ஓர் இதயம் நொறுங்குவதை நான் தடுக்க முடிந்தால்,
என் வாழ்க்கை வீணல்ல;
ஒருவர் வாழ்வின் வேதனையை நான் தணிக்க முடிந்தால்,
அல்லது ஒருவர் வலியைக் குறைத்து இதமாக்கினால்,
அல்லது மயங்கி விழப் போகும் ராபின் பறவையை
அதன் கூட்டுக்கு மீண்டும் சென்றடைய உதவ முடிந்தால்,
என் வாழ்க்கை வீணல்ல.

அமெரிக்கப் பெண் கவிஞர் எமிலி டிக்கின்சனின் கவிதைத் தொகுப்பின் Part I - Life என்ற பகுதியின் 6 வது பாடல்.
'If I can stop one heart from breaking'

தமிழாக்கம்: வ.க.கன்னியப்பன் (doctorvkk @yahoo.com)

Pin It