தினம் ஓசியில் புளியோதரையும் பொங்கச்சோற்றையும் தின்றுவிட்டு ஆழ்வார்களின் பக்திப் பாசுரங்களைப் பாடி பக்தகோடிகளிடம் சில்லரையைத் தேத்தி, தன்னுடைய பிள்ளையாண்டாக்களை ஐஐடியிலும், ஐஐஎம்மிலும் படிக்க வைத்து, மிலேச்ச தேசத்தில் டாலருக்கும், யூரோவுக்கும் மாரடிக்க அனுப்பிவிட்டு, கிருஸ்தவ, முஸ்லிம் வந்தேறிகளை எப்படி நாட்டைவிட்டு விரட்டுவது என்பதையும், தேசியத்தையும், சனாதன தர்மத்தையும் பாரத தேசத்தில் எப்படி அழியாமல் காப்பது என்பதையும், மோடி ஆட்சியில் எப்படி தங்களின் மனக் குறைகள் எல்லாம் சீறும் சிறப்புமாக நிவர்த்தி செய்யப்படுகின்றது என்பதையும் சதா சிந்தித்திக் கொண்டும், பேசிக்கொண்டும் மீதமிருக்கும் ஓய்வு நேரத்தில் நாமம் போடுவதையும், விட்டை போடுவதையும் மட்டுமே தனது வாழ்வின் பிறவிப்பேறாக கருதி, வைகுண்ட பதவி அடைவதற்காக பகவானை சேவித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அக்கிரகாரத்து வைணவப் பார்ப்பான்களை இன்று வீதிக்கு இழுத்துவந்து சாகும்வரை உண்ணாவிரதம் என்ற மாபெரும் அகிம்சைப் புரட்சியை உலகிலேயே அதிக நேரமாக ஒருநாள் முழுவதும் இருக்க வைத்து, ஆண்டாளின் வாரிசுகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்த பெரும் பேறை செய்திருக்கின்றார் வைரமுத்து அவர்கள்.

vairamuthu aandaal

வெளிக்கி இருக்கப் போனவனுக்கு விளாம்பழம் கிடைத்த கதையாக தமிழகத்தில் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பி விட்டு, அதன் மூலம் ஊடக கவனத்தையும் தங்களின் பிரதாபத்தையும் எப்படியும் காட்டிவிட வேண்டும் என்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலைந்துகொண்டிருந்த பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு ஆண்டாள் பிரச்சினை கிடைத்திருக்கின்றது. வைரமுத்து செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்தாலும், இந்தப் பிரச்சினையை இத்தோடு நிறுத்திக் கொண்டால் மீண்டும் இது போன்றதொரு பிரச்சினை கிடைக்க எத்தனை நாட்கள் ஆகுமோ என்ற ஏக்கத்தில், அதை விட மனமில்லாமல் இதை வைத்து எப்படியும் ஒரு மூன்று, நாலு மாதத்திற்கு அரசியல் செய்துவிட வேண்டும் என்ற அபிலாசையில் தினம் தினம் தினுசு தினுசாக ஆட்களை களத்தில் இறக்கிவிட்டு, வைரமுத்துவை பீதியாக்கி பேதி போக வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். எச்சிகலை ராஜாவில் தொடங்கி உடுமலைப்பேட்டை உலகானந்தாவிற்கு ‘ஆன்மீக’ சேவை புரியும் அவரது பணிப்பெண்கள் வரை இந்து தர்மத்தைப் பற்றி வைரமுத்துவிற்கு வகுப்பெடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஒருபக்கம் வைரமுத்துவிற்கு எதிராக பார்ப்பான்களும், அவர்களின் வைப்பாட்டி மகன்களும் (சூத்திரர்களும்) களமாட, இன்னொரு பக்கம் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரியத் தோழர்கள் பொதுவெளிகளிலும், சமூக வலைத் தளங்களிலும் காவிப் பயங்கரவாதிகளை ரத்தவாந்தி எடுத்து சாகும்வரை கதற, கதற அடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் பிரச்சினையில் நேரடியாக சம்மந்தப்பட்ட கைப்பிள்ளை வைரமுத்து அவர்கள், ஆண்டாள் எனக்கு இரண்டாவது தாய் என்று திரும்பவும் பார்ப்பனியத்தின் கைக்கூலிதான் தான் என்பதை மெய்ப்பிக்க வீடியோ வெளியிடுகின்றார். தான் தேவதாசி என்று சொன்னதை வேண்டுமென்றே சிலபேர் தாசி என்று மாற்றி, பிறகு அதையும் திரித்து வேசி என்று சொல்லிவிட்டதாக பிதற்றுகின்றார். பார்ப்பன எச்சிகலை ராஜாவே தேவதாசி என்பது விபச்சாரிகளை குறிக்கும் சொல் என்று ஒப்புக்கொண்டுதான் அப்படி பேசிய வைரமுத்துவை தாசிமகன் என்று திட்டியதை வைரமுத்து மறந்துவிட்டு திரும்பவும் உளறிக்கொண்டு இருக்கின்றார்.

தமிழ்ச்சமூகத்தை முட்டாள்களாக, மடையர்களாக, மானமற்றவர்களாக மாற்றியதில் இந்த மானங்கெட்ட சைவ, வைணவ பக்தி இலக்கியங்களின் பங்கு அளப்பரியாதாகும். அன்றில் இருந்து இன்றுவரை எவன் எவன் எல்லாம் பார்ப்பனியத்தின் கைக்கூலிகளாக, ஊதுகுழல்களாக இருந்தார்களோ அவர்கள்தான் இந்தக் கேடுகெட்ட ஆபாச தமிழர் விரோத இலக்கியங்களை தூக்கிப் பிடித்தவர்கள். ஆனால் மானமுள்ள எந்தத் தமிழனும் இந்த கேடுகெட்ட ஆபாசக் குப்பையை வீட்டில் வைத்திருப்பதைக்கூட இழிவாகவே எண்ணுவார்கள்.

திராவிட பாரம்பரியத்தில் வந்ததாக பிதற்றிக்கொண்டு திரியும் வைரமுத்து, உண்மையிலேயே தேவதாசி என்பதை ஏதோ பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட உயரிய பதவிபோல எண்ணிக்கொண்டு பார்ப்பனியத்துக்கு சொம்பு தூக்குகின்றார். ஆனால் பெரியார் அன்றே தெளிவாக சொல்லியிருக்கின்றார் தேவதாசி (தேவரடியார்கள்) என்பவர்கள் யார் என்று.

“கோயில்களின் ஆடல் பாடல்களைச் செய்து கொண்டும், ‘சாமி’யையே கல்யாணம் செய்து கொள்ளப்பட்டது என்னும் அர்த்தத்தில் பொட்டு கட்டிக்கொண்டும், ‘தேவரடியார்’ எனப் பெயர் பூண்டும் வாழும் கூட்டத்தினரும், விபசாரத்திற்குக் காரணமாக இருப்பதும் நாடறிந்த செய்தியாகும். இத்தகைய 'தேவரடியார்'களைப் பற்றியும், அவர்கள் கோயில்களிலுள்ள கல்லுச்சாமிகளுக்குப் ( அவைகளை உண்டாக்கி வைத்திருக்கும் புரோகித ஆசாமிகளுக்கும்) பெண்சாதிகளாக இருந்து கொண்டு புரிய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் சமஸ்கிருத நூல்களில் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்”. (நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? பாகம் நான்கு-ப.எண்:74)

எங்கேயோ ஒரு பல்கலைக்கழகத்தில் யாரோ ஒரு ஆராய்ச்சியாளரின் ஆய்வுக் கட்டுரையை மேற்கோள் காட்டியதற்கே இந்தச் சொம்பைகள் இப்படி குதிக்கின்றார்களே, உண்மையில் இவர்கள் பெரியாரையும், அம்பேத்கரையும் முழுவதுமாகப் படித்தால் படிக்கும் போதே சிறுநீர் அல்லவா கழித்துவிடுவார்கள். வைரமுத்து சொன்னால் அது தவறு என்று சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த ஜீயர் காஞ்சி புராணத்தில் சைவர்கள், விஷ்ணுவை மிகக் கேவலமாக எழுதியுள்ளதற்கு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்வாரா? என்று அன்புடனும் ஆசையுடனும் கேட்கின்றேன்.

காஞ்சிப் புராணம் சுகசரீரப் படலம் பாட்டு-27

“……..கந்தனை நல்கவேண்டி சீர் இயமத்து மடப்பிடியைத் திருமணஞ் செய்த பின்….. இன்பக் கலவி நடத்துலுற்றான்”

பாட்டு-28

இமயவல்லி வனமுலைதாக்க மகிழ்ந்து…..பல நாள் கலவி பெருநலம் துய்க்கும் காலை, அண்டர் உணர்ந்து,வெறுவி,அஞ்சி, அம்பிகை தன்பால் கருப்ப வீறுகொண்டிடு முன்னம் சிதைவு செய்யும் கொள்கையின் அங்கியை ஏவினார்கள்.

அங்கி=அக்கினி

அக்கினி பகவான் அதை மறுத்து அந்த வேலை எனக்கு வேண்டாம்.

பாட்டு-29

“நீவிர்களே அவணெய்தி ஊறு நிகழ்த்திடுமின்களெனக் கரைந்தான்”

உடனே விஷ்ணு பிரம்மா தேவர்கள் மந்தர மலை சென்று நேரில் அந்த நிலையில் சிவனைக் கண்டு கும்பிட்டு, நிறுத்து! நிறுத்து! என்று கதறினார்கள். சிவன் என்ன செய்தார்? கலவியில் இருந்து திமிறிக் கொண்டு அம்மணத்தோடு வந்துவிட்டார்.

பாட்டு-30

“தெரிவையோடு ஆடும் புணர்ச்சி நாப்பண் சென்றனன் வெற்றரையோடும் அங்கண்” அப்படி அம்மணத்தோடு வந்த சிவன், விஷ்ணு முதலிய தேவர்களை உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

பாட்டு-35

“வேண்டும் கூறுமின் உங்களுக்கு இன்னே மேவர நல்குதும்” என்று அருள, ஈண்டிய மாயனை உள்ளிட்டோர் தன் ஏவலினால் முகன் ஏத்தி, எந்தாய்! மாண்ட மலைமகள் பால் கர்ப்பம் வாய்ப்பது வேண்டிவர்மால் முதலோர்…….

இதற்கு சிவன் சொல்லுகின்றார். ஓ தேவர்களே! அந்தக் கர்ப்பம் தரிக்கக்கூடாது என்பீர்களாகில்,அந்த குளிர்ந்த முத்தை உருக்கினால் போல் வெண்மையாக (வெளியாகப் போகும்) நீரைக் குடியுங்கள் என்றார். உடனே அக்கினி பகவான் கையேந்தி வாங்கினான், அப்புறம் என்ன ஆயிற்று என்றால்,

பாட்டு-36

“பனித்த முத்துருக்கியன்ன வெண்புனல் பருகுமின்கள் எனப் புகன்று அருள வல்லே எரி இரை அங்கை ஏற்றான்”

பாட்டு-37

“…….அதனை…...உண்ண விண்ணவர் எவர்க்கும் அந்நாள் மேவருங் கர்ப்பம் நீட்டி…...வெப்பு நோயினால் தொடக்குண்டார்கள்”

அப்புறம் என்ன நடந்தது என்றால், பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்கள் கர்ப்பமடைந்து விட்டார்கள். அந்தக் கர்ப்பத்தோடு சிவனை அணுகி வேண்ட, அவர் காஞ்சீபுரத்தில் உள்ள சுதகரி தீர்த்தத்தில் குளியுங்கள். உங்கள் கர்ப்பம் அழிந்துபோகும் என்றார். அந்த படி அவர்கள் அத்தீர்த்தத்தில் குளித்து, தங்கள் கர்ப்பங்களை அழித்துக் கொண்டார்கள்.( நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? பாகம் மூன்று பக்கம் 347)

வைரமுத்து ஆண்டாளை தவறாக சித்தரித்துவிட்டார், அவர் கோயிலுகே வந்து மன்னிப்பு கோரவில்லை என்றால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொன்ன ஜீயர் இப்படி சிவனின் விந்துவை விஷ்ணு குடித்து கர்ப்பம் ஆனான் என்று காஞ்சி புராணத்தில் எழுதியிருப்பதற்கு என்ன சொல்லப் போகின்றார்? அதுமட்டுமா இராமாயணக் கதை தோற்றதிற்கான காரணமாக இராமாயணத்தில் வால்மீகியால் கூறப்படும் காரணம், திருமால் ஒரு ஒன்னா நெம்பர் பொம்பளப் பொறுக்கி என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டவில்லையா, வைணவ வீரர்களே!

“விஷ்ணு ஏன் இராமனாக, அதுவும் மனிதனாக அவதரிக்க வேண்டும் என்பதற்கு காரணம் கூறப்படுகின்றது. ஜலந்தாசூரன் மனைவி பிருந்தா என்பவள் அழகுடையவளாகவும் பதிவிரதையாகவும் இருந்தாள். நாரதன் மூலமாக அவளை அடைய முற்பட்ட விஷ்ணு முயன்று தன்னால் முடியாமல் போகவே, சிவனிடம் போய் முறையிட, சிவன் அதற்கு நான் என்ன பண்ண வேண்டுமென்று குறை கேட்க, விஷ்ணு நீ எப்படியாவது ஜலந்தராசூரனைக் கொன்றுபோடு. பிறகு பார்த்துக்கொள்கிறேன் என்றான். அப்படி சிவன் ஜலந்திரா சூரனைக் கொன்றான். பிறகு விஷ்ணு ஜலந்திரா சூரனுடைய உடலில் புகுந்து கொள்ளப் போய், பிருந்தயை அனுபவித்தான். அவனுடைய செய்கையில் மாற்றம் கண்ட பிருந்தை சந்தேகப்பட்டுக் கொண்டு, அவன் குடுமியைப் பிடித்துக்கொண்டு அயோக்கியப் பயலே நீ யார் என்று கேட்டாள்? அவன் உளறிக்கொண்டு உண்மையினைக் கூறினான்.

உடனே அவள் ஆத்திரப்பட்டு “அடா அயோக்கியா! உன்னுடைய மனைவியை வேறு ஒருவன் இதுபோல அனுபவிக்க நீ ஏங்கித் தவிக்கக் கடவது” என்று சாபம் இட்டாள்.

இதன்படிதான் இராமன் பூலோகத்தில் இராமனாகப் பிறந்ததும், அவன் மனைவியை இராவணன் 'அடித்துக்கொண்டு; போனதுமாகும். (மேற்படி நூல் பக்கம் எண்:722).

சரி புருஷன் தான் பெண்பித்தனாய், ஊர் மேயும் காலிப் பயலாய் இருக்கின்றான் என்றால், அவரின் மனைவி யோக்கியதை எப்படி இருக்கின்றது என்பதையும் இந்து பக்தர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

லட்சுமி யோக்கியதை?

லட்சுமி இமயமலைச்சாரலில் உலாவிக் கொண்டிருந்தாள். அவ்வழியே ஒரு ரிஷி போனார். அவரைக் கண்டு லட்சுமி மோகித்தாள். உடனே லட்சுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டது. இது விஷ்ணுவிற்குத் தெரிந்து, சண்டாள ஸ்திரியாக போகக் கடவதென்று லட்சுமியைச் சபித்தார். அப்படி லட்சுமி சண்டாளச்சியாகி விட்ட காவியமே காதம்பரி என்னும் நூல். இது பாணபட்டர் என்னும் பண்டிதரால் எழுதப்பட்டது. காதம்பரி என்னும் நூல் வடமொழி படிக்கும் மாணவர்களுக்குப் பாடமாக பள்ளியில் வைக்கப்பட்டிருக்கின்றது. கண்டவுடன் மோகித்த உடன் குழந்தை பிறந்து விடுமா? சீதை லட்சுமியின் அம்சமென்று சிலரும், ராவணன் கொண்டுபோனது மாயா சீதை என்றும், ராமனைப் போலவே மாயா சம்பந்தம் சீதைக்கும் உண்டென்று சிலரும் சொல்லுவார்கள். சாட்சாத் லட்சுமியே ரிஷியைக் கண்டு மோகித்து, பெண் குழந்தையைப் பிரசவித்து விஷ்ணுவால் சண்டாள ஸ்திரியானாள் என்று பண்டிதர்களே சொல்லியிருக்கிறார்கள். காதம்பரி செய்த பாணபட்டர் கூரத்தாழ்வாரின் மகனாகவிருந்தாலும், போஜராஜாவின் பட்டராவிருந்தாலும், இந்தப் பண்டிதர்களைவிட மேலானவரே. ( மேற்படி நூல் பக்கம் எண்:412).

இப்படி படிப்பதற்கே சரோஜாதேவி புத்தகத்தைப் போன்று இருக்கும் இந்த ஆபாச குப்பைகள்தான் இந்துக்களின் புனித நூல்களாம்! உண்மையில் இதை எல்லாம் ஒருவன் ஏற்றுக்கொண்டு, தன்னை ஒரு இந்து என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைவானேயானால், இந்த கடவுள்களை புனிதமானவை என்று கருதுவானேயானால், அவன் பார்ப்பானின் அடிமையாகவே இருப்பான். இதை எல்லாம் ஒழித்துக் கட்டத்தான் பெரியார் அவர்கள் தன்னுடைய 95 வயதிலும் கூட களமாடினார். ஆனால், புலவர் கூட்டம் அப்போதும் பெரியாரை 'தமிழ் தெரியாதவர், இலக்கணம் தெரியாவர்' என்று ஏசி வெட்கம் கெட்ட ஆபாசக் குப்பைகளை மக்களிடம் பரப்பினார்கள். அதனால்தான் பெரியார் மனம் வெறுத்துச் சொன்னார்

“பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்தரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன்படுத்தத் தயங்குகின்றீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதவர்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று, மானமற்று, கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றி கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்” (நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? பாகம் இரண்டு ப.எண்: 585).

இன்று வைணவத் தொந்திகளுக்கு ஆதரவாக சைவத் தொந்திகள் குரல் கொடுக்கின்றன. ஆனால் உண்மை என்னவென்றால் சைவக் கடவுள்களைப் பற்றி வைணவன் அவனது நூல்களில் பாகவதம், இராமாயணம், பாரதம் போன்றவற்றில் கழுவிக் கழுவி ஊற்றியிருக்கின்றான். அதே போல வைணவனைப் பற்றி சைவன் அவனது கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் போன்றவற்றில் அதே போல கழுவிக் கழுவி ஊற்றியிருக்கின்றான். அது தெரியாத கூமுட்டைகள், பார்ப்பன அடிமைகள் இன்று இரண்டையும் வணங்குகின்றார்கள். உண்மையிலேயே இதை எல்லாம் படித்துவிட்டு ஒருவன் வந்தான் என்றால், சிவனையும் விஷ்ணுவையும் கடவுளாக அல்ல, ஒரு மனிதனாகக் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், காறித் துப்பிவிடுவார்கள். ஆனால் நம் மக்களிடம் உள்ள ஒரு குறை என்னவென்றால், இந்த குப்பைகளைப் பற்றி தெரியாமல், இந்த ஆபாசப் புராணங்களையும் கடவுள்களையும் புனிதமானது என எண்ணி வணங்குவதுதான்.

வைரமுத்துக்காக குரல்கொடுக்கும் நபர்கள் அவரின் பார்ப்பன சார்பை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் கள்ளமெளனம் காப்பது, திரும்பவும் வைரமுத்து கண்ட கருமாந்திரங்களை எல்லாம் புனிதம் என்ற பெயரில் தமிழன் மீது திணிக்கவே பயன்படும். வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்கின்றார். நாமோ ‘ஆபாசத்தை ஆண்டாள்’ என்கின்றோம். வைரமுத்துவை இன்னும் கொஞ்சம் பார்ப்பனக் கும்பல் நெருக்கினால் ஆண்டாளை மட்டுமல்ல, பாஞ்சாலியையும் தன்னுடைய தாய் என்பார். ஆண்டாளிடம் தமிழ்ப்பால் குடித்தேன், பாஞ்சாலியிடம் ஞானப் பால் குடித்தேன் என்பார். என்னைக் கேட்டால் வைரமுத்து இப்படியொரு வீடியோவை வெளியிட்டதற்கு அந்த தொந்திப் பார்ப்பானின் பாதாரவிந்தங்களில் விழுந்து கதிமோட்சம் அடைந்திருக்கலாம்.

- செ.கார்கி

Pin It