நந்த குமார் என்ற இயற்பெயர் கொண்ட தோழர் தமிழ்க்குமரன் பள்ளிப்படிப்பை முடித்து ஆசிரியர் பயிற்சியை முடித்து 1975 ஆம் ஆண்டு குடியாத்தம் அருகில் உள்ள காக்காதோப்பு, இராசன்பட்டியில் உள்ள பாரதி நிதி உதவி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

 இவரது குடும்பமே திராவிடர் கழகத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டதால் இயல்பாகவே இவரும் இயல்பாகாவே தந்தை பெரியாரின் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டார்.

 தனது தாய் மாமா ஒருவர் அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு போன்ற நாடகங்களை நடத்திவந்தார். அதில் இவர் கதையின் நாயகனாக எவ்வளவு நீளமான வசனங்களையும் திறமையாக பேசி நடிக்கும் ஆற்றல் உள்ளவராக தோழர் தமிழ்க்குமரன் திகழ்ந்தார். எல்லோரும் இந்த திறமை குறித்து பாராட்டும் அளவிற்கு இவரது மேடை நாடகம் இருந்ததோடு, இந்த பகுதியில் நடைபெற்று வந்த தெருக் கூத்துகளை மேடை நாடகத்திற்கு மாற்றி அறிமுகப் படுத்தியது இவரே என்பது பலரும் அறியாத புதிய தகவலாகும்.

 thamizhkumaranநாடக நடிப்பு, தபேலா வாசிப்பது, ஓவியம் வாரைவது, பறை வாசிப்பது, கவிதை, கட்டுரைகள் எழுதுவது, மேடைப்பேச்சு என பல திறமைகளை கொண்டு விளங்கிய தோழர் தமிழ்க் குமரன். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போட.... தமிழக மக்களிடம் இருந்த இயல்பான ஈழ ஆதரவு நிலையை ஒழித்துக் கட்ட திட்டமிட்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் சர்வதேசிய சதி, சுப்பிரமணிய சாமி, சந்திரா சாமி, நரசிம்மராவ் உட்பட யார் பக்கமும் விசாரணை திரும்பாமல் தமிழ் நாட்டு தம்ழிகர் 13 பேர் ஈழத்து தமிழார்கள் 13 பேர் என வழக்கு ஜோடிக்கப்பட்டு ராஜீவ் கொலை வழக்கு திட்டமிட்டு புனையப்பட்டபோது இது தமிழ் மக்களின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால்.

 இது ஒரு அரசியில் ரீதியிலான படுகொலை என விசாரிக்கப்படாமல் தமிழ் இனத்தின் மீது திட்டமிட்ட ஒடுக்கு முறையாக இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டு தமிழ் மக்கள் 26 பேர் மீது போடப்பட்ட அப்பட்டமான பொய் வழக்கை தமிழக மக்களாகிய நாம் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என பழ.நெடுமாறன் தலைமையில் 80 க்கும் மேற்பட்ட தமிழ் தேசிய அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு “ 26 தமிழர் உயிர் காப்பு குழுவில்” வேலூர் மாவட்ட செயலராக தமிழ் நாடு மார்க்சிய லெனினிய கட்சி சார்பில் பணிபுரிந்தார்.

 கட்சி சார்பில் நிதி திரட்டி அய்யா பழ நெடுமாறன் அவர்களிடம் தருவதற்கு தனது மாவட்டத்தில் தனது பங்களிப்பை திறன்பட செய்தார்.

 தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி பணித்த பணிகள், கட்சி பணித்த பகுதிக்கு செல்லவும், செய்யவும் தன்னை முழுமையாக கட்சிக்கும்,ல் மக்களுக்கும் ஒப்புக்கொடுத்த மக்கள் தொண்டனாக இறுதிவரை கொள்கை பிடிப்புடன் திகழ்ந்தார்.

 இவரால் உருவாக்கப்பட்ட சில தோழர்கள் வள்ளலார் வழி, வேதாத்திரி வழி என சீரழிந்த பொது மார்க்சியமே மனிதகுல விடுதலைக்கான தத்துவம் என்பதையும் பெரியாரின், அம்பேத்கரின் சமூக நீதி கொள்கைகள் இன்னமும் சமூகத்த்சில் வரலாற்று வழியில் உள்வான்காப்பட வேண்டிய தேவை இருப்பதையும் கட்சி தெளிவுபடுத்தியோது உணர்ந்து கொண்ட தோழர் தோழர் தமிழ்க்குமரன் கட்சியின் திசைவழியை உறுதியாக பற்றி நின்ற எளிய தொண்டனாக வாழ்ந்தார். அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய பாதையில் தான் சமூகத்தை போராட்டப் பாதையில் சனாதனத்தை வீழ்த்தமுடியும் என்பதையும் வள்ளலார் பாதை , வேதாத்திரி பாதை வர்க்க சமரசப் பாதை என்பதையும் தோழர் எளிமையாக மக்களிடம் எடுத்துக் கூறினார்.

 1980 களில் திருப்பத்தூர் நகரில் மா.லெ இயக்கங்கள் மீது ஈடுபாடு கொண்டார். இந்த காலத்தில் மா.லெ. இயக்கங்கள் மீது வடாற்காடு, தருமபுரி மாவட்டப் பகுதியில் கடுமையான ஒடுக்குமுறையை எம்.ஜி.ஆர் ஆட்சியில் தேவாரம் தலைமையில் மேற்கொண்டது. அந்த நேரத்தில் பலர் 124 A வழக்கில் பலர் கைதாகினர். அதில் தோழர் தமிழ்க்குமரன் அவர்களும் கைதானார். 31 நாட்கள் வேலூர் மத்திய சிறையில். அடைபட்டு இருந்த தோழர் அதை வைத்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதால் அதை வாயுப்பாக வைத்தே தன் வாழ்வை மக்களுக்காக, புரட்சிக்காக முழுமையாக ஒப்படைக்க பயன்படுத்திக் கொண்டார்.

 1981 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் ) கட்சி தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி { புதிய ஜனநாயகம் குழு ) தனது தவறான சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளுக்கு தத்துவார்த்த ரீதியிலான வகையில் சிக்கலை தீர்க்காமல் துரோக தனமாக அமைப்பை பிளவு படுத்தியபோது தோழர் கார்முகில் தலைமயிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் ) தமிழ் நாடு அமைப்பு கமிட்டின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டு தன்னை இந்த அமைப்பில் இணைத்துக்கொண்ட்டார். இந்த கட்சி பின்னர் 1992 இல் தமிழ்நாடு மார்கிச்ய லெனினிய கட்சியாக மாறியபோதும் அதன் கொள்கைககளை உள்வாங்கி பரப்புரை செய்யும் அதன் முழு நேர ஊழியராகவே தொடர்ந்தார்.

 கட்சி முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் முன்னணியில் நின்று பணியாற்றினார். 1980 இல் புரட்சிகர இயக்கங்கள் மீதான காவல்துறை மேற்கொண்ட கொலை வெறியாட்டத்தை ஆய்வு செய்ய சுவாமி அக்னிவேஷ், நீதிபதி தார்குண்டே, கோவிந்த் முகோட்டி, ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு தமிழ்நாடு வந்த பொது அவர்களை குடியாத்தம் முதல் திருப்பத்தூர் வரை அழைத்து செல்லும் குழுவில் தோழர் தமிழ்க் குமரன் இணைந்து செயல்பட்டார்.

 1980 முதல் தான் மரணமுறும் 2022 மே மாதம் வரை கட்சி முன்னெடுத்த ஈழ விடுதலை ஆதரவுப் போராட்டங்கள் உட்பட, அமெரிக்காவின் ஆப்கன், குவைத், மீதான ஆக்கிரமிப்பு யுத்த எதிர்ப்பு இயக்கங்கள், பெரு நாட்டு புரட்சி தலைவர் கண்சொலா விடுதலைக்கான இயக்கம், பாசிச ஜெயலலிதா பாவலர் ஏறு பெருஞ்சித்திரனாரை சிறையில் அடைத்தபோதும், வரலாற்று ஆய்வாளர் பேராசியர் நெடுஞ்செழியன் விடுதலைக்கான இயக்கத்தின் போதும், உழைக்கும் மக்களை ஓட்ட சுரண்டும் சாராம் மற்றும் போதை பொருள்களை ஒழிப்பதற்கான இயக்கங்கள், எட்டாம் உலக தமிழ் மாநாடு கொள்ளைக்கும் விளம்பரத்திற்கும் தான் ஜெயலலிதா நடத்துகிறார் என பெருஞ்சித்திரனார் தலைமையில் நடந்த எதிர்ப்பு இயக்கம் தமிழ வழி கல்விக்கான இயக்கம் உட்பட தமிழ்த் தேசிய ஒடுக்குறைகளை கண்டிக்கும் அனைத்து போராட்டங்களிலும் முன்னணியில் நின்று தோழர் தமிழ் குமரன் செயல்பட்டார்.

 தனக்கென தனிப்பட்ட வாழ்வை அமைத்துக் கொள்ளாமல்... கட்சிக்காக.... மக்களுக்காக இறுதிவரை எளிய மக்களை தொண்டனாக தோழர் தமிழ்க்குமரன் எந்த நேரமும் எவருக்கும் அவர்களது தேவை அறிந்து அறிவை , அரசியலை, பண்பை விதைத்துக் கொண்டே இருந்தார். புரட்சியின் மீது, தமிழ்நாட்டு விடுதலை மீது மாளா பற்று கொண்டு இருந்த தோழர் தமிழ்க்குமரன் இறுதி நிகழ்வு அவரது கொள்கை வாழ்வை பறை சாற்றும் விதமாக எவ்வித சடங்கும் இன்றி குப்பம் மருத்துவக் கல்லூரிக்கு இரு கண்களும், உடலும் தானமாக கொடுக்கப்பட்டது...

 விண்ணதிர அவரது கொள்கைகளை முன்னெடுக்க அவரது கொள்கை வாரிசுகள், அவர் முழு நேரமாக பாடுபட்ட அமைப்பை சார்ந்த புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்கள் முழங்கி அந்த கொள்கைக்காக வாழ்ந்த மக்கள் போராளியை வழி அனுப்பி வைத்தனர்.

புரட்சியாளர் தோழர் தமிழ்குமரன் கனவை நனவாக்க பாடுபடுவது ஒன்றே அவரது வாழ்விற்கு நாம் தரும் உண்மையான அங்கீகாரமாக இருக்கமுடியும்!

- வெற்றிச்செல்வன், போளூர்

Pin It