இயற்கை அறிவியல் வழியில் சென்று
பயன்பல பெற்று உயர்ந்த மனிதன்
கடலில் சுறாவிடம் சிக்கிய களிறென
மடமைச் சந்தை விதிகளில் சிக்கிப்
புவிவெப்ப உயர்வால் அழியா திருக்க
சமூக அறிவியல் கொடையாய் அளித்த
சமதர்மம் ஏற்பது ஒன்றே தீர்வு
 
(இயற்கை அறிவியலின் வழியில் பல சாதனைகளைப் புரிந்து, அதனால் மிகப் பல பயன்களையும் பெற்ற மனித இனம், கடலில் சுறா மீனிடம் சிக்கிய யானையைப் போல (மக்களின் நல்வாழ்வை எண்ணாது, இலாபத்தையே நோக்கி இயங்கும்) மடத்தனமான சந்தையின் விதிகளில் சிக்கி, புவி வெப்ப  உயர்வினால் அழியாமல் இருக்க, சமூக அறிவியல் கொடையாக அளித்து இருக்கும் சோஷலிசத்தை ஏற்பது ஒன்று தான் (இவ்வுலகம் அழியாது இருப்பதற்கான) தீர்வாகும்.)

- இராமியா

Pin It