சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவில் தீக்ஷிதர்கள் எனப்படும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் மீது இன்று பல்வேறு சர்ச்சைகள் நிலவுகின்றன. இந்நிலையில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாட ஆறுமுகச்சாமி புலவர் என்ற ஒதுவார் தீர்மானித்தார். ஆனால் இதை அனுமதிக்க மாட்டோம் என தீக்ஷிதர்கள் தெரிவித்தனர். மேலும் சிதம்பரம் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தடை உத்தரவும் வாங்கினர். இந்த நிலையில், ஆறுமுகச்சாமி என்ற புலவர் மற்றும் பல தமிழார்வலர்கள் சனிக்கிழமை கோவிலுக்குள் நுழைந்து திருவாசகத்தைப் பாடப் போவதாக அறிவித்தனர்.

Chidambaram templeதிட்டமிட்டபடி ஆறுமுகச்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் கோவிலுக்கு செல்ல கிளம்பினர். ஆனால் அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீஸார் நடுச் சாலையிலேயே தடுத்து விட்டதால், சாலையில் நின்றபடியே ஆறுமுகச்சாமி திருவாசகத்தை பாடினார். தீக்ஷிதர்களின் இந்த கடும் எதிர்ப்பு காரணமாக சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேவாரம், திருவாசகம் பாடித்தான், மூடியிருந்த நடராஜர் கோவில் கதவுகளை மாணிக்கவாசகர் திறந்தார் என்று பண்டைய புராணங்கள் கூறுகின்றன. தில்லை நடராஜரை, தமிழ் வளர்த்த கடவுள் என்றுதான் சிவனடியார்கள் வழிபடுகிறார்கள். சேக்கிழாரும், பிற சிவனடியார்களும், நடராஜரை தமிழில்தான் பாடி வழிபட்டு வந்துள்ளனர். அப்படி இருக்கும்போது, நடராஜர் பெயரைச் சொல்லிப் பிழைத்து வரும் தீக்ஷிதர்கள், தமிழில் பாட தடை வாங்கி வைத்திருப்பது தமிழுக்கும், தமிழ்க் கடவுளுக்கும் செய்யும் துரோகம் ஆகும்.

சிதம்பரம் கோவில் கொடிமரம் அருகே கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிட முயன்ற அந்த ஆறுமுகச்சாமி என்கிற தமிழறிஞர் ஏற்கனவே சிவ சிவா என்று சொல்லுதல், சாஷ்டங்கமாக நமஸ்கரித்தல், கற்பூரம் கொளுத்துதல் போன்ற வழிபாட்டு முறைகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறைவனை வழிபடுதலில் பிரச்சினை ஏதும் இல்லை என்றாலும், யார் வழிபடவேண்டும். யார் சொன்னபடி வழிபடவேண்டும் என்று தீக்ஷிதர்கள் வகுத்து வைத்துள்ள சட்டத்தின்படியே வழிபடவேண்டும் என்று தீக்ஷிதர்களின் அறிவிக்கப்படாத ம.தொ.செ அசினாச்சு அறிவித்தார்.

மேலும் அசினாச்சு சொல்லும்போது, சிதம்பரம் கோவில் ஒரு ப்ரைவேட் ப்ராப்பர்டி. அங்கே என்ன விதிமுறைகள் போட வேண்டும் என்பதை உரிமையாளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதனால நடராஜர் தீக்ஷிதர்களுடைய உடைமை என்பதை புரிந்து கொண்டு, சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும்; பெரிய மனது பண்ணி சொல்கிறேன் - கோவில் வாசலில் நின்றுகொண்டு கண்களை மூடியபடி மனசுக்குள் பிரார்த்தனைகளை முணுமுணுத்துக் கொள்ளலாம். ஆனால் திருவாசகம், தேவாரம் போன்ற விஷயங்களை எல்லாம் மறந்தும் யோசிக்கக் கூடாது. அவைகளை ஒன்று நாங்கள் பாடவேண்டும். அல்லது அந்த தமிழ்ப் பாடல்களே பாடக் கூடாது என்று நங்கள் சொன்னால் நீங்கள் அதையும் கேட்க வேண்டும் என்கிறார்!

திருவாசகம் என்பது சிவபெருமானின் மீது பாடப்பட்ட ஒரு பாடல் தொகுப்பு. அதனை சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீக்ஷிதர்கள் மட்டுமே பாட வேண்டும் என்று சிவனிடம் நேரடியாக லைசன்ஸ் வாங்கி இருக்கிறார்கள் போலிருக்கிறது.

தீக்ஷிதர்கள் இன்றைக்கு ஒரு தனி இனக்குழுவாகச் செயல்படுகிறார்கள். தில்லை நடராஜர் சிதம்பரம் வந்தபோது அவருடன் கூடவே வந்த 3,000 அந்தணர்கள் குடும்பத்தின் இன்றைய வழித்தோன்றல்கள் என்று நம்புகிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோயில் இவர்களுடைய தனிச்சொத்து என்று நினைக்கிறார்கள். தீக்ஷிதர்களைத் தவிர்த்து வேறு யாரும் இந்தக் கோயிலின் எந்த வேலையையும் செய்யமுடியாது - அர்ச்சனை மட்டுமல்ல, சமையல்முதல் நிர்வாகம்வரை அனைத்தையும் இவர்களே செய்கிறார்கள்.

இந்தக் கோயில்மீதான உரிமையை நிலைநாட்டவும் தன் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்கவுமே தீக்ஷிதர் ஆண்கள் பல அட்டூழியங்களை செய்கிறார்கள். இதற்கு சாத்திரங்களும் என்றோ நடந்ததாகச் சொல்லப்படும் புரட்டு புராணங்களும் துணைபோகின்றன. கிருத யுகத்தில் 3,000 குடும்பங்களும் திரேதா யுகத்தில் 2,000 குடும்பங்களும் துவாபர யுகத்தில் 1,000 குடும்பங்களும் பின்னர் கலியுகத்தில் 300 குடும்பங்களும் மட்டும்தான் இருக்கும் என்று ஏதோ சுலோகத்தில் சொல்லியிருப்பதாக மேற்கோள் காட்டுகிறார்கள். தங்கள் வீட்டு சிறுமிகளை படிக்கவிடாமல் 12வயதுகளிலேயே தங்கள் இனத்துக்குள்ளேயே திருமணமும் முடித்து வைக்கின்றனர். பெண்ணுரிமையை நசுக்கும் இவர்கள் இறைவழிபாட்டில் விஞ்சி நிற்பதுபோல காட்டிக்கொள்வது உலகமகா கேவலம்.

மாமாக்களை நாம் அர்த்தத்துடன் மாமா என்றால் இங்கே யார் யாருக்கோ கோபம் வருகிறது. பார்ப்பனனை நிந்தனை செய்பவர்கள் பாவிகள் என்று 'மனு' தர்மம் படித்திருப்பார்கள் போலும். ஆனால் பார்ப்பனர்கள் தங்களை அப்படித்தான் கூறிக்கொள்கிறார்கள். விடாது கருப்ப்ப்ப்ப்பு! இது என்ன சொல்ல மறந்த புதுக்கதையா? என்று நீங்கள் கேட்கலாம். இது கதையல்ல நிஜம். ஆம், 'பிரைவேட் பிராப்பர்டியை' வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்துகிறோம், வாருங்கள் வந்து பயனடையுங்கள், ஆனால் சொந்தம் கொண்டாட முயலாதீர்கள்!' என்று அவர்களே திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். இப்போது புரிகிறதா ? சிதம்பரம் கோவில் தேவஸ்தானத்தை தேவ அடியார் ஸ்தாபனம் என்பது போல் பிரித்துச் சொல்கிறார்கள். கேட்பதற்கே நாராசமாக, கூச்சமாக இருக்கிறது.

பார்ப்பன நரபலி, உயிர்ப்பலி வேள்வியில் நெஞ்சு எரிந்து கொண்டிருந்த இந்தியாவிற்கு, அதை அமிழ்த்து, பகுத்தறிவு ஒளியேற்ற பிறந்து வெற்றிகரமாக தன்னுடைய 8 கட்டளைகள் மூலம் மக்களை விழிப்படைய வைத்தார் புத்தர். அவர் மறைந்ததும் ஆரிய பிணங்கள் மீண்டும் விழித்துக் கொண்டன. சூன்ய தத்துவம் பேசிய புத்த மதத்தினரை சூன்யக்காரர்கள் என்று சொல்வதற்காகவும், அவர்களின் மாயா வாதங்களை வெல்வதற்காகவும், பார்ப்பனர்களுக்கு புராண கதைகள் தேவைப்பட்டன. அப்போதுவரை தங்கள் குல இந்திரனையும், வருணனையும் மட்டும் வழிபட்ட பார்ப்பனர்கள், பின்னாளில் திராவிட மக்களின் சுடலைமாடன், சடையன் என்றும் சொல்லப்பட்ட தெய்வங்களுக்கு புரோமஷன் கொடுத்து சிவன் எனவும் நடராஜன் எனவும் சொல்லி வந்தனர். ஆயர்குல கண்ணனை கிருஷ்ண பரமாத்வாக மாற்றிக் கொண்டனர். கிருஷ்ணன் திராவிட தெய்வம் என்பதை கிருஷ்ணனின் 'ஷியாம் சுந்தர்' என்ற மற்றொரு பெயர் அதாவது 'கருப்பு அழகன்' என்று சொல்வதன் மூலம் அறியலாம்.

நான்கு வேதங்களில் இந்திரனையும், வருணனையும் தவிர இன்றைய ஏனைய கடவுள்களின் பெயர்கள் இல்லை என்பதால் ஆரியக் கடவுளாக காட்டப்படும் இன்றைய அனைத்துக் கடவுளும் திராவிடர்கள் வழிபட்டதே. ஆனால் அவைகள் தங்களுக்கு சொந்தம் என்பதுபோலவும், தங்கள் வருணாசிரமக் கொள்கைகளை காக்கும் பொருட்டும், சிறு சிறு செவி வழிக்கதைகளை ஒன்றாக இணைத்து இராமாயணம், மகாபாரதம் போன்ற புளுகு கதைகளை புனைந்து திராவிட தெய்வங்களின் பெயர்களை மாற்றி, இந்த புரட்டுகளை யாரும் எழுதில் புரிந்து கொள்ளமுடியாத வண்ணம் பாடையில் சென்ற தேவ பாடை(ஷை) என்ற சமஸ்கிருதத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக எழுதி வைத்தனர்.

அதுவரை பன்றிகள், குதிரைகள்,பசுக்கள் இறைச்சிகளை வேள்வியில் பலியிட்டு அவைகளை சொர்க்கத்துக்கு இட்டுச்செலவதாக கூறி புசித்து வந்தனர். சாத்வீகம் பேசிய புத்த மதத்தையும், சமண மதத்தையும் வலுவிழக்க செய்ய வேண்டுமென்று, தங்களை புனிதர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளவே, ஏற்கனவே திராவிடரிடம் இருந்து வந்த சைவ சமய உணவுமுறைகளை கடைபிடிக்க ஆரம்பித்தனர்.

காலம் காலமாக இயல் இசை நாடகம் என்றே வாழ்ந்த திராவிட மக்கள், இந்த இராமாயண மகாபாரத கட்டுக்கதைகளை உண்மை என்று நம்ப ஆரம்பித்த பிறகு, இராமாயண மகாபாரதக் கதைகள் சூடுபிடிக்க ஆரம்பித்தன. தேவ பாடை(ஷை) மூலமொழி தமிழில் கலக்க ஆரம்பித்து பல்வேறு வட்டார வழக்குகளாக பேசி வந்த தமிழ் மொழி, திராவிட மொழிகளாக திரிந்தது. தேவ பாஷை எனப்படும் சமஸ்கிருதம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழிலிருந்தே தோற்றுவிக்கப்பட்டது. அது ஒரு தனிக்கதை. அதுபற்றி அறிய வேண்டியவர்கள் தேவநேய பாவாணர் எழுதிய 'வடமொழி வரலாறு' என்ற நூலை படித்து தெரிந்து கொள்ளலாம்.

மன்னர் ஆட்சியில் இவர்களின் ஆதிக்கம் மட்டுமே செல்வாக்குடன் இருந்து வந்தது. மன்னர்களை மயக்க இவர்கள் மது, மாது போன்றவைகளை ஏற்பாடு செய்தனர். பார்ப்பனர்களின் வேதங்களை காக்கும் பொருட்டு சோழமன்னர்கள் பல்வேறு கோவில்களை கட்டிவைத்தனர். அவையெல்லாம் பார்ப்பனர்களின் தலையில் கல் சுமக்க வைக்கப்பட்டு கட்டப்பட்டதா? பார்ப்பனர்களின் பாட்டன் சொத்திலிருந்து கட்டப்பட்டதா? வாதாபியை வென்ற பல்லவ மன்னன், தோற்ற மன்னனின் தலை மூலம் கற்கள் சுமக்க வைத்து கட்டப்பட்ட கோவில்கள், கங்கை கொண்ட சோழபுரம் கோவில்கள் எவ்வாறு கட்டப்பட்டன என்பதை வரலாறுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவற்றில் பார்ப்பனரின் உழைப்பு எள்ளளவும் இல்லல. அப்படி வாதாபியை வென்ற போதுதான் பார்ப்பன பிள்ளையார் கூடவே வந்து முதன் முதலில் பிள்ளையார் பட்டியில் ஒட்டிக்கொண்டார்.

பல கோவில்களில் பிள்ளையார் சிலைகளை பின்னாளில் (சில நூற்றாண்டுகளுக்கு முன்பு) ஒட்ட வைத்திருப்பதையும், அப்படி பின்னாளில் சேர்க்கப்பட்ட பிள்ளையார் சிலைகள், மற்ற சிலைகளுடன் முற்றிலும் பொருந்தாத கலை வேறுபாடும், வடித்த காலவேறுபாடும் இருப்பதை நீங்கள் கங்கை கொண்ட சோழபுரம் போன்ற சோழர்கள் கட்டிய திருக்கோவில்களுக்கு செல்லும் போது கண்ணாறக் காணலாம்.

இந்த பார்ப்பன மத யானைகளை கட்டித் தீனி போடுவதற்காகவும், இந்து சமயத்தை தழைக்க வைக்க வேண்டுமென்றும் நினைத்து நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டு எழுதிவைத்தனர் சோழமன்னர்கள். இவற்றைத்தான் பார்ப்பனர்கள் தங்கள் பாட்டன் சொத்து, பூட்டன் சொத்து என்பது போல் உரிமை பேசி வருகின்றனர். ஜெயலலிதாவிடம் வருமான வரித்துறையினர் சோதனைக்கு சென்றபோது "இந்த தங்கமெல்லாம் எங்கள் பாட்டியை மைசூர் மகாராஜா வைத்திருந்தபோது அன்பளிப்பாக கொடுத்தது!" என்றாரே! அக்கதைகூட இதேபோலத்தான்!

ஒருவீட்டில் வாடகைக்கு தொடர்ந்து பத்து வருடம் குடி இருந்தால் அந்த வீடு குடி இருந்தவருக்கே சொந்தம் என்று பொய்க்கதை புனைவார்கள் சிலர். எத்தனைபேர் இப்படி கேஸ்போட்டு ஜெயித்து வீட்டை வென்றார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். காலம் காலமாக உழுதவனுக்கு நிலம் சொந்தம் என்ற ஏழைகளின் குரல்வளைகள்கூட முரட்டுத்தனமாக நெரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது மணியாட்டியவனுக்கே கோவில் சொந்தம் என்று இவர்கள் கூறுவது இம்சைஅரசன் 23ம்புலிகேசி படம் பார்த்த நகைச்சுவையைத் தருகிறது நமக்கு!

கோவில் நிலங்களை மட்டும் அனுபவித்தால் போதாது என்பதால், சிதம்பர ரகசியம் என்ற பார்ப்பன ரகசியத்தை வைத்துக் கொண்டு வயிறு வளர்த்து, ஈனச் செயல்களை செய்வது மட்டுமில்லாமல், ரவுடிக் கும்பல்களை வைத்துக் கொண்டு தமிழில் தேவாரம் திருவாசகம் பாட வருபவர்களை மிரட்டியும் அடித்தும் உதைத்தும் வருகின்றனர். தமிழ் பாடல் கோவிலின் புனிதத்தை கெடுக்கிறதாம். வெளிநாட்டு சரக்குகள், பெண்கள் சபலம் என்று உழன்று வரும் இவர்களின் வாயிலிருந்து புனிதம் என்ற வார்த்தை வந்தால் அந்த வார்த்தையே புனிதம் கெட்டுப் போனதாக அர்த்தம். ஜெயேந்திரர் கதை உங்களுக்குத் தெரிந்ததுதானே?

பார்ப்பனர்களை தொன்று தொட்டு பீடித்துள்ள பார்ப்பனீய பேய்களை ஒட்டவென்றுமென்றால் சந்தியாகாலம் முதல் சாயங்காலம் வரை ஒருநாளைக்கு ஆயிரம் முறைகள் சைவ திருமுறைபோல் 'வந்தேறிகளை வென்ற தமிழே போற்றுவோம்' என்ற மந்திரத்தை நாள்தோறும் சிவன் சன்னிதிக்கு முன்பு நின்றோ, நினைத்துக் கொண்டோ சொல்லுங்கள்.

இறுதியாக,

சிதம்பரம் நடராஜர் கோவிலை ப்ரைவேட் ப்ராப்பர்டி என்று இவர்கள் வாயால் சொன்னதன் மூலம், 'சிதம்பர ரகசியம்' காட்டி வெளிநாட்டினரிடமும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் பணம் பறிப்பதும், சமீபத்திய திருட்டு பயலே படத்தில் மாளவிகா - அப்பாஸ் கள்ள உறவை தெரிந்து கொண்டு அதை வைத்து பணம் பறிக்கும் வில்லன்/கதாநாயகன் செயலும் ஒன்றாகவே தெரிகிறது.

நீங்களே சொல்லுங்கள்! பல்வேறு திருட்டுத் தனங்களையும், ஏமாற்று வேலைகளையும் செய்துவரும் பார்ப்பன, தீட்ஷிதன்களை 'திருட்டுபயலே' என்றழைப்பது தவறா?

- விடாது கறுப்பு