ஆளும் கட்சியின் தலைமைக்குழுவின் விரிவான பகுப்பாய்வு என்ற தலைப்பில் "தி பிரின்ட்" குழுவினர் நடத்திய ஆய்வில் சிறுபான்மை சமூகங்களுக்கு சிறிய இடத்தைத் தந்துவிட்டு இன்னமும் மேல்சாதியினர் பெருமாதிக்கம் செலுத்துமா கட்சியாக பாஜக இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளது.

நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் தலைமையின் கீழான பாரதிய ஜனதாக் கட்சி (பிஜேபி), நாடு முழுவதும் தனது காலடிகளை விரிவுபடுத்துவதற்காக "சமூக செயற்கட்டுமானம்" என்ற பெயரில் இந்திய சாதிய சமூகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதிகள் என்று அழைக்கப்படுகிற மக்கள் குழுக்களை செயற்கையாக கட்டுப்படுத்தி வைத்து தங்களது ஆதரவாளர்களாக மாற்றுவது மற்றும் பாரம்பரியமாக பாரதிய ஜனதாக் கட்சியை ஒதுக்கித்தள்ளும் வாக்காளர்களைக் கைப்பற்றுவது என்ற எண்ணத்தில் கடுமையாக உழைத்து வருகிறது என்பது நம் கண்கூடு.

bjp casteஆனால் அதன் சொந்த கட்சி அமைப்பின் கட்டமைப்புக்கு வரும்போது, 38 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அக்கட்சியானது அவர்களின் மிகமுக்கிய வர்ணாஸ்ரமத்தின் அடுக்கின் "உயர்ந்த மேல்" சாதியின் வசப்பட்டதாக தொடர்ந்து இருந்து வருகின்றது. அதில் பிற்படுத்தப்பட்ட சாதியினர், பட்டியல் சாதிகள் - பட்டியல் பழங்குடியினர் & பிற சிறுபான்மையினர் சமூகங்களின் பிரதிநிதித்துவத்துடன் மிகவும் குறைவான விகிதத்தில் உள்ளது.

பாரதிய ஜனதாக் கட்சியின் நிறுவன கட்டமைப்பிற்குள் உள்ள "சாதி" பற்றிய ஆழமான பகுப்பாய்வு ஒன்றை மேற்கொண்ட தி பிரிண்ட், தேசிய மட்டத்தில் கட்சியின் அலுவலக ஊழியர்கள்/ அங்கத்தவர்கள் நான்கில் மூன்று விகிதத்திற்கு மேற்பட்டவர்கள் உயர் சாதி வகுப்பினர் என்றும் அதன் தேசிய நிர்வாகத்தில் 60 விகிதத்திற்கும் மேலான எண்ணிக்கையில் பொது பிரிவில் இருந்து பெறப்படுகிறது என்று கூறியுள்ளது.

அதன் மாநிலத்தலைவர்களின் எண்ணிக்கையோடு சேர்த்து 65 விகிதத்திற்கும் பொதுப்பிரிவின் உறுப்பினர்கள் கணக்கு வைத்திருக்கிறார்கள்.

அதன் கீழ் மட்டத்தில்கூட, பெரும்பாலான தலைமை பதவிகளில் உயர் சாதியினர் இருக்கின்றனர் - நாட்டில் மொத்தமுள்ள பாஜக மாவட்டத் தலைவர்களில் 65 விகிதத்தினர் பொதுப் பிரிவில் இருந்து வந்தவர்கள்.

கடந்த சில ஆண்டுகளில், பார்ப்பன-பனியாக்களின் கொட்டாரம் என்றும் பாஜக என்பது பார்ப்பன-பனியாக் கட்சி என்றும் புலனாகும் உணர்வை –காட்சியை – கருத்தை – சிதைக்க “தலித்” மக்களோடு பாஜகவின் நெருக்கம் விஞ்சி இருப்பதை போன்ற தோற்றப்பாட்டை அளித்தன.

எவ்வாறெனினும், அக்கட்சியின் அதிகாரப்படிநிலை வரிசைக்குழுவிலும் அது பிரதிபலிக்கவில்லை.

இசுலாமியர்கள் பழங்குடியினருடன் சேர்ந்து தலித்துகள், அக்கட்சியில் குறைந்தபட்ச அளவிலேயே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளனர் . தேசிய பதவிகளை வெறும் இரண்டு வகிக்கின்றனர், அதே நேரத்தில் மாநில கட்டமைப்புகளில் அதன் மாநில தலைமைகளின் தலித்துகள் - பழங்குடியினர் - இசுலாமியர்கள் என ஒருவரும் இல்லை.

ஆராய்ச்சி நெறிமுறையியல்

தேசிய அளவில் பா.ஜ.க.வின் தேசிய பொறுப்பாளர்கள் 50 பேர், தேசிய செயற்குழு நிர்வாகிகள் 97 பேர், 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களின் (29 + 7 ) 36 தலைவர்கள், 24 மாநிலங்களில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைவர்கள் 752 பேர் என்று ஆகியோரை தரவுகளின் அடிப்படியில் “தி பிரிண்ட்” ஆய்வுப்பனியாளர்கள் பட்டியலிட்டனர்.

வடகிழக்கு மாநிலங்களில், அசாம் மற்றும் திரிபுராவைத் தவிர முதன்மையாக பழங்குடி மேலாதிக்கம் கொண்டவை, அதனால் தான் இந்த பகுதிகளில் பாஜக தலைமையானது இந்த சமூக அமைப்பை பிரதிபலிக்கிறது. எனவே, வடகிழக்கு மாநிலங்கள் இந்த பகுப்பாய்வில் வெளியே நிறுத்தப்பட்டனர்.

அந்தந்த குறிப்பிட்ட மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் மக்கள் எண்ணிக்கை/ சமுதாய நிலை/ தகு நிலையைப் பொறுத்து சாதி வகைப்படுத்தலானது செய்யப்பட்டுள்ளன.

இசுலாமியர்கள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை சீக்கியர்கள் சிறுபான்மையினராக வகைப்படுத்தப்படவில்லை. பெரும்பாலும் பாஜக கொள்வது போல சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற வகையில் பஞ்சாப் மாநிலத்தில் அவ்வாறு எடுத்துக்கொள்ளவில்லை, அங்கு அவர்கள் சிறுபான்மையினர் அல்ல.

பஞ்சாபிற்கு வெளியே, கட்சியின் தேசிய அங்கத்தவர்களில்/ தேசிய அலுவலக பொறுப்பாளர்களில் ஒருவரும் தேசிய நிர்வாகக் குழுவில் ஒருவரும் என்ற எண்ணிக்கையில் சீக்கியர்கள் இருவர் பொறுப்பில் உள்ளனர், அதுமட்டுமல்லாது மத்திய பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட பொறுப்பில் அவர்கள் உள்ளனர்.

தேசிய பொறுப்பாளர்கள் மற்றும் தேசிய செயற்குழு நிர்வாக உறுப்பினர்களின் பட்டியல்கள் பாஜகவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பெறப்பட்டன.

தேசிய பொறுப்பாளர்கள் பட்டியலானது தேசியத் தலைவர், தேசிய துணைத் தலைவர்கள், தேசிய பொது செயலாளர்கள், துணைப் பொது செயலாளர்கள், தேசிய செயலாளர்கள், தேசிய செய்தித் தொடர்பாளர்கள், அக்கட்சியின் இன்னபிற பிரிவுகளின் தலைமைகள் கொண்டிருந்தது.

தேசிய செயற்குழு நிர்வாக பட்டியலானது அனைத்து மாநிலங்களிலிருந்தும் பாஜக தலைவர்களை உள்ளடக்கிருந்தது.

மாவட்ட தலைவர்கள் பட்டியல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வமான மாநில வலைத்தளங்களிலிருந்து பெறப்பட்டிருந்தாலும், மேற்படியான தகவல்கள் யாவும் எங்கிருந்தெல்லாம் கிடைக்குமோ அங்கிருந்தெல்லாம் கோர்க்கப்பட்டன, சில அந்தந்த மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.

சில மாநிலங்களில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையைவிட பாஜக மாவட்ட தலைவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. காரணம் பெரிய மாவட்டங்களைப் பொறுத்தவரை, அக்கட்சி ஒன்றுக்கு மேற்பட்ட தலைவர்களை மாவட்ட தலைவர்களாக நியமித்துள்ளது.

சாதி நிருணயித்தல் முடிந்தவரை துல்லியமாகக் கொண்டுள்ளது, ஆனால் சாதி அடையாளத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதால், சில சிறிய திருத்தங்களுக்கு கொண்டிருக்கலாம்.

அம்பலமான உண்மை : பா... ஒரு உயர் சாதிக் கட்சி

பாஜகவின் 50 தேசிய பொறுப்பாளர்களின் 17 பேர் பார்ப்பனர்கள், 21 பேர் முன்னேறிய / முற்படுத்தப்பட்ட சாதிகளாவர், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் சாதிகளாவர், 3 பேர் பட்டியலின சாதியினர், 2 பட்டியலின பழங்குடியினர், 2 பேர் இசுலாமிய சமுதாயத்திலிருந்து வந்தவர்கள், ஒருவர் சீக்கியர்.

bjp caste 1

பாரதிய ஜனதாக் கட்சியானது தனது மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பு முறையில் மிக மோசமாக சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளது. மூன்று தலித்துகளில், ஒருவர் கட்சியின் எஸ்.சி. அணியின் தலைவர், இரு இசுலாமியர்களுள் ஒருவர் சிறுபான்மையின மக்கள் அணியின் தலைவராக உள்ளார்.

பட்டியலின பழங்குடிப் பிரதிநிதிகளின் விஷயத்தில் இந்த பிரதிநித்துவ நிலையானது இன்னும் மோசமாக உள்ளது. ஒருவர் அக் கட்சியின் பட்டியலின பழங்குடி அணியின் தலைவராக உள்ளார், அதே சமயத்தில் மற்றொருவரான மத்தியப் பிரதேசத்தின் ஜியோதி த்ரூவ், அவர் வகிக்கும் கட்சி பதவியால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மாநில அரசு அவரது (கோண்ட் பழங்குடியினர் என்ற) எஸ்.டி. சான்றிதழை பறிமுதல் செய்து பிற்பாடு ரத்தும் செய்துவிட்டது.

இதன் விளைவாக, பா.ஜ.க.வின் தேசிய பதவியில் 76% உயர் சாதியினர்களாக உள்ளனர். அதே நேரத்தில் 8% மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் 6% பட்டியலின சாதியினர் உள்ளனர்.

இது அக்கட்சியின் தேசிய செயற்குழு நிர்வாகத்திலும் அப்படியே காண தலைப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 97 உறுப்பினர்களில், 29 பார்ப்பனர்கள், 37 மற்ற இதர மேல்சாதியினர், 18 பேர் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட, சாதியினர், 7 பேர் பட்டியலின சாதியினர், 3 பேர் சிறுபான்மை சமூகம், 1 சீக்கியர் மற்றும் 1 பட்டியலின பழங்குடி பிரிவை சேர்ந்தவர்.

கடந்த மாதம் மேற்கு வங்கத்தின் பத்திரிகையாளரும் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினருமான சந்தன் மித்ரா விலகிவிட்ட பிறகு அதில் ஒரு இருக்கை இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.

திறம்பட, தற்பொழுது அதிலும் 69% மேல்சாதியினகளாக இருந்து, 27% மட்டுமே மற்ற சமூகங்களிலிருந்து அங்கம் பெற்றுள்ளனர்.

பாஜக மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைவர்களில் 36 பொறுப்புக்களில், ஒருவர் கூட தலித் இல்லை.7 பேர் பார்ப்பனர்கள், 17 பிற உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள், 6 பேர் பட்டியலின பழங்குடிகள், 5 பேர் இதர பிரபடுத்தப்பட்ட சாதியினர், ஒரு இசுலாமியர். இவ்வாறு 66% மேலானவர்கள் மேல் சாதியினர்.

மாவட்ட அளவில் பார்த்தால் கூட, அக்கட்சியின் தலைவர் பொறுப்புகளை வகிப்பவர்கள் 65% மேலானோர் ஹிந்து உயர் சாதிகளாக இருக்கிறார்கள், அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள். பாஜக பொறுப்பை அளித்துள்ள அனைத்து மாநிலங்களையும் கணக்கில் கொண்டால் 752 மாவட்டத் தலைவர்கள் இருக்க வேண்டும், ஆனால் நம்மிட தரவு கிடைக்கப்பெறுகிற 746 பொறுப்புகளில் மூன்று பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. மேலும் மூன்று மாவட்டத் தலைவர்களின் சாதிகள் தெளிவாக இல்லை.

மாவட்ட பொறுப்புகளில் உள்ள இவர்களில் 487 பேர் உயர் சாதிகள், 25% இதர பிற்படுத்தப்பட்ட சாதி பிரிவுகளுக்குச் சொந்தமானது, 4% குறைவான விகிதத்தையே பட்டியலின சாதியினரால் பெறப்பட்டுள்ளன, குறிப்பாக இதில் 2% பிரதிநித்துவம் கூட சிறுபான்மை சமூகங்களிலிருந்து பெறப்படவில்லை.

இவற்றில் ஒன்று கூட மக்கள் தொகை அடைப்படையில் ஒவ்வொரு சமூகத்தினதும் பங்களிப்புடன் ஈடாக பொருந்தவில்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தலித்துகள் நாட்டின் மக்கள்தொகையில் 16.6% உள்ளனர். முஸ்லீம்கள் மக்கள் தொகையில் 14% உள்ளனர்.

சமூகநீதி்யை வலுப்படுத்த சாதி அடைப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் வெளியிடப்படா நிலையில் பிற சாதிகளுக்கு சரியான புள்ளிவிவரங்கள் இல்லை என்றாலும், 2007 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) நடத்திய ஆய்வில் OBC மக்கள் தொகையில் 41% பேர் இருப்பதாக அறிய முடிகிறது.

.பி - பீகாரில் அதே கதை

உத்தரபிரதேசத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டில் ஒரு வானவில் சாதி கூட்டணியை உருவாக்கியதன் மூலம், பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு பாஜக வந்தபோது, ​​அக்கட்சியின் மாநில கட்டமைப்பு, பெரும் எண்ணிக்கையில் மிக உயர்ந்த சாதியினரால் நிரப்பப்பட்டது. மாவட்டத் தலைவர்களில் 72% பொதுவான பிரிவினை சேர்ந்தவர்களாவர். இதில் 30% பார்ப்பனர்கள், 15% பனியாக்கள், 26% பிற முன்னேறிய சாதிகள்.

மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தலித்து மக்கள் 21% உள்ள நிலையில் வெறும் இரண்டு மாவட்டத் தலைவர்கள் பொறுப்பு மட்டுமே அவர்கள் வசமுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 71 மாவட்டங்கள் இருந்த போதிலும், சில நிர்வாகக் காரணங்களுக்காக கட்சியினர் பிளவுபட்டனர், இதனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 92 மாநிலத் தலைவர்கள் உள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, வருகின்ற 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தகளில் வெற்றிமாலை சூட்டுவோம் என பாஜக நம்புகின்ற மற்ற மாநிலமான பிஹாரில் மொத்தமுள்ள 40 மாவட்டத் தலைவர்களில், 6 பேர் பார்ப்பனர்கள், 16 மற்ற பிற மேல் சாதியினர், 11 பிற்படுத்தப்பட்டோர், 6 பேர் ( EBC ) இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர். அதில் ஒருவர் கூட தலித் தலைவர் இல்லை. மாவட்டத் தலைவர்களில் 55% உயர் சாதிகள், 11% பிற்படுத்தப்பட்டோர் / இதர பிற்படுத்தப்பட்ட வகைகளில் இருந்து வந்தவர்கள்.

வாக்கெடுப்புக்குட்பட உள்ள மாநிலங்கள் :

அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், பாஜக முதல் மூன்று முக்கிய மாநிலங்களில் அரை இறுதி போட்டியுடன் போட்டியிடுகிறது: அவை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர். அவை மூன்றும் அவர்கள் அதிகாரத்தில் உள்ளது.

bjp caste 2

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பார்ப்பனர்கள், பனியாக்கள் மற்றும் இதர உயர்ந்த சாதிகள் மாவட்ட தலைமைகளின் 70% உள்ளனர், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் 25%, பட்டியலின பழங்குடிகள் 4% மக்கள் தொகையில் உள்ளனர். மொத்தம் 55 மாவட்ட தலைவர்களில் 13 பேர் பனியாக்கள், 6 பேர் பார்ப்பனர்கள். ஒரேயொரு சீக்கியர் இருக்கிறார்.

ராஜஸ்தானில் வெற்றிக்கனவில் தடுமாறும்படியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு மக்களவை இடைத்தேர்தல்களில் அக்கட்சி படுதோல்வியைத் தழுவியது. அங்கே மாவட்டத் தலைவர்களில் 71% மேல் சாதிகள் ( பார்ப்பனர்கள், பனியாக்கள், ஜெயின், ராஜபுத்திரர்கள், கயஸ்தாக்கள் உட்பட), இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் 23%, 2 பேர் பட்டியலின சாதியினை சேர்ந்தவர்கள்.

தேர்தலை எதிர்நோக்கியுள்ள மூன்றாவது மாநிலமான சத்தீஸ்கர் மாநிலத்தில், கணிசமான அளவில் மாவட்ட தலைவர்களாக இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரை கொண்டிருக்கிறது - ஏறத்தாழ 45%, 41% உயர் சாதிகள் (இதில் 3% பார்ப்பனர்கள், 17% பனியாக்கள் மற்றும் இதர உயர் சாதிகளில் 21% பேர் உள்ளனர்) - கிட்டத்தட்ட

7 விகிதத்திற்கும் குறைவான பட்டியலின சாதியினர் மற்றும் பழங்குடிகள்.

மேற்கு மாநிலங்களில் ...

பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்தில், 41 மாவட்டத் தலைவர்களில் 3 பேர் பார்ப்பனர்கள் மற்ற உயர் சாதிகளிலிருந்து 21 பேர் உள்ளனர். 6 பேர் பழங்குடியினர், 8 பேர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் 3 பேர் பட்டியல் சாதியினர். இடஒதுக்கீட்டிற்காக தற்போது பிரச்சாரம் செய்கின்ற சக்திவாய்ந்த படேல்கள், மாவட்ட தலைவர்களில் 31% பேர் உள்ளனர்.

குஜராத்தின் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில், 40 மாவட்டத் தலைவர்கள், இடஒதுக்கீடு கோருகின்ற செல்வாக்குள்ள மராத்தா சமூகம் (15) அதிகபட்ச பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது. 11 பேர் பார்ப்பனர்கள், 6 பேர் இதர உயர் சாதிகளில் இருந்து வந்தவர்கள், 4 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர், 3 பட்டியலின பழங்குடிகள், ஒரேயொரு இசுலாமியர், பட்டியலின சாதிகளிலிருந்து யாரும் இல்லை.

கிழக்கில் ...

bjp caste 3கிழக்கில் உள்ளே மேற்கு வங்கத்தில் 37 மாவட்டத் தலைவர்களில் 2 பேர் பட்டியலின சாதி மற்றும் 5 பேர் பிற்படுத்தப்பட்டோர். மீதமுள்ளவர்கள் யாவரும் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள்.

அசாமில், பாஜக அரசாங்கம் தான் உள்ளது, அதன் மாவட்டத் தலைவர்களில் சுமார் 45%பார்ப்பனர்கள் அல்லது பிற முன்னேறிய சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஏறத்தாழ 32% இதர பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், 21% பட்டியலின பழங்குடிகள் மற்றும் ஒரேயொரு இசுலாமியர்.

தெற்கும் வடக்கும்

தெற்கு மாநிலங்களில், கர்நாடகாவில் 36 மாவட்டத் தலைவர்களில் 28 பேர் பொதுப் பிரிவிற்கு சொந்தமானவர்கள். 36 மாவட்டத் தலைவர்களில் 19 பேர் லிங்காயத்துக்கள், 7 பேர் வொக்கலிகர்கள், 2 பேர் (பொது), 5 பேர் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் 3 பேர் பட்டியலின சாதியினர்.

அ.இ.அ.தி.மு.க உடன் கூட்டணியை தோற்றுவிக்க விரும்புகிற தமிழ்நாட்டில், மிகப்பெரிய பெரும்பான்மையாக - பாஜகவின் மாவட்ட தலைமைகளின் 71% - பிரபடுத்தப்பட்ட சாதியினர், 26% பேர் உயர்சாதியினராக இருக்கிறார்கள். ஒரு மாவட்ட தலைவர் பொறுப்பிலும் பட்டியலின சாதியினரே இசுலாமியரோ இல்லை.

வடக்கின் கடைசி எல்லையான ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில், 23 மாவட்டத் தலைவர்கள், முதன்மையாக ஜம்முவில் 43% மேல் சாதியினர் மற்றும் பள்ளத்தாக்கில் 48% பேர் இசுலாமியர்களாக உள்ளனர்.

பிரதமர்...

நாங்கள் பாஜகவின் பொறுப்பு நியமங்கள் குறித்த கேள்விகளை முன்வைத்து பாஜகவின் தலைவர்களிடம் கருத்து கேட்டப் பொழுது, ​​இந்த விஷயத்தில் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய மறுத்து விட்டார்கள். மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யும் போது அக்கட்சி உள்ளூர் சாதி இயக்கங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முயற்சிக்கும் என ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

"நகர்ப்புற மற்றும் கிராமத் தொகுதித் தலைவர்களை வெவ்வேறு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் போதும் சாதிக் குழுக்களிடமிருந்து பிரதிநிதித்துவம் பெறுவதற்கு பெரும்பாலும் சமநிலைச் செயல்கள் செய்யப்படுகின்றன. அதே சமயத்தில் மாவட்ட உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களிடமும் (தலைவரைத் தவிர) தேர்வு செய்யப்படுகின்றனர்," என ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

"நாட்டின் பிரதமரே ஒரு இதர பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் தானே?. இதுவே எங்கள் கட்சி ஒரு பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குமான ஒரு கட்சியாகும் என்பதை உயர்த்திக்காட்டுகிறது. மாற்றம் என்பது படிப்படியாக மட்டுமே நடக்கும் அதுமட்டுமல்லாது அது கட்சியின் அதிகாரப்படிநிலையிலும் பிரதிபலிக்கும்.

இவை அனைத்தும் ஒரே இரவில் நடக்க முடியாது, "என்று இன்னொரு மூத்த தலைவர் கூறினார்.

நன்றி: தி பிரிண்ட்

ஆங்கிலத்தில்: ரத்னாதீப் சௌத்திரி & ரூபன்விட்ட பாட்டாசார்ஜீ

தமிழில்: செம்பியன்

Pin It