என்னைக் கொலை செய்து கொள்ளலாம்
என்றறிவித்தேன்.
சொன்ன பொழுதிற் துவங்கியது யுத்தம்.
சொன்னதில் ஏதேனும் சூதிருக்குமோ
எனத் திகைக்கிறார்கள்.
சொன்னதின் பின்புலம் யாராயிருப்பர்
என மலைக்கிறார்கள்.
சொன்னதன் உள் அர்த்தம் வேறாயிருக்குமோ
என்று வாதிடுகிறார்கள்.
சொன்னதற்குப் பின் சித்தாந்தங்களிருக்குமோ
என்று தேடுகிறார்கள்.
சொன்னதுக்கு மாற்றாய் என்னால் வீழ்த்தப்படும் அபாயமுள்ளது
என்று அஞ்சுகிறார்கள்.
சொன்னதைக் கேலியாய் மாற்றிச் சொல்வேனோ
என்று நம்புகிறார்கள்.

சுற்றிக்கொண்டே இருக்கிறது
பஞ்சுமிட்டாய்க்காரனின் சக்கரம்.
சாலைவிதிகளைப் பற்றின எந்தக் கவலையுமின்றி.
அது போல நானும்
என்னைக் கொலை செய்து கொள்ளலாம்
என்றறிவித்தேன்.

Pin It