கவியரசு மற்றும் முருகன் என்ற கல்லுமண்டையன் ஆகிய இருவரும் மதுரையில் தெப்பக்குளம் அருகில் உள்ள இராமநாதபுரம் செக்போஸ்ட் அருகே, காவல்துறை உதவி ஆணையாளர் திரு. வெள்ளதுரையால் கடந்த 16.02.2016ம் தேதியன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு கல்லுமண்டையனின் தாயார் குருவம்மாளும் அவரது உறவினர்களும் போலீசாரால் அடித்து சித்ரவதை செய்யப்பட்டனர். அது போலீசாரால் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு போலி மோதல் என்று திருமதி.குருவம்மாள் அன்றைய தினமே (16.2.2010) மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் ஓர் எழுத்துப் பூர்வமான புகார் மனுவை அளித்தார். அதற்கு அப்போதே அந்தக் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் மனுரசீதை மட்டும் வழங்கினார். அந்த மனு ரசீதின் எண் 102/2010 ஆகும். அவரது புகார் மனுவின் பேரில் முதல் தகவல் அறிக்கை ஏதும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அன்றைய தினமே (16.02.2010) இச் சம்பவம் குறித்து காவல் உதவி ஆணையாளர் திரு.வெள்ளதுரை மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த எழுத்துப்பூர்வமான புகார் மனுவின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 332, 324, 307 மற்றும் கு.வி.மு.ச பிரிவு 174 கீழ் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அந்த முதல் தகவல் அறிக்கையின் எண்: 244/2010 ஆகும். அதன் பின்னர் அந்த முதல் தகவலறிக்கை குவிமுச பிரிவு 174 ன் கீழ் மதுரை வருவாய் கோட்டாட்சியரின் விசாரணைக்கு தெப்பக்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளரால் அன்றைய தினமே அனுப்பப்பட்டது.

hendri tiben 640அந்த முதல் தகவல் அறிக்கையின் மீது விசாரணை நடத்திய மதுரை வருவாய் கோட்டாட்சியர், காவல் உதவி ஆணையாளர் திரு.வெள்ளதுரை என்பவர் தற்காப்பு நடவடிக்கைக்காகவே துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார் என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எதுவும் தேவையில்லை” எனவும் தெரிவித்து, 12.04.2010-ம் தேதியன்று தனது விசாரணை அறிக்கையினை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சமர்பித்தார்.

மேற்படி வருவாய் கோட்டாச்சியரின் விசாரணை அறிக்கையானது, மதுரை மாவட்ட ஆட்சியர் கடித ந.க.எண்-சி-3-13763/2010- நாள் 08.06.2010-ன்படி அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்த விசாரணை அறிக்கையில் கண்டுள்ள சங்கதிகளை பரிசீலித்த தமிழ்நாடு அரசு அதில் சில குறைபாடுகள், முரண்பாடுகள் மற்றும் தெளிவின்மைகள் காணப்படுவதாக சுட்டிக் காட்டியது. 

அவை…

  1. கல்லுமண்டையன் (எ) முருகனை பிடிக்க காவலர்கள் தங்களை அடித்து துன்புறுத்தினார்கள் என்று இறந்தவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர். இதனை பிற சாட்சிகளின் வாயிலாக உறுதிப்படுத்தவில்லை. 
  1. கவியரசு (எ)கவியரசன் மற்றும் கல்லுமண்டையன் என்ற முருகன் ஆகிய இருவரும் பல்வேறு குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்று தெரிந்தும், உதவி ஆணையர் திரு.வெள்ளத்துரை அவர்கள் மார்பின் மீது சுடாமல் பிற இடங்களில் துப்பாக்கியை பிரேயோகப்படுத்தி அவர்களை உயிருடன் பிடிக்க முயற்சித்து இருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் செயல்படவில்லை. 
  1. மேலும், குற்றவாளிகளின் தாக்குதலில் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக சாட்சிகளின் வாக்குமூலங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் காவல் துறையினருக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் சிகிச்சை விபரங்கள் மருத்துவ ஆவணங்கள் வாயிலாக வெளிப்படவில்லை. 

எனவே, இத்தகைய குறைபாடுகள், முரண்பாடுகள் மற்றும் தெளிவின்மைகள் காணப்படுவதால் இவ்வழக்கினை குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தலாம் என அரசு முடிவு செய்து, தமிழக அரசு ஆணை (நிலை) எண்.228 நாள் 21.03.2017-ன் உத்தரவின் பிரகாரம் ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதன்பின், தமிழ்நாடு அரசு காவல்துறை இயக்குநர் அவர்களது ஆணையின் படி மேற்கண்ட தெப்பக்குளம் காவல் நிலைய குற்ற எண். 244/2010- ன் வழக்குக் கோப்பினை, தெப்பக்குளம் காவல்நிலைய காவல் ஆய்வாளரிடமிருந்து பெற்று மதுரை நகர் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையானது குற்ற எண். 9 /2017-ல் இதச பிரிவுகள் 332, 324, 307 மற்றும் பிரிவு 174 குவி.முச படி வழக்கை மறுபதிவு செய்தது.

மறுபதிவு செய்யப்பட்ட அந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய மதுரை சிபிசிஐடி OCU Police Station-ன் காவல் ஆய்வாளர் தற்காப்பு நடவடிக்கையாகவே திரு.வெள்ளதுரை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆகவே இவ்வழக்கைக் கைவிடுவதாகவும் தெரிவித்து குற்ற இறுதியறிக்கையை மாண்புமிகு மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் தாக்கல் செய்தார். அந்த இறுதி அறிக்கைக்கு எதிராக இந்த வழக்கில் இறந்து போன கல்லுமண்டையன் என்ற முருகனின் தாயார் திருமதி. குருவம்மாள் "குற்றஇறுதி அறிக்கையில் மதுரை வருவாய் கோட்டாச்சியரின் விசாரணை அறிக்கையில் கண்டுள்ள அதே குறைபாடுகள், முரண்பாடுகள் மற்றும் தெளிவின்மைகள் காணப்படுகின்றன. ஏற்கனவே தமிழ்நாடு அரசால் நிராகரிக்கப்பட்ட மதுரை வருவாய் கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கையில் அவர் தெரிவித்திருந்த அவரது அபிப்ராயங்களை மட்டுமே மீண்டும் மீண்டும் இந்த ஆய்வாளர் தனது இறுதி அறிக்கையில் குறிப்பிடுகிறார். இதன் மூலம் அவர் செய்த மறு விசாரணை என்பது முறையானது அல்ல என்றும், தனக்கு மேல் நிலையில் உயர் அதிகாரி பொறுப்பில் இருக்கும் திரு.வெள்ளதுரை அவர்களை காப்பாற்றுவதற்காகவே அவருக்கு ஆதரவாக ஒரு போலியான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் என்றும், மேலும் இவ்வழக்கு சம்பவம் காவல்துறையின் கஸ்டடியில் நடைபெற்றுள்ளதால் இவ்வழக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 176(1)A ன் படி குற்றவியல் நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் இவ்வழக்கு வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே தொடக்கம் முதலே இந்த விசாரணை சட்ட தவறுகளுடன் தொடங்கி இருப்பதால் இந்த வழக்கின் இறுதி அறிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு தாக்கல் செய்த ஆட்சேபனை மனு (Protest Petition) அந்த மாண்புமிகு நீதிமன்றத்தால் கோப்பிற்கு ஏற்கப்பட்டது. இதில் திரு.வெள்ளதுரை அவர்களும் பதிலுரை தாக்கல் செய்துள்ளார். தற்போது தீர்ப்பிற்காக வாய்தா போடப்பட்டுள்ளது.

மேலும் கொல்லப்பட்ட கல்லுமண்டையன் என்ற முருகனின் தாயார் திருமதி.குருவம்மாள் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓர் எழுத்துப் பூர்வமான புகார் மனுவை அந்தச் சம்பவங்கள் நடந்த 16.02.2010 ஆம் தேதியன்றே அனுப்பி வைத்தார். அதில் அவர் "கடந்த 13.02.2010 அன்று நள்ளிரவு (14.2.2010 அதிகாலை) சுமார் 12.30 மணிக்கு, பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த சீருடை அணியாத 6 காவல் அதிகாரிகள் என் வீட்டிற்கு வந்து ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய வேண்டுமெனக் கூறி உன் மகன் எங்கே எனக் கேட்டு என்னை என் வீட்டில் வைத்து அடித்துச் சித்திரவதை செய்து என்னையும், என் தங்கை சுந்தராம்பாள் மகன் மணி, எனது மருமகன் அருளானந்தம் (எ) செல்வம், என் பேரன் கலைவேந்தன், என் மகள் தனலட்சுமி ஆகியோரை மேற்படி காவல் துறையினர் கிரைம் பிராஞ்ச் வளாகத்தில் உள்ள உதவிக் காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து அடித்துச் சித்திரவதை செய்தனர். அதன் பின்பு எங்களை காவல் துறை வண்டியில் ஏற்றி காரியபட்டி அருகில் உள்ள திம்மாபுரத்திற்கு அழைத்துச் சென்றனர்.

14.2.2010 அன்று காலை சுமார் 10.00 மணி வரை எங்களையும் என் அக்காள் மகன் மலைச்சாமியையும் திம்மாபுரம் பிறகரைக்காட்டிலும் மற்றும் வேனிலும் வைத்து அடித்துச் சித்திரவதை செய்தனர். மேலும் வாய் கூசும் அளவிற்குக் கெட்ட வார்த்தைகளால் திட்டி, எங்கள் அனைவர் மீதும் கஞ்சா கேஸ் போடுவதாக மிரட்டினார்கள். காரியாபட்டி, புளியங்குளம் அருகே உள்ள திம்மாபுரத்தில் என் மகனைக் கைது செய்த பிறகு எங்கள் அனைவரையும் தெற்குவாசல் காவல் நிலையம் முன்பு இறக்கி எங்கள் அனைவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டார்கள். 14.02.2010 அன்று முதல் என் மகனைக் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தனர்" என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் புகார் மனு மாண்புமிகு ஆணையத்தால் கோப்பிற்கு ஏற்கப்பட்டு, SHRC:No.1144,1451 & 2154 of /2010/C-3 என்று எண்ணிடப்பட்டு 1.திரு.வெள்ளதுரை (காவல்துறை உதவி ஆணையாளர்), 2.திரு.தென்னரசு (சார்பு ஆய்வாளர்), திரு.கணேசன் (தலைமைக் காவலர்) 4.திரு.ரவிந்திரன் (காவலர்) ஆகியோர் மீது விசாரணை நடைபெற்றது. திருமதி. குருவம்மாள் சார்பில் வழக்கறிஞர் திரு.சின்னராசா தலைமையில் மக்கள் கண்காணிப்பகத்தின் வழக்கறிஞர்கள் திரு.க.சு.பாண்டியராஜன், திரு. முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி அந்த வழக்கை நடத்தினார்கள். எழுத்துப் பூர்வமான வாதுரை தாக்கல் செய்யப்பட்டு, இவ்வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

மேலும், இந்த போலி என்கவுண்டர் சம்பவத்தில் கொல்லப்பட்ட கல்லுமண்டையன் என்ற முருகனின் உடன்பிறந்த அக்காவான தனலட்சுமி தனது தம்பி கல்லுமண்டையன் என்ற முருகன் கொள்ளையடித்துத் தந்த நகைகளை வைத்திருந்ததாக அவர் மீதும், பழிவாங்கும் நடவடிக்கையாக மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் ஏற்கனவே போடப்பட்ட ஒரு திருட்டு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு மாண்புமிகு மதுரை 5 ஆம் எண் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து (வழக்கு எண் சிசி.எண்.243/2010), அதில் அவர் குற்றவாளி அல்ல என்று அம் மாண்புமிகு நீதிமன்றத்தால் கடந்த 05.04.2014 ஆம் தேதியன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரு.வெள்ளதுரை அவர்கள் தொடக்கத்தில் காவல் துறையில் பணியில் சேரும் பொழுது ஒரு சார்பு ஆய்வாளராக தான் பணியில் சேர்ந்தார். அவர் சார்பு ஆய்வாளராக 1999 ல் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது - கோசி ஜின்னாவை என்கவுண்டரில் கொலை செய்தார். அயோத்திகுப்பம் வீரமணியை சுட்டு என் கவுண்டரில் கொன்றார். சந்தன மரக்கடத்தல் வீரப்பனை தேடும் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த அதிரடிப் படையில் அவர் இடம் பெற்றிருந்த போது தான் சந்தன மரக் கடத்தல் வீரப்பனை என்வுண்டரில் சுட்டுக் கொலை செய்தார். மேலும் வீரப்பனின் கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன் சந்திரகவுடா சேதுமணி ஆகிய நால்வரையும் என் கவுண்டரில் சுட்டுக் கொன்றதும் திரு. வெள்ளதுரை தான். இந்த என்கவுண்டர்களை பாராட்டும் விதமாக திரு.வெள்ளதுரை அவர்களுக்கு இரட்டை பதவி உயர்வை அன்றைய தமிழ்நாடு அரசு வழங்கியது. இதன் மூலம் சார்பு ஆய்வாளராக இருந்த திரு. வெள்ளதுரை அவர்கள் DSP யாக பதவி உயர்வு பெற்றார். அதன் பிறகு ஏதாவது ரவுடிகளை என்கவுண்டர் மூலம் கொல்ல வேண்டும் என்றால் அதைச் செய்வதற்காக திரு. வெள்ளதுரை அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது தமிழ்நாடு அரசின் வாடிக்கையாக மாறியது.

இந்நிலையில், கடந்த 27.10.2012 ஆம் தேதியன்று மானாமதுரை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த திருப்பஞ்சேத்தி உதவி ஆய்வாளர் ஆல்வின்சுதன் கொலை செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் திரு. வெள்ளதுரை மானாமதுரைக்கு DSP-யாக அரசால் நியமிக்கப்பட்டார்.பின்னர் அந்த ஆல்வின் சுதன் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆல்வின்சுதன் கொலையிலும் மதுரை பொட்டு சுரேஷ் கொலையிலும் சம்மந்தப்பட குற்றவாளிகளான பாரதி மற்றும் பிரபு இருவரையும் எண்கவுண்டர் செய்ததும் திரு. வெள்ளதுரைதான். அந்த என்கவுண்டர் கொலைகள் திரு. வெள்ளதுரை அந்த காவல் சரகத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னரே நடந்தவை.

10.02.2010 ஆம் தேதியன்று, தினத்தந்தி நாளிதழில், சென்னை காவல்துறை ஆணையர் திரு.ராஜேந்திரன் அவர்கள் தமிழக "ரவுடிகளை" "வேட்டையாடும்" புதிய உத்தியை அறிவித்துள்ளதாக ஒரு செய்தியை வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் செய்தி அறிக்கையில், போலீசார் 2,340 "ரவுடிகளை" ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு குழுக்களாக வகைப்படுத்தியுள்ளனர் என்றும், தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி திரு.ராதாகிருஷ்ணன், இந்த திட்டம் சென்னைக்கு மட்டும் அல்ல, தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார் என்றும். மேலும் தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்க ரவுடிகள் பட்டியல் தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளதாக ஏடிஜிபி திரு.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளதை, கவியரசு மற்றும் கல்லுமண்டையன் என்ற முருகன் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்ட இந்த என்கவுன்டர்கள் நடந்த காலச்சூழ்நிலையுடன் சேர்த்து இணைத்துப் பார்த்து புரிந்து கொண்டால், இவை திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகள் என்பது தெளிவாகப் புரியும்.

 2010 ஆம் ஆண்டில் போலி என்கவுண்டரில் தன் மகனை இழந்த திருமதி.குருவம்மாள் அப்போதிருந்து கடந்த 12 ஆண்டுகளாக தன் மகனது கொலைக்காக நீதி கேட்டு நீதிமன்றங்களுக்கு அலைந்து வருகின்றார். அவரது இந்தப் போராட்ட பயணத்தில் முதல் நாளிலிருந்து மக்கள் கண்காணிப்பகம் அவருக்கு ஆதரவாக அவருடன் நின்று வருகிறது. தொடர்ச்சியான 12 ஆண்டு கால கடுமையான போராட்டத்திற்கு பின் தற்பொழுது நல்ல தீர்ப்பை மாண்புமிகு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில் கீழ்க்கண்ட பரிந்துரைகளை தமிழ்நாடு மாநில அரசுக்கு வழங்கியுள்ளது.

RECOMMENDATIONS (Page No. 23 & 24)

“(a). The Additional Chief Secretary to Government, Home Department, Secretariat, Chennai shall make a compensation of Rs.3,00,000 /- (Rupees Three Lakhs Only) to the complainant Tmt. Guruvammal and Rs.3,00,000/- (Rupees Three Lakhs Only) to the complainant Tmt. Seethalaks hmi within four weeks from the date of receipt of this order.

(b). After making such payment, the Additional Chief Secretary to Government, Home Department, Secretariat, Chennai mnay recover a sum of Rs.3,00,000/- (Rupees Three Lakhs only) from the 1* Respondent Thiru. s. Vellaidurai; and may recover a sum of Rs.1,50,000/- (Rupees One Lakh Fifty Thousand only) each from the 3rd and 4th Respondents i.e. Thiru. Thennarasu and Thiru. Ganesan, as per rules.” என்று பரிந்துரைத்துள்ளது. மேலும், அந்தத் தீர்ப்புரையில் மாண்புமிகு ஆணையம் கீழ்க்கண்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.

15. During the cross examination, the Respondents' answers are very vague, and they often stated that they" don't know "or that "they don't remember". It is not a regular event to be in an encounter where two persons are shot, and they die. The respondents are not likely to forget the happenings of the day. It is not acceptable that the respondents give vague or irresponsible answers. (Page No. 14)

16. This commission also observes, that the hospital records show that the injuries were certainly not brutal or grievous. It is not the Commission's opinion that the respondents should have reacted only after a grievous injury, but, according to their deposition, there were four Policemen present, including R3, R4, other than R1 and his driver. The victims, according to the deposition of the Respondents were riding a two-wheeler and that they fell off the vehicle. This Commission observes that, if two persons who had fallen from a moving vehicle cannot be apprehended by at least five police persons who were present at the scene, it does not speak well of their preparedness or efficiency, and it also raises doubts about the credibility of the whole deposition. (Page No. 14)

19. Though the alleged shooting has taken place in a busy area that too at the mid of the day, no eyewitnesses have come forward to speak about the fact that they saw the deceased assaulting the police and the 1st Respondent as a matter of self-defense had shot them dead in order to protect themselves. In fact. the 1st Respondent admits in his cross examination, that the area where the incident took place has several residential houses and shops but was unable to produce even any witnesses on his side. (Page No. 15)

20. It is not know whether the postmortem conducted by the doctors on the deceased body had been videography since the same have not been produced before this Commission by the respondents though the honourable Apex Court had made it mandatory that such postmortem's have to be necessarily video graphed, here there is no mention of the same. It would have been very useful to this commission had they produced the same for consideration. In fact, one of the grievances of the P.W.2 is that she has not been furnished with a copy of the postmortem report of her son despite several letters to the hospital authorities. (Page No. 16)

21. Further it is not known as to why the 1st Respondent was waiting for the arrival of an ambulance or a police van to remove the injured when he had his own vehicle. The 1st Respondent could have rushed the 2 bullet injured persons immediately to the hospital but says that a patrol vehicle came and took them. (Page No. 16)

22. It is also unbelievable to note that the 1st Respondent, who was then an Asst. Commissioner of Police Madurai City was asked to do patrol duty and at that time he saw two other policemen doing vehicle checks, at Ramanathapuram Road check post. But in the FIR in Cr.No.244 of 2010 in which the 1st Respondent is the 1st informant, he states that he was doing vehicle check at Ramanathapuram Road Check Post along with police party. No documentary evidence as to the work going on at the check post on the said day has been given, such as the total number of Police persons posted there, as to how busy the police persons were, number of vehicles present at the time of the incident, or as to how many vehicles were detained by them at that point, prior to this episode. This is a very crucial link for the Respondents to prove that they were really indulging in vehicle check on the specified date and time. The Respondents are not even able to cite a single case to say that the said person was detained in the vehicle check and that he was a witness to the whole incident. The 1t Respondent in his cross-examination states that he was present for half an hour at the check post. When questioned as to how many vehicles were checked he states that he does not remember and can answer only after seeing the vehicle check register. (Page No. 16 & 17)

23. In his cross examination RW1 states that he knows very clearly as to what are the precautionary measures that are to be taken prior to using a firearm. When questioned specifically whether he cautioned the deceased persons that he would shoot them he says he had. However, in the FIR in Cr.No.244/20 10 which was given on the same day of the incident, nowhere has he stated that he cautioned the deceased persons that he would fire upon them if they indulged in assault. (Page No. 17)

24. The 1st Respondent admits that he has so far committed 4 deaths in encounters. It is not known as to why most number of notorious criminals are being shot dead by the 1t Respondent in the state. The lst Respondent's acknowledgement of having committed encounters before, where the criminals had died, should not be a matter of pride. Stating that the deceased are notorious criminals would not absolve the police from their liability enforcing officer can pass a death sentence which 1s the prerogative of the judiciary. It is the duty of the police to bring them before the criminal jurisprudence system and get appropriate punishment. (Page No. 17)

25. It is seen that both the dead persons are only property offenders and not persons who had indulged in violent crimes. There have been many cases for which they have been booked, but not even one case, when they have assaulted a single member of the general public, and this raises doubts as to whether they would dare to assault a member of the police force. Further, it is admitted by the police, that as on the day of killing there were no arrest warrants against the dead persons and all the cases are pending trial in the jurisdictional court of law and that they are facing trial. (Page No. 18)

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 12 ஆண்டுகளாக திருமதி.குருவம்மாள் ஆஜராகி இவ்வழக்கை சிறப்புடன் நடத்திய மூத்த வழக்கறிஞர் திரு.சின்னராசா அவர்கள் தலைமையிலான வழக்கறிஞர்கள் திரு.க.சு.பாண்டியராஜன், திரு.சதீஷ் ராஜ்குமார், திரு.நாகேந்திரன், திரு. முத்துகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு மக்கள் கண்காணிப்பகம் தனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு இதுவரை திரு.வெள்ளத்துரை அவர்கள் செய்த என்கவுண்டர் கொலைகள் தொடர்பான வழக்குகளை மறுவிசாரணைக்கு உட்படுத்தி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.

Pin It