தமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் வேலை செய்துகொண்டு இருக்கின்றது. அதற்குத் துணையாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிசத் போன்றவையும் பணியாற்றி வருகின்றன. ஊருக்கு பத்து பேர் கூட கட்சி உறுப்பினர்களாக இல்லாத போது இவர்கள் எப்படி தாமரையை தமிழகத்தில் மலர வைக்க முடியும் என பல பேர் இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் யோசித்து இருக்கலாம். அவர்களுக்கு எல்லாம் தெரியாது ‘தாமரை’ என்பது ஒரு இரகசிய குறிச்சொல் என்பது. அவர்கள் தமிழ்நாட்டில் தாமரையை மலரச் செய்வோம் மலரச் செய்வோம் என அடிக்கடி சொன்னதன் இரகசிய பொருள் தமிழ்நாட்டை விபச்சார விடுதியாக மாற்றுவோம் என்பதைத்தான். இதைத் தான் இத்தனை நாட்களாக அவர்களது மொழியில் அவர்களது ஆட்களுக்கு மட்டும் புரியும்படி பேசி வந்திருக்கின்றார்கள்.

banwarilal purohit and bjp

ஊருக்கு பத்து பேரை வைத்துக் கொண்டு ஒரு மாநிலத்தின் ஆட்சியை நிச்சயம் பிடிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி என்றால் அந்தப் பத்து பேரை வைத்துக் கொண்டு எதைச் சாதிக்க முடியும் என்ற கேள்விக்கும் இந்தியாவுக்கே வழிகாட்டியாக மாறி இருக்கின்றது பிஜேபி. அந்தப் பத்து பேரை விபச்சாரத் தரகர்களாக மாற்றி, ஊருக்கு ஊர் பெண்களிடம் பேரம் பேசி அதிகார வர்க்கத்துக்கு கூட்டிக் கொடுத்து கோடி கோடியாய் பணம் சம்பாதிக்க முடியும். அந்தப் பணத்தில் கமலாலயம், சங்கரமடம் போன்ற பெரிய பெரிய 'ஆன்மீக' விடுதிகளைக் கட்டி அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் கூட்டிக் கொடுத்து ‘தாமரையை’ மலரச் செய்ய முடியும். அந்தக் கூட்டிக் கொடுக்கும் தொழிலை ஆண்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதில்லை; பெண்களை வைத்தும் மிகச் சிறப்பாக செய்ய முடியும் என்பதை ‘தாமரை கூட்டத்தார்’ காட்டியிருக்கின்றார்கள்.

நிர்மலா தேவி விவகாரம் இத்தனை நாட்களாக தமிழ்நாட்டில் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல் என்ன செய்து கொண்டிருந்தது என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கின்றது. இவர்கள் கட்சி நடத்துவதே தமிழ்நாட்டில் உள்ள பெண்களை விபச்சாரத் தொழிலில் இறக்கி பணமும், பதவியும் அடையத்தான் என்பது அப்பட்டமாக இன்று தமிழக மக்களுக்குத் தெரிந்துவிட்டது. ஒரு கட்சி வளர வேண்டும் என்றால் கட்சி உறுப்பினர்களிடம் இத்தனை பேரை சேர்த்துவிடுங்கள் என்று டார்கெட் வைப்பார்கள். ஆனால் பிஜேபியோ இத்தனை பேரை கூட்டிக் கொடுங்கள் என்று டார்கெட் வைத்திருக்கின்றது. அதன் பரிவார ஆட்கள் தமிழ்நாடு முழுவதும் இதற்காக தீயாக வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள். இன்று தமிழ்நாட்டுப் பெண்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் மிக விழிப்போடு இருக்க வேண்டும். உங்கள் பகுதியில் யாராவது பிஜேபிகாரனோ, இல்லை ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்றவற்றைச் சார்ந்த எவனாவது இருந்தால் உடனே உங்கள் வீட்டுப் பெண்களுக்கு அவர்களை அடையாளாம் காட்டி உசார் படுத்திவிடுங்கள். ‘இவர்கள் எல்லாம் மாமா பயல்கள், பெண்களையும், குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் கொலைகாரர்கள். இவர்கள் தான் ஆசிஃபா என்ற 8 வயது சிறுமியை வன்புணர்ந்து தலையில் கல்லைப்போட்டு கொடூரமாகக் கொன்ற காமவெறியர்கள், கொன்றது மட்டும் அல்லாமல் அதை நியாயப்படுத்தி ஊர்வலமும் போனவர்கள், அரியலூர் நந்தினியை கருவறுத்துக் கொன்றவர்களும் இவர்கள்தான், இப்போது நமது பகுதிக்கு வந்திருக்கின்றார்கள், உன்னிடம் பேசுவதற்கு முயற்சி செய்தால் காலில் போட்டிருக்கும் செருப்பைக் கழற்றி விடு' என்று உண்மையை எடுத்துச்சொல்லி உங்கள் வீட்டுப் பெண்களை விபச்சாரத் தரகர்களிடம் இருந்தும், சைக்கோ கொலைகாரர்களிடம் இருந்தும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் நிர்மலாதேவியே ஆடியோவில் “மொத்தமா 400 பேர்ல பியூர் அப்ஸ்ர்வேஷன்ல என்னை செலெக்ட் செஞ்சிருக்காங்க” என்று சொல்கின்றார். அப்படி என்றால் இன்னும் 399 பெண் விபச்சாரத் தரகர்கள் தமிழகம் முழுவதும் கூட்டிக்கொடுக்கும் பணியில் செயல்பட்டு வருகின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. அவர்கள் எல்லாம் பிஜேபியின் விபச்சார ஸ்லீப்பர் செல்களாக தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்றார்கள். அவர்களுக்கு அசைன்மென்ட் வரும் போது ஒவ்வொருவரும் களத்தில் இறங்கி வலை விரிப்பார்கள். இவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியால் ஏற்கெனவே டெஸ்ட் செய்யப்பட்டவர்கள் ஆகையால் இதை மிக நேர்த்தியாக இவர்களால் செய்ய முடியும். நிர்மலா தேவி ‘பேப்பர் வேல்யூவேஷனுக்கு போன இடத்திலேயே தன்னை மூன்று தடைவை டெஸ்ட் பண்ணுனாங்க’ என்று சொல்வதில் இருந்து இந்த உண்மையை மக்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும் அவர்கள் யாரையும் டெஸ்ட் பண்ணாமல் இது போன்ற சமூக சேவை வேலைகளில் சேர்த்துக்கொள்வதில்லை என்பதும் இதன் மூலம் தெரிய வருகின்றது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், அவர் பேப்பர் வேல்யூவேஷனுக்குப் போன இடத்தில் அவரை மூன்று முறை டெஸ்ட் பண்ணின அந்த ‘செட்டப் செல்லப்பாக்களும்', ‘சின்ன அய்யாக்களும்’ யார் என்பதுதான். இதில் இருந்தே பல்கலைக்கழங்களில் காவிக் கூட்டம் இருந்தால் அங்கே பாரத இந்துப் பண்பாட்டின் படியும், வாஸ்து சாஸ்திரத்தின் படியும் ஒரு குட்டி அந்தப்புரமும் நிச்சயம் செயல்படும் என்பதை உறுதிபடுத்தி இருக்கின்றது. எனவே ‘காவி’ பல்கலைக்கழகத்தில் படிந்திருந்தாலும், கல்லூரியில் படிந்திருந்தாலும், கமலாலயத்தில் படிந்திருந்தாலும், இல்லை அது ராஜ்பவனில் படிந்திருந்தாலும் தைரியமாகச் சொல்லலாம் அங்கே அந்தப்புரங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை.

ஆளுநர் தாத்தா இந்தப் பிரச்சினையில் தாமாகவே முன்வந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் தனிநபர் விசாரணைக் குழுவை நியமித்திருக்கின்றார். இந்தக் குழு அதி தீவிரமாக செயல்பட்டு புலனாய்வு செய்து ‘ஆளுநர் தாத்தா இல்லை’ என்ற அறிய உண்மையை விரைவில் கண்டுபிடிக்கும் என நாம் நம்புவோம். ஆளுநர் ஏற்கெனவே அசாம், மேகலாயா போன்ற மாநிலங்களில் தான் ஒன்றும் தாத்தா கிடையாது என்பதை நிரூபித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கின்றார். மேகாலயா ஆளுராக இருந்த சண்முகநாதன் கூட தன்னை ஒரு தாத்தா இல்லை என நிரூபித்தவர் என்பதையும், அதே போல பன்வாரிலால் புரோகித்தும் தன்னை நிரூபிப்பர் என்றும் நாம் நம்புவோம்.

மோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு இந்தியனின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம் போடுவேன் என்றார். ஆனால் பத்துபைசா கூட போடவில்லை. எல்லோரும் பிஜேபியை வசைபாட ஆரம்பித்தார்கள். ஆனால் பிஜேபி பொய் சொல்லவில்லை. அவர்கள் இப்போதும் பணம் போடத் தயாராகத்தான் இருக்கின்றார்கள். நீங்கள் உங்கள் வீட்டுப் பெண்களை பிஜேபி சொல்லும் ஆட்களுக்கு கூட்டிக்கொடுத்தால் அவர்கள் உங்கள் வங்கிக்கணக்கில் பணம் போடத் தயாராக இருக்கின்றார்கள். நிர்மலா தேவி மாணவிகளிடம் சொல்கின்றார் “இது உங்களுடைய அப்பா-அம்மாவுக்குச் சொல்லி செய்வீங்களா, சொல்லாமச் செய்வீங்களாகிறதுதான் கேள்வி. பெற்றோருக்குத் தெரிஞ்சு செஞ்சா, வர்ற பணத்தை அக்கவுன்ட் நம்பர்ல போட்டுவிட்டிருவேன்” என்று. இந்த உண்மை தெரியாமல் நம்ம மக்கள் மோடி சொன்ன மாதிரி பணம் போடாமல் ஏமாத்திடாரு ஏமாத்திடாரு என்று விசனப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். 15 லட்சம் இல்லை, அதற்கு மேலும் உங்கள் அக்கவுண்டில் பிஜேபியால் பணம் போட முடியும். ஆனால் அவர்கள் சொல்வதை நீங்கள் செய்யும் போது!.

மானமுள்ள தமிழ்நாட்டு மக்களே! உங்கள் வீட்டுப் பெண்களை பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல், அதிகார வர்க்கத்தினரின் கட்டிலுக்குப் படுக்க அழைக்கின்றது. படுத்தால் பணமும், பதவியையும் தருகின்றேன் என்கின்றது. என்ன செய்யப்போகின்றீர்கள்? தாமரையை மலர வைக்கப் போகின்றார்களா? இல்லை தமிழ்நாட்டை விட்டே ஓட ஓட இந்த விபச்சார மாஃபியாக்களை அடித்து விரட்டப் போகின்றீர்களா? இது ஏதோ அந்த நான்கு மாணவிகளுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை இல்லை. தமிழ்நாடு முழுவதும் பிஜேபி ஆர்.எஸ்.எஸ், விபச்சாரத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடத்திக் கொண்டு இருக்கின்றது. ஆனால் தமிழக மக்கள் இன்னும் தங்கள் செருப்புகளை பத்திரமாக வைத்திருக்கின்றார்கள். செருப்பு முக்கியமா, இல்லை மானம் முக்கியமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

- செ.கார்கி

Pin It