ஒளிக்கீற்றாக அல்ல. கறுப்புச் சூ¡¢யனாக!

- வெ.வெங்கடாசலம்

Pin It