பொருளா தார நெருக்கடி பெற்ற
செருக்குப் பிள்ளையாம் முதலீடுப் பயணம்
வழியில் காணும் பகைகள் இரண்டு
தொழிலைச் செய்கையில் தோன்றும் மாசு
நீக்க முனைவதில் இலாபம் குறைவதும்
ஆக்கம் கொடுக்கும் தன்மை இலாதும்
முதலுக்கு இலாபம் காரணம் பற்றியே
மதம்பிடித் தலைந்து பழங்குடி மக்களை
வாழ்விடம் இன்றி விரட்டி அடிப்பதால்
பாழ்படும் மக்களின் சினமும் அகும்
 
(பொருளாதார நெருக்கடியின் திமிர் பிடித்த பிள்ளையான மூலதனப் பயணம் (அதாவது மூலதன ஏற்றுமதி) தன் பாதையில் இரண்டு பகைகளைக் காண்கிறது. (ஒன்று) தொழிலைச் செய்யும் போது தோன்றும் மாசுக்களை நீக்குவதற்கு ஏற்படும் செலவுகளினால் இலாபம் குறைவது. (இன்னொன்று) பெரும்பான்மை மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லாவிட்டாலும், இலாபம் வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே மதம் பிடித்து அலைந்து (கனிமங்களை எடுக்கும் தொழில்களில்) முதலீடு செய்யும் பொழுது பழங்குடி மக்கள் வாழ்விடம் இன்றி விரட்டி அடிக்கப்படுவதால் பாழ்படும் மக்களின் சினம்.)

- இராமியா

Pin It