மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று அடித்துக் கொல்லும் பழக்கம் இங்கு வரை வந்து விட்டது. ஆனால் வடநாடு போல தமிழ்நாட்டில் அவர்கள் ஆரம்பித்தார்கள் என்றால் அவர்களுக்கு மிகப்பெரிய அடி கிடைக்கும் என்பது அவர்களுக்கே தெரியும்.
நான் மாடு மாடாய் இருந்தவரையிலும் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை. எப்போது நீங்கள் மாட்டினை போலித்தனமாக தெய்வமாக்கி அதன் பெயரில் கொலை செய்ய ஆரம்பித்தீர்களோ அப்போதிருந்து மாட்டுக்கறி சாப்பிடுகிறேன்.
மாட்டின் மீது அவ்வளவு கடவுள் பக்தியிருந்தால் மாட்டினை உண்மையிலேயே அவர்கள் தாயாக கருதினால் தனது தாயை ஏற்றுமதி செய்யும் ஒரு கூட்டத்திற்கு ஏன் ஓட்டு போட்டு பதவியில் ஏற்றியிருக்கின்றார்கள்.
மாட்டுக்கறியை தின்னுங்கள் , முகநூலில் போடுங்கள், திருவிழா நடத்துங்கள். மாட்டுக்கறி சாப்பிட்டதால் ஒரு கூட்டம் அடிக்கிறது என்றால் மாட்டுக்கறி ஏன் சாப்பிடவில்லை என்று அதே கூட்டத்தை திருப்பி அடியுங்கள் ஆனால் பிரச்சனை மாட்டுக்கறி அல்ல.
உண்மையில் மாட்டுக்கறியை தடை செய்ய வேண்டும் ,மாடுகளை பாதுகாக்க வேண்டும், மாடுதான் கோமாதா, மாடுதான் கடவுள், என்கிற அழுத்தமான நம்பிக்கை அவர்களுக்கு இருந்திருந்தால், அவர்கள் உலகத்திலேயே மாட்டுக்கறி ஏற்றுமதியில் மூன்றாவதாக விளங்கும்.
அவர்களின் கடவுகளை வெட்டி அழகாய் பேக் செய்து மாடுகளின் உடல் பாகங்களை ஒவ்வொரு வகையாக பிரித்து ஏற்றுமதி செய்யும். இந்தியாவை விட்டு அவர்கள் வெளியே செல்ல வேண்டும். உலகத்தில் உள்ளவர்கள் சாப்பிடும் மாட்டுக்கறியில் 20 சதவிகிதம் இந்தியாவில் இருந்து செல்வதுதான்.
மாட்டுக்கறி சாப்பிட்டதால் அடிபட்டு செத்துப்போன இந்துக்களை கிறித்துவர்களை அடையாளம் காட்ட முடியுமா?
மாட்டுக்கறி பரிமாறியதால் தாக்கப்பட்ட இந்து ஹோட்டல் உரிமையாளர்கள் சிப்பந்திகள் என்று எங்கேனும் ஒரு தகவல் வந்திருக்குமா?
நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள். இந்துத்வ தீவிரவாதிகளின் ஒற்றைச் சித்தாந்தத்தின் இஸ்லாமிய படுகொலைகள்:
2014-2019 மாட்டுப் போர்வையில் நடந்த இனப்படுகொலைகள்
=======================================
2012 ல் 5 வது இடத்தில் இருந்த மாட்டுக்கறி ஏற்றுமதி இப்பொழுது 3 வது இடத்திற்கு மாடுகளை பாதுகாக்கும் பாஜக ஆட்சியில் உயர்ந்ததுக்கு காரணம் யார்?
2014-15, மாட்டிறைச்சி ஏற்றுமதி 14,75,540 மெட்ரிக் டன்னாக இருந்தது - இது கடந்த 10 ஆண்டுகளில் மிக உயர்ந்தது. குறிப்பாக முகம்மது அக்கல் அடித்துக் கொல்லப்பட்ட 2015 ம் ஆண்டுதான் இந்தியாவின் மாட்டுக்கறி ஏற்றுமதி 29,282 கோடியை எட்டியது.
2016ஆம் ஆண்டு மட்டும் 1,850,000 மெட்ரிக் டன்களை மாட்டிறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. பிரேசில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து மாட்டுக்கறி ஏற்றுமதி செய்வதில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.
2026 வரை 1.93 மில்லியன் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது என ஐக்கியநாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயக் கழகம் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2014
====
அக்டோபர் 7, 2014 குஜராத்: தாபல் கிராமத்தில் உள்ள நவி நாக்ரி தெருவில் காவலர்களும் இந்துத்வ பசுத் தீவிரவாதிகளும் சேர்ந்து ஆட்டுக்கறி கொண்டு சென்று கொண்டிருந்த, முஸ்லிம் இளைஞனை கைது செய்ததால் முஸ்லிம்களுக்கும் காவலர்கள் மற்றும் இந்துத்வ பசுத் தீவிரவாதிகளுக்கும் மோதல் நடந்தது.
அக்டோபர் 8, 2014 பீகார்: பக்ர்-ஈத் நிகழ்வில் மாட்டிறைச்சி தொடர்பான பிரச்சினையில் இஸ்லாமியர்களுக்கும் - இந்துக்களுக்கும் கலவரம் தூண்டிவிடும் சதிகளை இந்துத்வ பசுத் தீவிரவாதிகள் ஏற்படுத்தியிருந்தனர்.
அக்டோபர் 11, 2014 பீகார்: மாட்டுக்கறியால் பிரச்சனையை உண்டாக்கி கிஷன்கஞ்சில் நகரம் முழுவதும் வகுப்புவாத பதற்றத்தை இந்துத்வ பசுத் தீவிரவாதிகள் ஏற்படுத்தியிருந்தனர்.
2015
====
30 மே 2015, ராஜஸ்தான்: பிர்லோக கிராமத்தில் இறைச்சி கடையை நடத்தி வந்த 60 வயது முஸ்லிம் அப்துல் கஃபார் குரைஷி இந்துத்து பயங்கரவாத கும்பலால் குச்சிகள் மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டார்.
2 ஆகஸ்ட் 2015, உத்தரபிரதேசம்: தத்ரியில் உள்ள கைம்ராலா கிராமத்தில் அனஃப் ஆரிப் நஸீம் என்கிற 3 முஸ்லிம் இளைஞர்களை கடவுளான மாட்டை வாகனத்தில் ஏற்றிச் சென்றதற்காக அடித்துக் கொல்லப்பட்டனர்.
28 செப்டம்பர் 2015, உத்தரபிரதேசம்: அதே தாத்ரியில்இ பிசாரா கிராமத்தில் இந்துத்தவ பசு பயங்கரவாதிகள் முகமது இக்லக் என்ற முஸ்லீம் மனிதனின் வீட்டை தாக்கி அக்லக்கை சாகடித்துவிட்டு அவரது மகன் 22 வயதான டேனிஷ்ஸை பயங்கரமாக தாக்கியுள்ளனர்.
9 அக்டோபர் 2015, ஜம்மு-காஷ்மீர்: உதம்பூர் மாவட்டத்தில் ஒரு பயங்கரவாத இந்து கும்பல் 18 வயது முஸ்லிம் ட்ரைவர் ஜாகித் பட் லாரி மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது. 10 நாளுக்குப் பிறகு அவர் இறந்து விட்டார்.
15 அக்டோபர் 2015 - ஹிமாச்சல் : உபி மாநிலம் சஹரன்பூரைச் சேர்ந்த நோமன் (22) என்னும் இஸ்லாமிய இளைஞர் பசு பயங்கவாதிகளால் ஹிமாச்சலில் அடித்து கொல்லப்பட்டார். கொன்றவர்களை விட்டுவிட்டு நோமனுடன் வந்த நான்கு முஸ்லிம்களை கைது செய்து ஆர் எஸ்எஸ் கடமையை நிறைவேற்றியது போலிஸ்.
9 டிசம்பர் 2015, ஹனியானாவின் பானுகேரி கிராமத்தில் பசுவைக் கடத்தியதாக இந்துத்வ பசுப் பயங்கவாதிகள் ஒரு இஸ்லாமிய இளைஞனை கொன்றனர்.
இது நீண்டு கொண்டே இருக்கின்றது.
2016
====
14 ஜனவரி 2016, மத்தியப் பிரதேசம்: மாட்டிறைச்சி கொண்ட ஒரு பையை எடுத்துச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் மத்தியப் பிரதேசத்தின் ஹார்டாவில் உள்ள கிக்ரியா ரயில் நிலையத்தில் இந்துத்வ பசு பயங்கவாதிகளால் ஒரு முஸ்லீம் தம்பதியினர் ரயிலுக்குள் தாக்கப்பட்டனர்.
18 மார்ச் 2016, ஜார்க்கண்ட்: ஜார்க்கண்டில் லத்தேஹர் மாவட்டத்தில் 32 வயதான மஸ்லம் அன்சாரி மற்றும் 15 வயதான இம்தேயாஸ் கான் ஆகியோரை கொன்னு மரத்தில் தொங்க விட்டனர் இந்தத்வ பசு பயங்பரவாதிகள்.
30 ஜூலை 2016, உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் பசு கொலை செய்ததாக ஒரு முஸ்லீம் குடும்பம் பசுத் தீவிரவாதி கும்பலால் தாக்கப்பட்டது. வழக்கம்போல அடிபட்டவர்கள் சிறையில், அடித்தவர்கள் பதவியில்.
2017
====
5 ஏப்ரல் 2017, ராஜஸ்தான்: ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தைச் சேர்ந்த பால் விவசாயி பெஹ்லு கான், 200 இந்துத்வ பயங்கரவாதி மாடுகளால் கொலை செய்யப்பட்டார்.
24 ஏப்ரல் 2017, ஜம்மு-காஷ்மீர்: காவல்துறையின் முன்னிலையில் பசு பயங்கவாதிகள் 9 வயது .ஸலாமிய சிறுமி உட்பட ஐந்து பேர் கொண்ட இஸ்லாமிய குடும்பத்தை தாக்கினார்கள்.
20 ஏப்ரல் 2017, அசாம்: மாடுகளை திருட முயன்றதாக இரண்டு இஸ்லாமியர்கள்இ பயங்கவாத மாட்டுக்கும்பலாப் கொல்லப்பட்டனர்.
23 ஏப்ரல் 2017, டெல்லி: எருமைகளை ஏற்றிச் சென்ற மூன்று இஸ்லாமியர்கள் ஒரு பயங்கவாத இந்துத்வ எருமைகளால் தாக்கப்பட்டனர்.
23 ஜூன் 2017, டெல்லி-பல்லப்கர் ரயில்: மாட்டிறைச்சி சாப்பிடுவதாக வதந்திகள் பரப்பப்பட்டதாக நான்கு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர்.
1 மே 2017, அஸ்ஸாம்: அசாமின் நாகான் மாவட்டத்தில் மாடுகளை திருடிய சந்தேகத்தின் பேரில் இரண்டு முஸ்லிம் ஆண்கள் கொலை செய்யப்பட்டனர்.
12 மே 2017- 18 மே 2017, ஜார்க்கண்ட்: நான்கு வெவ்வேறு சம்பவங்களில் 4 முஸ்லிம் கால்நடை வர்த்தகர்கள் உட்பட குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.
22 ஜூன் 2017, மேற்கு வங்கம்: உத்தரா தினாஜ்பூரின் இஸ்லாம்பூரில் மாடுகளை திருட முயன்றதாக மூன்று முஸ்லிம் ஆண்கள் கொலை செய்யப்பட்டனர்.
27 ஜூன் 2017, ஜார்க்கண்ட்: கிரிடிஹ் மாவட்டத்தில் ஒரு கும்பலால் 55 வயதான முஸ்லீம் பால் உரிமையாளர் உஸ்மான் அன்சாரி அடித்து நொறுக்கப்பட்டார் மற்றும் அவரது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது.
29 ஜூன் 2017, ஜார்கண்ட்: மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகக் கூறப்படும் அலிமுதீன் என்கிற இஸ்லாமியர் பஜார்த்தண்ட் கிராமத்தில் இந்துத்வ மாட்டுக் கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்.
10 நவம்பர் 2017, ஆல்வார், ராஜஸ்தான்: உமர் கான் மற்றும் தாஹிர்கான் என்ற 2 கால்நடை வர்த்தகர்கள் மாட்டு கும்பலால் தாக்கப்பட்டு உமர் கான் சம்பவ இடத்திலேயே இறந்தார், தாஹிர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2018
====
13 ஜூன் 2018, ஜார்க்கண்ட்: துலு கிராமத்தில், சிராபுதீன் அன்சாரி (35) மற்றும் முர்தாசா அன்சாரி (30) ஆகிய இஸ்லாமியர்கள் ஜார்க்கண்டில் பசுத் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டனர்.
14 ஜூன் 2018, உத்தரபிரதேசம்: பரேலியில் இஸ்லாமிய இறைச்சி விற்பனையாளர் உ.பி. போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டார்.
20 ஜூன் 2018இ உத்தரபிரதேசம்: ஹப்பூர் கிராமத்தில் 45 வயதான காசிம் பசுத் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டார்.
20 ஜூலை 2018, ராஜஸ்தான்: ராஜஸ்தானின் ஆல்வாரில் 31 வயது ரக்பர் கான் மாடுகளை ஏற்றிச் சென்றதாக பசு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். காயமடைந்தவரை சிகிச்சைக்கு அனுப்பும் முன் மாட்டினை பாதுகாக்க முற்பட்டதால் அந்த தாமதத்திலிலேயே இறந்தார்.
3 டிசம்பர் 2018, உத்தரபிரதேசம்: புலந்த்ஷாரில், சட்டவிரோத மாட்டு வதைக்கு எதிரான போராட்டம் கலவரத்தில் வெடித்தது. இதன் விளைவாக இரண்டு இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வன்முறையை ஒரு 'விபத்து' என்று வர்ணித்தார்.
2019
====
7 ஏப்ரல் 2019, பிஷ்வநாத் சரியாலி, அசாம்: 68 வயதான இஸ்லாமிய முதியவர் ஸைக்கத்தை மாட்டிறைச்சி பயங்கரவாத கும்பல்களால் துன்புறுத்தப்பட்டார், அவமானப்படுத்தப்பட்டார், அவமதிக்கப்பட்டார், தாக்கப்பட்டார். அவரை தூக்கி எறிந்து, பன்றி இறைச்சியை கட்டாயமாக வாயினுள் திணித்தனர்.
16 மே 2019, படேர்வா, ஜம்மு-காஷ்மீர்: முஸ்லீம் மனிதரான நயீம் அகமது ஷா, பசு பயங்கவாத இந்துத்வாக்களால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் யாசின் உசேனை, காயப்படுத்தினார்கள். .
22 மே 2019, சியோனி, மத்தியப் பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக இஸ்லாமிய தம்பதியினர் மற்றும் இரண்ட இஸ்லாமிய இளைஞர்களை இந்துத்வ புசுப் பயங்கவாதிகள் தாக்கினர் தாக்கப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் ஆண்களில் ஒருவரை அவர்களுடன் வந்த பெண்ணை அடிக்கும்படி கட்டாயப்படுத்தினர்.
1 ஜூன் 2019, பரேலி, உத்தரபிரதேசம்: இறைச்சி சாப்பிட்டதாகக் கூறி இரண்டு முஸ்லீம் தொழிலாளர்கள் உட்பட நான்கு பேர் மோப் என்னும் பசுப் பயங்கவாதியால் தாக்கப்பட்டனர்.
3 ஜூன் 2019, பபுவா பீகார், ஒரு இஸ்லாமிய லாரி டிரைவர் பசு பயங்கரவாதியால் தாக்கப்பட்டார்.
25 ஜூன் 2019, குர்கான், ஹரியானாவின் குர்கானில் இரண்டு இஸ்லாமியர்களை பசுப் பயங்கரவாதிகள் தாக்கினர்
ஜூலை 2019 -நாகப்பட்டினம் - புரவச்சேரி கிரமத்தைச் சார்ந்த முகம்மது பைசான் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்தத இந்துத்வ பயங்கரவாதிகள் (இந்து மக்கள் கட்சி தீவிரவாதிகள் ) கத்தியாலும் இரும்பு கம்பியாலும் ஆவேசமாக தாக்கினர்.
இந்தப் பட்டியலில் அவ்வப்போது கைகளில் மாட்டிக்கொண்ட தலித்துக்களையும் கிறித்துவர்களையும் அவர்கள் விடவில்லை. ஆனால் மிகவும் குறைந்த சதவிகிதம்தான். இஸ்லாமியர்களை கொன்றுவிட்டு பின்னர் இவர்களின் பக்கம் திரும்பிக்கொள்ளலாம் என்பதே ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்.
மாட்டுக்கறி சாப்பிட்டு செத்துப்போனவர்களின் பட்டியலில் முஸ்லிம்கள்தான் அதிகம். முஸ்லிம்களைத் தவிர வேறு யாரும் மாட்டுக்கறி சாப்பிடவில்லையா என்ன? ஆக இங்கு பிரச்சனை மாட்டுக்கறியே அல்ல, அவர்களுக்கு முதலில் முஸ்லிம்கள் பின்னர் கிறிஸ்துவர்கள் பின்னர் தலித்துகள் இதுதான் அவர்களின் குறி இந்துத்வ நாட்டை நோக்கிய பயணத்தில்.
மாட்டுக்கறி சாப்பிடும் கேரள பாஜக செயலாளர் சுரேந்திரனை ஏன் மாட்டு பயங்கரவாதிகள் அடித்துக் கொல்லவில்லை?
மாட்டுக்கறி சாப்பிடுவர்களை (இஸ்லாமியர்களை) அடித்துக் கொல்வோம் என்கிற பசு மாதா பக்திக்கு காரணம், முஸ்லிம்களை அடித்துக் கொல்வது என்பதே.
முதலில் அவர்கள் முஸ்லிம்களை கொல்ல வந்தார்கள்! அவர்களுக்காக நான் எதுவும் பேசவில்லை!!
ஏனென்றால் நான் முஸ்லிம் அல்ல!!!
பின்னர் அவர்கள் தலித்துக்களை கொல்ல வந்தார்கள்! அவர்களுக்காக நான் எதுவும் பேசவில்லை!!
ஏனென்றால் நான் தலித் அல்ல!!!
பின்னர் அவர்கள் கிறித்துவர்களை கொல்ல வந்தார்கள்! அவர்களுக்காக நான் எதுவும் பேசவில்லை!!
ஏனென்றால் நான் கிறித்துவன் அல்ல!!!
பின்னர் அவர்கள் நடுநிலை இந்துக்களை கொல்ல வந்தார்கள்!
நான் அவர்களுக்காக எதுவும் பேசவில்லை!!
ஏனென்றால் நான் நடுநிலையான இந்துவும் அல்ல!!!
இறுதியாக அவர்கள் என்னை கொல்ல வந்தார்கள்!
அப்பொழுது எனக்காக பேச எவருமே இல்லை!!
நான் செத்துப் போய்விட்டேன்
மாட்டினைப் பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில் மாடுகளை அடைத்து கொடுமைப்படுத்துகின்றார்கள் இவர்களா மாட்டினை தெய்வமாக மதிக்கின்றார்கள்?
சத்தீஸ்கரில் பாஜக தலைவர் ஹரீஸ் வர்மா நடத்தும் மாடுகள் பாதுகாக்கும் கூடத்தில் 200 மாடுகள் பட்டினியால் இறந்து போய்விட்டன.
ஜெய்ப்பூரில் உள்ள மாடுகள் பாதுகாக்கும் கூடத்தில் 500 பசுக்கள் பட்டினியால் இறக்கின்றன. அங்கு உள்ள தொழிலாளர்கள் சாலையில் சென்ற போது குறுக்கே வந்து விழுந்து தன் காரின் ஹெட்லைட் உடைந்து விட்டது என்ற கோபத்தில் இளம் பசுங்கன்றை கயிறு கட்டி 10 கிலோ மீட்டர் இழுத்து சென்று தன் கோபத்தை தனித்துக் கொண்டது ராஜஸ்தான் காவிக் கும்பல்.
"இவர்கள் மாடுகளை பாதுகாக்கின்றேன் என்று பெரிய சவக்குழிகளை உண்டு செய்கின்றார்கள். ஒவ்வொரு அடைப்பிலும் சுமார் 700 மாடுகள் உள்ளன ஆனால் அவற்றுக்கு 7 முதல் 8 தொழிலாளர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். எல்லா மாடுகளுக்கும் கொடுப்பது மிகவும் கடினம்" என்று குற்றம் சாட்டுகின்றார்கள்.
மாட்டினை தெய்வமாக மதிக்கும் மாட்டினை தாயாக மதிக்கும் இந்த போலி இந்துத்வா சக்திகள் தங்களது தெய்வங்களை இப்படியா கொடுமைப்படுத்துவது?
இப்படி கொடுமைப்படுப்படுத்துவதற்காகவே இஸ்லாமியர்களை அடித்துக் கொன்று அதனை பிடுங்கிக் கொண்டு வந்து சாகடிக்கின்றார்கள். வெட்டுப்பட்டு சாவதை விடவும் இப்படி பசியில் சாவது மிகவும் கொடுமை.
தங்களது தெய்வத்தை வெட்டி கூறு போட்டு, வெளிநாடுகளுக்கு அனுப்புகின்ற இந்தியாவில் அந்தக் கூட்டத்தையே தேர்ந்தெடுத்து, அந்த தெய்வத்தை வெட்டுவதற்கு சம்மதம் கொடுக்கின்றார்கள். இவர்கள் மாடுகளை தெய்வங்களாக நினைப்பது என்பது நிச்சயமாக போலித்தனமானது.
இவர்களுக்கு தேவை தாடியும் தொப்பியும்தான் அதற்காக எந்த காரணம் கிடைத்தாலும் விடமாட்டார்கள்.
"பாரத் மாதா கி ஜே…" " ஜெய் சிரிராம்" "மாட்டுக்கறி சாப்பிடுவது" எல்லாம் வெறும் குறியீடுகளே.
ஒன்றாய் சேர்ந்து சுதந்திரம் வாங்கிவிட்டு, எல்லாம் கிடைத்தபிறகு, சுதந்திப் பெற போராடியவர்களில், ஒரு பகுதியினரை, அவர்களின் வரலாற்றை அழித்து அவர்களை தேசத்துரோகிகளாய் காட்ட முயற்சிக்கின்றார்கள் இந்துத்வா சக்திகள்
இவர்கள் இந்தியாவை ஒரே நாடு ஒரே தேசம் ஒரே மதம் நோக்கி சென்று கொண்டிருப்பது இந்திய ஜனநாயகத்தை அழிவை நோக்கி நகர்த்துவதே...
மாட்டினை மாடாக இருக்க விடுங்கள்.
மனிதனை மனிதனாக வாழ விடுங்கள்.
மிருகத்தை மிருகமாகவே விட்டுவிடுங்கள்.
மாட்டினை தெய்வமாக்கிவிட்டு நீங்கள் ஏன் மிருகமாகின்றீர்கள்?
- ரசிகவ் ஞானியார்