புதுநானூறு - 5.  

எருமை அன்ன காரிருள் சூழ்ந்த
பெருநிலப் பரப்பாம் இந்திய நாட்டில்
பார்ப்பனர் ஒன்றே திறனாளி எனவும்
சீர்மிகு மக்கள் திறனிலி எனவும்
இயல்புக்கு எதிராய் இயங்கிடும் முறையை
மயங்கிய மதியுடன் ஏற்றிடும் தோழா
ஆரியர் கூறும் சாத்திரம் தன்னிலும்
கூரிய மதியினர் பிறரும் உளரென
வழியின்றி ஒப்பியும் தாமே உயர்வென
பழிக்கஞ்சா கயமையை வலுவிலே பதித்தனர்
தோழா உணர்வாய் நாமே திறனாளி
வாளா விருப்பதில் பயனேதும் இல்லை
திறமை யற்ற பார்ப்பனர் தம்மையும்
மறச் செயலாலே உயர்நிலைக்கு ஏத்தும்
பார்ப்பனர் யாவரும் வஞ்சகர் அல்லவோ
பாராள் வதினால் பாழாகும் அல்லவோ
விழித் தெழு தோழா வஞ்சகர் தம்மை
மழித்தெடுத்து ஆங்கே மெய்த்திறன் மக்கள்
வருவதி னாலே தேயம் செழிப்புற
பெருவழி அமைக்க ஒன்றாய் இணைவோம்
 
(எருமையின் கருமையைப் போன்று காரிருள் சூழ்ந்துள்ள இந்திய பெரு நிலப் பகுதியில், பார்ப்பனர்கள் மட்டும் தான் திறமைசாலிகள் (ஆகவே அவர்கள் பொதுப் போட்டியில் வெல்கிறார்கள்) எனவும், மற்ற பெரும்பான்மை மக்கள் திறமையற்றவர்கள் (ஆகவே அவர்கள் பொதுப் போட்டியில் வெல்வதில்லை) எனவும்  இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கை நியதிக்கு ஒவ்வாத கருத்துக்களை, அறிவு மயக்கத்தில் ஒப்புக்கொள்ளும் தோழர்களே! பார்ப்பனர்கள் அடிப்படையாகக் கொள்ளும் (பகவத் கீதை, மனு நீதி, பராசரஸ்மிருதி மற்றும் பிற) ஆரிய சாத்திரங்களிலும் பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்கள் (அயோக்கியர்கள்) உண்டு என்றும் சூத்திரர்களில் அறிவுக் கூர்மையுடையவர்கள் (ஒழுக்கமுடையவர்கள்) உண்டு என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் பார்ப்பனர்கள் உயர்நிலைகளில்  இருக்க வேண்டும் என்றும் சூத்திரர்கள் கீழ் நிலைகளில் இருக்க வேண்டும் என்றும் (அறமற்ற மறத்தன்மையான) வன்முறைகளினால் நிலைப்படுத்திக்  கொண்டார்கள்.

தோழர்களே! நாம் தான் திறமைசாலிகள் (பார்ப்பனர்கள் அல்ல) என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். (வஞ்சகத்தால் நம்மை உயர்நிலைகளுக்குச் செல்லவிடாமல் தடுத்து) அயோக்கியத்தனமான தந்திரச் செயல்கள் மூலம்  தம் இனத்தவர்களில்  திறமையற்றவர்களையும் உயர்நிலைகளில் ஏற்றி (நிலைப்படுத்தி) வைத்து நிர்வாகத்தை நடத்திக் கொண்டு இருப்பதால் நாடு பாழாகிக் கொண்டு இருக்கிறது அல்லவா? (இந்நிலையை மாற்ற) வஞ்சகர்களான பார்ப்பனர்களை உயர்நிலைப் பணிகளில் இருந்து முற்றிலுமாகத் துடைத்து எறிந்துவிட்டு அங்கே உண்மையான திறமையுள்ள (சூத்திர) மக்களைக் கொண்டு வந்து நிலை பெறச் செய்வதால் நாடு செழிப்படையும் அல்லவா? ஆகவே (அப்பணியை முடிக்க) அனைவரும் ஒன்றிணைந்து அதற்கான பாதையை அமைப்போம்.)

- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It