1இருளின் நீட்சியில்
புனைகதை பூதங்கள்
அடைத்து வைக்கப்பட்ட
கண்ணாடிக்குடுவை
உருளுகையில் வெளிச்சுவரில்
ஒட்டிக்கொண்டு
கூடவே பயணிக்கும்
மணலின் அவநம்பிக்கை
2.வழியில் பழுதடைந்த
வாகனத்தைக் கடந்து செல்லும்
காலத்துரத்தல்.
வண்ணங்களின்
எள்ளல்கசியும் அந்தி
ஒற்றைக்கால்
பாதரச வியாபாரியின்
சங்கேத லிபியினை
உடைக்க வெளிப்படுகிறாள்
3.நெருப்பில் புகுந்து
வெளிவராமற்போனவளின்
முந்தானை பற்றியிழுக்கும் நீலவுடலனின்
தீண்டல் பொறுக்காமல்
தற்கொலைக்கு முயலும்
மனமொழி பயிற்றுவிப்பாளனின்
கதறலில் இன்புறும் எறும்புப்பறவை.
4 கொய்து வீசப்பட்ட தலையின்
இமையிலாக் கண்கள்
பேசுகிற வார்த்தைகளின்
முதல் தொகுப்பு.

இருந்துவிடவும்
இல்லாமற் போய்விடுவதற்குமான
சாத்தியங்களின் தேவதை.
அதன் பெயர்
அதி.

Pin It