பெற்றோரின் அலட்சியமா?

sujith in holeஆழ்துளை கிணறு முன்பே மூடப்பட்டு இருந்தது. மழையின் காரணமாக மண் இறங்கி குழி மீண்டும் உருவாகி விட்டது. குழி இருப்பது தெரிந்தால் எந்தப் பெற்றோரும் அலட்சியமாக இருந்திருக்க மாட்டார்கள். சரியாக குழியை மூடாமல் கவனக் குறைவாக இருந்தார்கள் என்று சொல்லலாமே தவிர, பெற்றோரின் முழு அலட்சியம் என்று குறை கூற முடியாது.

அரசு செயல்பாடு மோசமா?

இந்தியாவில் இது போன்ற சம்பவம் எங்கு நடந்து இருந்தாலும், அரசு இவ்வளவு அக்கறையுடன் செயல்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை. நமது அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் இறுதி வரை அங்கேயே முகாமிட்டு இருந்தார்கள். பொது மக்கள் கூட தீபாவளி கொண்டாட்டத்தை தியாகம் செய்து குழந்தையை மீட்கும் பணிகள் செய்து வந்தனர்.

பாடம் என்ன?

அறிவியல் கொள்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கான பாடம் இது. அறிவியல் வளர்ச்சியின் பயன்கள் அடித்தட்டு மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

ஆனால் என்ன நடந்தது? ஆழ்துளை கிணற்று மரணங்கள் தொடர்ந்து நடந்த போதும் கூட இதுவரை, இது போன்ற விபத்துகளில் சிக்கும் குழந்தைகளைக் காப்பாற்றும் கண்டுபிடிப்புகளை நாம் உருவாக்கவில்லை.

அதுமட்டும் அல்ல, தினம் தினம் நடைபெறக் கூடிய மலம் அள்ளும் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள் போன்ற பணிகளிலும் கூட இன்னும் மனிதர்களை பயன்படுத்தும் அவலமும் தொடர்ந்து வருகிறது.

26 அடியில் இருந்த குழந்தையைக் கூட காப்பாற்ற இயலாத அளவில் தான் நம் அறிவியல் முன்னேற்றம் இருப்பதை நாம் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டு, அறிவியல் பயன்பாடுகளை மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் உருவாக்குவதே சுஜீத்துக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். 

- மேட்டுப்பாளையம் மஸ்தான்

Pin It