kanchi templeபட்டை பெரிசா? நாமம் பெரிசா? என்று போட்டி போட்டபடியால் சிவன் கோஷ்டி 8000 வைணவ கோஷ்டிகளை கழுவில் ஏற்றிய வரலாறு நாம் படித்தது தானே...

சிவகாஞ்சி என்ற பெரிய காஞ்சிபுரம், விஷ்ணு காஞ்சி என்ற சின்ன காஞ்சிபுரம் என்று இரண்டு உள்ளது போல அத்திவரதருக்கும் பல வரலாறு உண்டு.

அத்தி + கிரி + வரதர் = அத்திகிரிவரதர்

அத்தி = யானை; கிரி = மலை

யானை வடிவிலான மலை மேல் அமர்ந்தவன்..

வரலாறு ஒன்று:

முஸ்லிம் மற்றும் புத்த பிட்சுகளுக்கு பயந்து சோழர்கள் ஆட்சியில் காஞ்சிபுரத்திலிருந்து பாடலிபுத்திரத்திற்கும், திருச்சிக்கும் சிலைகளை கொண்டு போய் பாதுகாத்தனர்களாம், அப்படி போகும்போது தங்களுக்கு *அனைத்தையும்* தந்து சேவை செய்த தேவரடியாள்களை (தேவதாசின்னு சொன்னா எச்ச ராசாவுக்கு கோபம் வந்துடும்) அம்போவென்று விட்டுச் சென்றுள்ளனர்.

தேவரடியாள்களில் ஒருவரான 'அமிர்தவல்லி' தன்னுடைய பெருமாளை நினைத்து உருகி வரதராஜ பெருமாள் கோவில் குளக்கரையில் இருந்த அத்திமரக் கிளையில் பெருமாளை சிலையாக செய்து வழிபட்டு வந்துள்ளார்.

முஸ்லிம்/புத்த பிட்சுகளுக்கு பயந்து பெருமாளை புஷ்கரத்திற்குள் (தண்ணீரில்) ஒழித்து வைத்து விட்டார்களாம்; பின்னர் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் மீண்டும் சன்னதியில் வைத்தனராம் ஸ்ரீதேசிகரும் தேவராஜபட்டரும்.

ஆக மன்னனும், பூஜை செய்பவனும் எதிரியின் வாளுக்குப் பயந்து ஓடி ஒழிந்துள்ளார்கள். யாரும் நம்ம கடவுள் நம்மளைக் காப்பாற்றுவார் என்று பூஜையறையில் உட்காரவில்லை.

வரலாறு இரண்டு:

இதில் இரண்டு உட்பிரிவும் இருக்கு...!?

ஆனா விசயம் லட்சுமியா.. சரஸ்வதியா இதில் யார் உயர்ந்தவர் என்பதைத் தீர்க்க முடியாம இந்திரனிடம் ஒரு தடவையும், பிரம்மனிடம் ஒரு தடவையும் பஞ்சாயத்துக்குப் போய் அங்கும் தீர்க்க முடியாம பஞ்சாயத்து பேசிய இந்திரனும், பிரம்மனும் பட்ட வேதனையும் அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்ற கிளைமாக்ஸ் தான் அத்திவரதர் உபயம்.....

அந்தக் கதை 'A' சான்றிதழ் பெற்றதால் நானும் எழுத முடியாது.

பிரமனின் படைப்புத் தொழிலுக்கு தேவையான முக்கிய ஆயுதத்தையே வெட்டி எடுத்துக் கொண்டு ஓடிய சரஸ்வதியை மடக்கி (அஷ்வமேத யாகம் நடத்தி) பிரம்மனையே காப்பாற்றிய அத்திகிரிவரதரைக் காண சரஸ்வதிகளும், பிரம்மன்களும் இன்று காஞ்சிபுரத்தில் அலைமோதுகிறார்கள்..

ஆனால் யாகத் தீயிலிருந்து வந்த அத்திவரதப் பெருமாளுக்கு *சூடு* தாங்க முடியாததால் தன்னை L&T அல்லது சூயஸ் கம்பெனிக்காரனிடம் தண்ணீர் வாங்கி குளிர்விக்கச் சொல்லியுள்ளார்...

athi varatharஅவர்களிடம் காசு கொடுத்து தண்ணி வாங்க முடியாத தேசிகர்கள், பட்டர்கள் அத்திவரதரிடம் முறையிட வரதர், "போங்கடா நீங்களும் உங்க பக்தியும் என்று 'தீ'ன் சூட்டை தணிக்க 'அனந்த சரஸ்' குளத்திற்குள் (புஸ்கரணி) ஓடி படுத்துக் கொண்டார்.

அய்யய்யோ இனி யாரை வைத்து பூஜை செய்து மணி ஆட்டுவது என்று வருத்தத்துடன் இருந்த உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்க பிரதமர் மோடி அன்று இல்லாததால், அத்திவரதரே கனவில் வந்து என்னை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எடுத்து உங்களுக்கு பொன்னும், பொருளும், பணமும் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி மறைந்தாராம்.

பெண்களை (தேவதாசிகளைக்) கொண்டு பிறரை மடக்குவதை மன்னர்கள் முதல் பார்ப்பனர்கள் - தேசிகர் - பட்டர் - ஆச்சாரியர்கள் வரை அனைவரும் செய்துள்ளனர். அது அன்று அத்திவரதர் வரை நீண்டுள்ளது.... இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி வரையும் உள்ளது.

ஆண் கடவுள், பெண்கடவுள் இருவருக்குமிடையே நடக்கும் சண்டை கடைசியில் ஆண் கடவுள் வெற்றி பெறுவதாக முடிவது அம்புட்டு தான் கடவுள் வரலாறு..

(ஆதியில் ஸ்ருஷ்டியை மேற்கொண்ட பிரம்ம தேவன் தனது காரியங்கள் செவ்வனே நடைபெற ஒரு யாகம் மேற்கொண்டார். யாகத்திற்கு சரஸ்வதி தேவியை அழைக்காததால், துனைவி இல்லாமல் யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதால் காயத்திரி, சாவித்திரியை (அவங்க யாரா..?) வைத்து யாகத்தை முடிக்க எண்ணினார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மர் தேவர் மீது கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மனின் யாகத்தை அழிக்க வேகவதி ஆறாக உருமாறி யாகத்தை நோக்கி வந்தாள்.

பிரம்ம தேவனின் யாகத்தைக் காப்பாற்றும் பொருட்டு பெருமாள், சயனம்/ படுத்துக் கொண்டு நதியைத் தடுத்து பிரம்மனின் யாகத்தைக் காப்பாற்றினார்.)

மேலும் 'அமிர்தவல்லி' என்ற தேவதாசியே அத்திமர வரதனை உருவாக்கியுள்ளார்.

குறிப்பு: மேற்கூறிய தகவலை நான் சொல்லவில்லை... காஞ்சிப் புலவர் C.E.S.பெருமாள் அவர்கள் தனிப்புத்தகமாகவே 1978ல் எழுதியுள்ளார். 1979ல் ஏற்கனவே அத்திவரதர் குளத்திலிருந்து வெளியே வந்துள்ளார்.

அடுத்து 2059 ல் வருவாரா..?

பொறுத்திருந்து பார்ப்போம்..! அதற்குள் புதிய ஜனநாயகப் புரட்சி வராமல் இருக்கனும்.

- தருமர்

Pin It