Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

‘தோழர்’ என்று சொல்லும் போதே உள்ளுக்குள் ஒரு கம்பீரமும் எழுச்சியும் ஒரு சேரப் பிறக்கும். அப்படி ஒரு சக்தி வாய்ந்தது அந்தச் சொல். பெரும்பாலும் இடதுசாரி சித்தாந்தத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட நபர்களை மட்டுமே குறிக்கப்பட்டு வந்த சொல், பெரியார், அம்பேத்கர், மார்க்சிய இயக்கத் தோழர்கள் மட்டுமே தங்களுக்குள் புழக்கத்தில் பயன்படுத்திய சொல். இடதுசாரி இயக்கப் பின்புலம் இல்லாதவர்கள் நமக்குத் தெரிந்து, தங்களுக்குள் தோழர் என்ற வார்த்தையைத் தவறியும் பயன்படுத்துவது கிடையாது. வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் தங்களுக்குள் விழித்துக்கொள்ள ‘ஜீ’ என்ற வார்த்தையையே பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். அப்படி இருக்கும்போது இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் மட்டுமே தங்களுக்குள் தாராளமாகப் பயன்படுத்திவந்த தோழர் என்ற சொல்லை இப்போது தங்களை இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சில பிழைப்புவாத மடையர்கள், இடம், பொருள் பார்க்காமல் யார் என்ன என்ற தராதரம் பார்க்காமல், எவனை வேண்டும் என்றாலும் அழைக்கப் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

nayantara 543

கனவுத் தொழிற்சலையில் தயாரிக்கப்படும் முற்போக்குப் பொம்மைகளை வைத்து புரட்சி செய்ய அந்த முற்போக்கு தற்குறிகள் முற்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். எம்.ஜி. ஆரை வைத்தும், ஜெயலலிதாவை வைத்தும், விஜயகாந்த்தை வைத்தும் கடைசியில் யாரும் கிடக்காமல் இளைய தளபதி விஜயை வைத்தும் புரட்சி நடத்தத் திட்டம் தீட்டிய தீவட்டிக் கும்பல் இப்போது இறுதியாக யாரும் கிடைக்காமல், நயன்தாராவின் காலடியில் சரணாகதி அடைந்திருக்கின்றது. நிஜ வாழ்க்கைக்கும், நிழல் வாழ்க்கைக்கும் உள்ள பாரிய வேறுபாட்டை உள்வாங்கிக் கொள்ளத் திராணியற்ற கும்பலின் காலை நக்கி, மாபெரும் புரட்சியை செய்து கொண்டு இருக்கின்றது. நாம் எந்த நிறக் கண்ணாடியை அணிந்து பார்க்கின்றோமோ, அந்தக் கண்ணாடியின் தன்மைக்கு ஏற்பவே இந்த உலகம் நமக்கு வண்ணமாகத் தெரிகின்றது. அதற்காக இந்த உலகத்தின் நிறத்தை கண்ணாடிகள் தான் தீர்மானிப்பதாக யாரும் புளகாங்கிதம் அடைந்து, கண்ணாடியை தன்னுடைய பூசை அறையில் வைத்துக் கொண்டாடுவதில்லை. கண்ணாடிக்கு உண்மையில் ஏதாவது பெருமை உண்டென்றால், அது நிச்சயம் அதைத் தயாரித்த நபர்களையே சாருமே ஒழிய, அதை அணிந்துகொண்டு இந்த உலகைப் பார்த்த நபர்களைச் சாராது.

அறம் படம் இன்று மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு அந்தப் படத்தை இயக்கிய கோபி நயினார் அவர்களையே அந்தப் பெருமை சாருமே ஒழிய, அதில் நடித்த நயன்தாராவுக்கு ஒரு போதும் அந்தப் பெருமை சாராது. இப்படித்தான் மெர்சல் படம் வெளியான போது, சில சிகப்புசட்டை புரட்சிப் பூக்கள் தங்களுக்குள் பிரவாகம் எடுத்து ஓடிக்கொண்டிருக்கும் பிழைப்புவாத நதியை அடக்க முடியாமல் ஊரே பார்க்க விஜயின் பதாகைகளைக் கையில் ஏந்தி புரட்சி செய்தன. இப்போது அதே பிழைப்புவாத சாக்கடைகள் தங்களுடைய கட்சியின் முதன்மையான பணியே அதுதான் என்று முச்சந்தியில் வந்து நின்றுகொண்டு அம்மணமாக ஆடுகின்றனர்.

நயன்தாரா ஒரு உழைப்பாளி, அதனால் அவரை நாங்கள் தோழர் என்று அழைப்போம் என்கின்றார்கள். அப்படி என்றால் சன்னி லியோன், ஷகிலா எல்லாம் யார்? அவர்கள் எல்லாம் உழைப்பாளிகள் கிடையாதா அல்லது ரதராத்திரை போன அத்வானியும், குஜராத்தில் ஆயிரக்கணக்காண முஸ்லிம் மக்களை துடிதுடிக்க கொன்றொழிக்கக் காரணமான மோடியும் , இந்திய மக்களை இன்று கசக்கிப் பிழிந்து, பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கும் அம்பானியும், அதானியும், டாடாவும் கடின உழைப்பாளர்கள் இல்லையா? இனி அவர்களையும் தோழர் சன்னி லியோன் என்றும், தோழர் ஷகிலா என்றும், தோழர் அத்வானி என்றும், தோழர் மோடி என்றும், இல்லை தோழர் அம்பானி என்றும், தோழர் அதானி என்றும் இவர்கள் அழைப்பார்களா? இப்படி அழைப்பவர்களை கண்டிக்கத் திராணியற்ற ஒரு கூட்டம் இதற்கு ஜால்ரா வேறு போட்டுக்கொண்டு இருக்கின்றது.

காம்ரேட் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்சொல்லாகவே இன்று தோழர் என்ற சொல் தமிழில் பயன்படுத்தப்படுகின்றது. சங்க இலக்கியத்தில் நண்பன் என்பதைக் குறிக்க தோழர் என்ற சொல் பயன்பட்டிருந்தாலும் தமிழகத்தில் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின் அந்தச் சொல் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களையே குறிக்கப் பெரும்பாலும் பயன்பட்டுவருகின்றது. பெரியார் அவர்கள் அந்தக் காலத்தில் ஒருவரை விளிக்கப் பயன்படுத்திவந்த ஸ்ரீ, கனம், திரு, திருமதி போன்ற சொற்களைத் தவிர்த்து தோழர் என்று அழைக்கும்படியே தனது அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கேட்டுக்கொண்டார், அவரும் அப்படியே அழைத்தும் வந்தார். ஒரு சொல் இன்றைய தேதியில் எப்படி பயன்படுத்தப்படுகின்றதோ, அதன் பொருள் உணர்ந்து பயன்படுத்துவது நல்லது. தோழர் என்ற சொல் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களை அழைக்கப் பயன்படுத்துவதால் தான், ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது கோவை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த, தற்போது திருச்சி காவல்துறை ஆணையராக உள்ள அமுல்ராஜ் அவர்கள் தோழர் என அழைத்து யாராவது உங்களிடம் பேசினால், தொடர்பைத் துண்டியுங்கள் என்று சொன்னார். இதில் இருந்தே அதிகார வர்க்கத்தின் பார்வையில் தோழர் என்ற சொல் யாரைக் குறிக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

நடிகை நயன்தாராவை தோழர் நயன்தாரா என விளித்த பா.ரஞ்சித், படத்தின் இயக்குநர் கோபிநயினார் அவர்களின் பெயரைக்கூட குறிப்பிடாமல் இயக்குநர் என்ற பொதுச்சொல்லால் ட்விட்டரில் அறம் பட குழுவினருக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கின்றார். கதைத்திருடர்களிடம் இருக்கும் குற்ற உணர்வுதான், அவரை கோபி நயினார் பெயரைப் பயன்படுத்த தடுக்கின்றது என்பது வெளிப்படை. எப்படி கோபி நயினார் பெயரைப் பயன்படுத்தாதது அயோக்கியத்தனமான செயலோ, அதைவிட பெரிய அயோக்கியத்தனமான செயல் நயன்தாராவை 'தோழர் நயன்தாரா' என ரஞ்சித் அழைத்திருப்பது. அம்பேத்கரின் கொள்கைகளை கடைபிடிப்பதாய்ச் சொல்லும் ரஞ்சித்துக்கு நயன்தாரா தோழராகத் தெரிகின்றார் என்றால் அவர் உள்வாங்கிக்கொண்ட அம்பேத்கரிய சிந்தனையின் லட்சணம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

இன்று தமிழ்நாட்டில் தோழர் என்ற வார்த்தை மட்டும் தான் இடதுசாரி சிந்தனையாளர்கள் தங்களுக்குள் விளித்துக் கொள்ளும் ஒரு கெளரவமான சொல்லாக இருக்கின்றது. இனிமேல் அதுவும் கூட இல்லாமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டு இருக்கின்றது. இதை நிச்சயம் அனுமதிக்க முடியாது. கழிசடைகளையும், உலுத்துப் போனவர்களையும், பிழைப்புவாதிகளையும் அன்போடு விளிக்க அயோக்கியர்களுக்கு ஆயிரம் சொற்கள் இருக்கின்றன. எனவே ‘தோழரை’ விட்டுவிடுங்கள் என்பதுதான் நமது அன்பான வேண்டுகோள். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. நம் முன்னால் கண்டிக்கப்பட வேண்டியதும், போராடி பெற வேண்டியதுமான உயிர் போகும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் எல்லாம் கண்டுகொள்ள ஆள் இல்லாமல் இன்று தலைதூக்கி நிற்கின்றது. அதில் கொஞ்சம் இடதுசாரி சிந்தனைகொண்டவர்கள் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும். அதை எல்லாம் விட்டுவிட்டு பிழைப்புவாத கூத்தாடிக் கும்பல் தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக செய்யும் தந்திரங்களை உண்மை என்று நம்பி, அதற்காக நேரத்தையும், உழைப்பையும் வீணாக்குவது அறிவீனமாகும். சில பேர் தெரியாமல் இதைச் செய்கின்றார்கள், ஆனால் பல பேர் தெரிந்தே விளம்பர நோக்கில் நக்கிப் பிழைக்கும் நோக்கில், இதனால் எதாவது வரும்படி கிடைக்காதா என இதையே ஒரு தொழிலாக செய்து வருகின்றார்கள்.

கோபி நயனார் ரஞ்சித்தால் மிக மோசமாக ஏமாற்றப்பட்டது ரஞ்சித்தின் கீழ்த்தரமான ஏமாற்று சிந்தனையை எப்படிக் காட்டுகின்றதோ, அதே போல நயன்தாராவை தோழர் என அழைத்தது அவரின் அம்பேத்கரிய சிந்தனையின் புரிதலை பட்டவர்த்தனமாகக் காட்டுகின்றது. அதை விளங்கிக்கொள்ளாமல் ரஞ்சித்தைப் பாராட்டுவதும், நயன்தாராவை தோழர் என ரஞ்சித் அழைத்ததை எந்த விமர்சன கண்ணோட்டமும் இன்றி வழிமொழிவதும் உண்மையில் அப்படி செய்பவர்கள் தோழர் என்ற வார்த்தையின் ஆழமான பொருளை அறியாத, பிழைப்புவாதத்திற்காக இடதுசாரி வேடமிடும் போலிகள் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- செ.கார்கி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 மகிழ்நன் 2017-11-17 19:22
தோழர் என்ற சொல் அரசியல் உள்ளடக்கத்தை முன்வைத்து, யாரை அழைக்கலாம், யாரை அழைக்கக் கூடாது என்று பேசுவது உங்கள் அரசியல் உரிமை..

தன் மீது எவ்வித அடிப்படை உண்மையுமின்றி
ஒரு போஸ்டரை மட்டுமே பார்த்து காப்பி என்று புகாரளித்துவிட் டு, படம் வெளியானபின் உண்மை அறிந்து அவதூற்றை அவதூறென்று ஒத்துக் கொள்ளாமல், கடந்து போக எத்தனிக்கும் நபரை தோழரென்று அழைப்பதுதான் சரியென்று கருதுவீர்களானால ்... எனக்கு அரசியல்ரீதியாக விளக்குங்கள்.

ஆனால், எவ்வித விசாரணையுமின்றி ,
”கதைத்திருடன்” போன்ற முத்திரையை குத்துவதும், அவதூற்றை பொதி சுமப்பதை போன்று தூக்கி திரிவதும் பொதுவுடமை அரசியலல்ல என்றே கருதுகிறேன்..
Report to administrator
0 #2 மகிழ்நன் 2017-11-17 19:36
//பெரியார் அவர்கள் அந்தக் காலத்தில் ஒருவரை விளிக்கப் பயன்படுத்திவந்த ஸ்ரீ, கனம், திரு, திருமதி போன்ற சொற்களைத் தவிர்த்து தோழர் என்று அழைக்கும்படியே தனது அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கேட்டுக்கொண்டார ், அவரும் அப்படியே அழைத்தும் வந்தார்.//

உங்கள் அணுகுமுறையின்பட ி இடதுசாரி கண்ணோட்டமில்லாத பெரியார்தான் மடையர்களின் முன்னோடி
Report to administrator
+1 #3 நா மணிகண்டன் 2017-11-17 22:44
உங்கள் கட்டுரைகள் நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்
Report to administrator
0 #4 Kallal Anbalagan 2017-11-18 10:24
தென்தமிழ்நாட்டி ல் தமிழ் சமூகங்களின் திருமணங்களில் பன்னெடுங்காலமாக மாப்பிள்ளை தோழன், மணப்பெண் தோழி என்றும், சங்க இலக்கியங்களில் தலைவியின் உடனிருப்பவள் தோழி என்றும் அழைக்கப்படுகிறா ள்! தோழமை, தோழர், தோழன், தோழி என்பதெல்லாம் அரசியலுக்காக மட்டும் பயன்படுத்த படைக்கப்பட்ட சொல்லல்ல!

ஒரு அமைப்புக்குள் இருக்கும் இருவர் தங்களின் நட்பை பாராட்டிக் கொள்ள தோழர் என்று அழைப்பதில் தவறில்லை. திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் அழைத்துக் கொள்வதில் பிழையில்லை. அதை அரசியல் படுத்துவது தான் பிழை. தமிழ் திரையில் எவரும் பாராட்டாத நிலையில், கோபி நயினார் குழுவினரை முதன்முதலில் ரஞ்சித் பாராட்டியது பாராட்டுக்குறிய து. எத்தனையோ பெயரிடம் அறம் படத்தின் கதையைச் சொல்லியும் படமாக்க முன்வராத நிலையில், இயக்குனர் கோபி நயினாருக்கு தோள் கொடுத்து துணைநின்ற நயன்தாராவை "தோழர்" என்றது தவறில்லை!
ஒருவேளை ரஞ்சித் பாராட்டுதல் என்பது கோபி நயினாருக்கு இருந்திருந்தால் அவர்கள் இருவரையும் இங்கே வேரூன்றி இருக்கும் சாதி அடையாளத்தால் பிணைக்கப்பட்டு கடித்து குதறி இருப்பார்கள்.
Report to administrator
-1 #5 viji ambedkar 2017-11-18 11:51
ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி ரஞ்சித். சூத்திர நாய்கள் என்ன முக்கு முக்கினாலும் ரஞ்சித்தை எங்களிடம் இருந்து பிரிக்க முடியாது.. ஏன் டா கார்க்கி நாயே , உனக்கு ரஞ்சித் மேல வன்மம் என்றால் தனியா ஒரு கட்டுரை எழுதுடா.. அதுக்கு கோபி நயினாரை துணைக்கு இழுக்குற, #தோழர் நயன்தாராவை இழிவு படுத்துர?? சன்னி லியோனை தோழர்னு அழைக்க கூடாது எந்த தத்துவம்டா சொல்லுது?? சாதி வெறி பிடித்த நாய்களா...
Report to administrator
-1 #6 Srinivasan 2017-11-18 16:41
தோழர் என்பது பொதுச்சொல்..... உங்கள் கட்டுரை ஏற்கும்படி இல்லை...... எல்லாச்சொல்லுக் கும் தகுதி வேண்டும் என்றால் முதல்வர் என்ற சொல்லுக்கெல்லாம ் தகுதியானவர்கள் தான் இருக்கிறார்களா? உங்கள் கட்டுரை ஏற்கும் படியாக இல்லை......
Report to administrator
0 #7 Aravind 2017-11-18 18:23
"அது எப்படி ! அப்பேர்ப்பட்ட பொம்பளைய தோழர்ன்னு சொல்லலாம்?"

"ஏய் சும்மா இருயா, அவனாவது ஒரு தடவ தான் சொன்னான்..."
Report to administrator
0 #8 Paridhiilaval 2017-11-18 20:51
ரஷ்யாவில் பொருளாதாரம் உடை பட்டு புரட்சி ஏற்பட்ட போது அங்கு வழியின்றி விபச்சாரம் செய்த பெண்கள் தெருவில் காணும்போது அப்பெண்களையும் புரட்சியாளர்கள் "தோழர்" என்று அழைத்த வரலாற்றை எல்லாம் நீங்கள் படிக்கவில்லையோ .. அத்தகைய புரட்சியாளர்களி ல் கண்களில் இருந்த தெளிவு கூட உங்கள் சிந்தனைக்கு இல்லை என நினைக்கிறேன் ..

இங்கே ஆரம்பகால கம்யூனிச, முற்போக்கு சிந்தனையுடயவர்க ளின் தொழில் நாடகத்துறையிலும ் சினிமாத்துறையில ுமே பணியாற்றினார்கள ் என்பதன் வரலாற்றை அறியாதவர் நீங்கள் என்று நினைக்கிறேன் ..

சரி "அறம்" படத்திற்கு வருகிறேன் ,
இந்தப் படம் மனதிலும் எழுத்திலும் உருவாகக் காரணம் தோழர் கோபி நயினார் அவர்கள்தான் ..
"அறம்" இக்கதையின் சொந்தக்காரரும் தோழர் கோபி அவர்கள்தான் ..
ஆனால் எத்தனையோ தயாரிப்பாளர்களி டமும்
திரை அமைப்பாளர்களிடம ும் நடிக நடிகைகளிடமும் கதை சொல்லிச் சொல்லி காலச்சூட்டில் வெந்த கோபியிடம்
நயன்தாரா அவர்கள் இக்கதையின் மேல் நம்பிக்கை வைத்து படம் தயாரிக்க காரணமாய் இருந்தவர் ..
படம் முந்த பின்பும் வெளிவரமுடியாத சூழலில் கோபி அவர்கள் சிக்கித் தவித்தபோது அவருக்கு பக்க பலமாக நயன்தாரா இருந்து பல முயற்சிகளை மேற்கொண்டு படம் வெளிவர காரணமாய் இருந்தார் என்பது நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை .. ஆனால் கோபியோடு இருந்தவர்களுக்க ும் அவரோடு சார்ந்த சினிமாத்துறையின ருக்கும் ரஞ்சித் அவர்களுக்கும் நன்கு தெரியும் ..

ஒரு சமூக பொதுவுடைமைச் சிந்தனை கொண்ட ஹீரோயிஸம் இல்லாத திரைப்படத்தை, யாரும் தயாரிக்க முன்வராத திரைப்படத்தை, யாரும் நடிக்கத்தயங்கிய திரைப்படத்தை
துணிச்சலோடு தயாரிக்கவும் நடிக்கவும் முன்வந்த நயன்தாரா அவர்களை "தோழர்" என்று அழைப்பதில் தவறே இல்லை ..
பொதுவுடமைவபொதுவுடமைவாதிகள் மட்டும் தோழர் இல்லை அவர்களின் சிந்தனைக்கு கைகொடுப்பவர்களு ம் "தோழர்" தான் .. இதனை கூட புரிந்து கொள்ளும் பக்குவமில்லாத நீங்கலெல்லாம் "தோழர்" என்ற சொல்லுக்கு விமர்சனம் செய்ய வந்துவிட்டீர்கள ் ..
இதனின் ஆழ்பொருளை விளங்கிக் கொள்ள முடியாத நீங்கள் முற்போக்கு வேடமிட்டு பெண்ணியத்தை கீழ்மை படுத்துகிறீர்கள ்,

ஒரு புரட்சிகர சிந்தனையுள்ள கதையை திரைப்படமாக உருவகம் கொடுக்க காரணியாய் இருந்து நடித்துக்கொடுத் த "தோழர்" நயன்தாரா அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் ..
அப்புறம் ///
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. நம் முன்னால் கண்டிக்கப்பட வேண்டியதும், போராடி பெற வேண்டியதுமான உயிர் போகும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் எல்லாம் கண்டுகொள்ள ஆள் இல்லாமல் இன்று தலைதூக்கி நிற்கின்றது. அதில் கொஞ்சம் இடதுசாரி சிந்தனைகொண்டவர் கள் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்"///
ஒருவேளை நீங்கள் இடதுசாரி சிந்தனை உங்களுக்குமானால
நான் குறியிட்டுக்காட ்டியிருக்கும் உங்களது சொற்களை முதலில் நீங்கள் கடைபிடியுங்கள் ..
பிறகு பிறருக்கு அறிவுரை தரலாம் ..

///. அதை எல்லாம் விட்டுவிட்டு பிழைப்புவாத கூத்தாடிக் கும்பல் தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக செய்யும் தந்திரங்களை உண்மை என்று நம்பி, அதற்காக நேரத்தையும், உழைப்பையும் வீணாக்குவது அறிவீனமாகும்.///
இதற்கு நேரம் ஒதுக்கி பதிவிட்டிருக்கு ம் நீங்கள் எத்தகையவர்..?? மேற்கூறிய ரகம்தானே ..

///
சில பேர் தெரியாமல் இதைச் செய்கின்றார்கள் , ஆனால் பல பேர் தெரிந்தே விளம்பர நோக்கில் நக்கிப் பிழைக்கும் நோக்கில், இதனால் எதாவது வரும்படி கிடைக்காதா என இதையே ஒரு தொழிலாக செய்து வருகின்றார்கள்.///

இப்போ நீங்கள் எத்தகைய நோக்கத்தில் இதனை பதிவிட்டீர்கள் ... நக்கிப்பிழைக்கு ம் நோக்கிலா ....???

ஒரு பக்குவப்பட்ட சிந்தனை என்பது
மூடநம்பிக்கையைய ும், பிற்போக்குத்தனத ்தையும், ஆணாதிக்க சிந்தனையையும், அடிமைத்தனமத்தைய ும் எதிர்ப்பதாகவே இருக்கும்,
சக மனிதரின் பாராட்டுகளை ஜீரணிக்க முடியாமல்
வயிற்றெரிச்சலாக வந்து விழாது பதிவுகள் ...

-பரிதி இளவல்
Report to administrator
-1 #9 ,SURESH NATHAN 2017-11-18 21:01
ஏண்டா எச்ச கார்க்கி நாயே உனக்கு என்னடா அவ்ளோ வெறி எங்க இரஞ்சித்மேல ... ஓஹோ நீ யார்கிட்டயோ கைநீட்டி காசு வாங்கிட்டபோல... ஒரு மயிறையும் புடுங்கமுடியாது ...
இரஞ்சித்தின் "அறம்" வெல்லும்...
Report to administrator
-1 #10 Balasingam 2017-11-18 22:01
இது அப்பட்டமான சாவெறியினால் வந்த கருத்து
Report to administrator
0 #11 Paridhiilaval 2017-11-18 22:06
ரஷ்யாவில் பொருளாதாரம் உடை பட்டு புரட்சி ஏற்பட்ட போது அங்கு வழியின்றி விபச்சாரம் செய்த பெண்கள் தெருவில் காணும்போது அப்பெண்களையும் புரட்சியாளர்கள் "தோழர்" என்று அழைத்த வரலாற்றை எல்லாம் நீங்கள் படிக்கவில்லையோ .. அத்தகைய புரட்சியாளர்களி ல் கண்களில் இருந்த தெளிவு கூட உங்கள் சிந்தனைக்கு இல்லை என நினைக்கிறேன் ..

இங்கே ஆரம்பகால கம்யூனிச, முற்போக்கு சிந்தனையுடயவர்க ளின் தொழில் நாடகத்துறையிலும ் சினிமாத்துறையில ுமே பணியாற்றினார்கள ் என்பதன் வரலாற்றை அறியாதவர் நீங்கள் என்று நினைக்கிறேன் ..

சரி "அறம்" படத்திற்கு வருகிறேன் ,
இந்தப் படம் மனதிலும் எழுத்திலும் உருவாகக் காரணம் தோழர் கோபி நயினார் அவர்கள்தான் ..
"அறம்" இக்கதையின் சொந்தக்காரரும் தோழர் கோபி அவர்கள்தான் ..
ஆனால் எத்தனையோ தயாரிப்பாளர்களி டமும்
திரை அமைப்பாளர்களிடம ும் நடிக நடிகைகளிடமும் கதை சொல்லிச் சொல்லி காலச்சூட்டில் வெந்த கோபியிடம்
நயன்தாரா அவர்கள் இக்கதையின் மேல் நம்பிக்கை வைத்து படம் தயாரிக்க காரணமாய் இருந்தவர் ..
படம் முந்த பின்பும் வெளிவரமுடியாத சூழலில் கோபி அவர்கள் சிக்கித் தவித்தபோது அவருக்கு பக்க பலமாக நயன்தாரா இருந்து பல முயற்சிகளை மேற்கொண்டு படம் வெளிவர காரணமாய் இருந்தார் என்பது நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை .. ஆனால் கோபியோடு இருந்தவர்களுக்க ும் அவரோடு சார்ந்த சினிமாத்துறையின ருக்கும் ரஞ்சித் அவர்களுக்கும் நன்கு தெரியும் ..

ஒரு சமூக பொதுவுடைமைச் சிந்தனை கொண்ட ஹீரோயிஸம் இல்லாத திரைப்படத்தை, யாரும் தயாரிக்க முன்வராத திரைப்படத்தை, யாரும் நடிக்கத்தயங்கிய திரைப்படத்தை
துணிச்சலோடு தயாரிக்கவும் நடிக்கவும் முன்வந்த நயன்தாரா அவர்களை "தோழர்" என்று அழைப்பதில் தவறே இல்லை ..
பொதுவுடமைவபொதுவுடமைவாதிகள் மட்டும் தோழர் இல்லை அவர்களின் சிந்தனைக்கு கைகொடுப்பவர்களு ம் "தோழர்" தான் .. இதனை கூட புரிந்து கொள்ளும் பக்குவமில்லாத நீங்கலெல்லாம் "தோழர்" என்ற சொல்லுக்கு விமர்சனம் செய்ய வந்துவிட்டீர்கள ் ..
இதனின் ஆழ்பொருளை விளங்கிக் கொள்ள முடியாத நீங்கள் முற்போக்கு வேடமிட்டு பெண்ணியத்தை கீழ்மை படுத்துகிறீர்கள ்,

ஒரு புரட்சிகர சிந்தனையுள்ள கதையை திரைப்படமாக உருவகம் கொடுக்க காரணியாய் இருந்து நடித்துக்கொடுத் த "தோழர்" நயன்தாரா அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் ..
அப்புறம் ///
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. நம் முன்னால் கண்டிக்கப்பட வேண்டியதும், போராடி பெற வேண்டியதுமான உயிர் போகும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் எல்லாம் கண்டுகொள்ள ஆள் இல்லாமல் இன்று தலைதூக்கி நிற்கின்றது. அதில் கொஞ்சம் இடதுசாரி சிந்தனைகொண்டவர் கள் கவனம் செலுத்தினால் சிறப்பாக இருக்கும்"///
ஒருவேளை நீங்கள் இடதுசாரி சிந்தனை உங்களுக்குமானால
நான் குறியிட்டுக்காட ்டியிருக்கும் உங்களது சொற்களை முதலில் நீங்கள் கடைபிடியுங்கள் ..
பிறகு பிறருக்கு அறிவுரை தரலாம் ..

///. அதை எல்லாம் விட்டுவிட்டு பிழைப்புவாத கூத்தாடிக் கும்பல் தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக செய்யும் தந்திரங்களை உண்மை என்று நம்பி, அதற்காக நேரத்தையும், உழைப்பையும் வீணாக்குவது அறிவீனமாகும்.///
இதற்கு நேரம் ஒதுக்கி பதிவிட்டிருக்கு ம் நீங்கள் எத்தகையவர்..?? மேற்கூறிய ரகம்தானே ..

///
சில பேர் தெரியாமல் இதைச் செய்கின்றார்கள் , ஆனால் பல பேர் தெரிந்தே விளம்பர நோக்கில் நக்கிப் பிழைக்கும் நோக்கில், இதனால் எதாவது வரும்படி கிடைக்காதா என இதையே ஒரு தொழிலாக செய்து வருகின்றார்கள்.///

இப்போ நீங்கள் எத்தகைய நோக்கத்தில் இதனை பதிவிட்டீர்கள் ... நக்கிப்பிழைக்கு ம் நோக்கிலா ....???

-பரிதி இளவல்
Report to administrator
0 #12 SUBASH 2017-11-19 11:08
https://www.savukkuonline.com/12697/

மிக அருமையான கட்டுரை கார்க்கி., வாழ்த்துகள்., ரஞ்சித் போஸ்டரையா காப்பி அடித்தார் ? கதை, காட்சிகள் எல்லாம் தான்.,

ஒரு தலித் திருடனாக இருந்தால் அவன் தலித் என்பதற்காக உயர்த்தி பிடிக்க வேண்டுமா ?

போலிகள் நீண்ட நாள் முகமூடி அணிய முடியாது., முகமூடி கிழிந்து விடும்., ரஞ்சித்துக்கு கிழிந்து தொங்குகிறது.,
Report to administrator
-1 #13 ஆர்.தியாகு 2017-11-20 12:56
மகிழ்நன்@ ஒரு திருடன் தப்பிவிடுகிறான் என்பதால் மட்டும் அவன் யோக்கினாக மாறிவிடமாட்டான் . கதை திருட்டில் தப்பித்தாலும் அல்லது சமாதானமாக பேசி முடிக்கப்பட்டிர ுந்தாலும் தான் ஒரு திருடன் என்பதை "இயக்குநர் பெயர் குறிப்பிடாமல் தோழர் என்று நயந்தாராவை குறிப்பிட்டது" மூலம் திருடன் என்பதை எவ்வளவு ஆதாரமாக இருக்கிறது.
Report to administrator
+1 #14 naanmani 2017-11-20 16:28
அதெல்லாம் இருக்கட்டும்.. இந்த படம் பொதுவுடமை கருத்தை பேசுகிறதா அல்லது பாசிச ஆட்சி வேண்டும் என்கிறதா என்பது தெரியாமல் பேசும் உங்க எல்லோரையும் என்ன சொல்றது.. தோழர் னா.. அப்போ நீங்க சகாயம் ஐ ஏ எஸ் க்குதான் தோழரா இருக்க முடியும்.
Report to administrator
+1 #15 ARASU 2017-11-21 06:56
முதலில் அன்பர் கார்க்கி அவர்களது கட்டுரைக்கு விமர்சனங்களும், ஆதரவு கருத்துக்களும் வந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது.சமூக த்திற்கு எள்ளின் முனை அளவு கூட பயனளிக்காத நிகழ்வுகள் குறித்து மணிக்கணக்கில் தொலைக்காட்சி விவாதங்கள் நடந்து கொண்டுள்ள இந்த காலக்கட்டத்தில் ,அறம் திரைப்படம் குறித்து விவாதம் நடப்பது மகிழ்ச்சியே!
அன்பர் கார்க்கி அவர்களின் கட்டுரைகள் எப்பொழுதுமே சற்று கார சாரமான வார்த்தைகளில் அமைத்திருக்கும் ,ஆனால் கருத்துக்கள் ஆழமாக இருக்கும்.எனக்க ு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் தொடர்ந்து படித்து வருகிறேன்.
அன்பர் கார்க்கி அவர்களைப்பற்றி எனக்கு அறிமுகம் இல்லாததால் அன்பர் என்று நான் பயன்படுத்தவேண்ட ிய நிலை!
பொதுவாக இன்றைய திரைப்படங்கள் குறித்து நான் ஆர்வம் கொள்வதில்லை.கார ணம் திரைப்படத்துறை சீரழிக்கப்பட்டு விட்டது,மக்களை மடையர்களாக,தமிழ க மக்களின் போர்க்குணத்தை மடைமாற்றம் செய்வது,ஆபாசக்க ுப்பைகளை மக்களின் மனதில் திணிக்கும் மட்டமான வேலைகளை தொடர்ந்து பல வருடங்களாக செய்து வருவது உண்மை!பணம் ஒன்றே குறிக்கோள் என்ற நிலை.போலியான முற்போக்குவாதிக ளின் புகலிடமாக மாறிவிட்ட நிலை.,சாதி அடிப்படையில் கலைஞர்களை முன்னிறுத்தும் போக்கு அதிகரித்துவிட்ட யதார்த்தம்!
இந்த நிலையில்,அன்பர் கார்க்கி அவர்களின் விமர்சனத்தைப் படித்தவுடன் அறம் படத்தைத் திரையரங்கில் பார்த்தேன்.
இன்றைய மோசமான இந்திய,தமிழக அரசியல் நிலையை அப்பட்டமாக படமாக்கி உள்ள இயக்குநர் கோபி நயினார் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.ஒரு,டாகும ெண்டரி படம் போல இருந்துவிடுமோ என்ற எண்ணம் ஆரம்பத்தில் தோன்றினாலும்,இய க்குனர் முழுமையான வெற்றிபெற்றுள்ள ார்.வாழ்த்துக்க ள்.பாராட்டுக்கள ்.
நடிகை நயந்தாரா அவர்களின் நடிப்பு,அவரை நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுக்கொடுத்த ுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.ஆனால், ஒரு முன்னணி நடிகை,கவர்ச்சிக ் கன்னியாகவே வலம் வந்த அவர், தனது எதிர்காலம் குறித்த பய உணர்வு இல்லாமல் இந்த கதைக்களத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பாராட்டிக்குரிய தே! ஆனால் அதற்காக அவருக்கு மிகப்பெரிய முற்போக்கு முத்திரை அளிப்பது சரியல்ல.இந்த உணர்ச்சி வசப்படுதல்தான்
தமிழர்களின் மிகப்பெரிய பலவீனம். அவரைத் தோழர் என்று அழைப்பது உணர்ச்சிவசப்பட் டு கூறும் வார்த்தைகள்.
Report to administrator
0 #16 naanmani 2017-11-25 23:29
https://naanmani.wordpress.com/2017/11/25/aram-seya-virumpu/ இந்தப்படம் மக்களின் பக்கம் நிற்கவில்லை. பாஜக போன்ற வலதுசாரி கட்சிகளுக்கு உவப்பான அல்லது அவர்கள் விரும்பும் படம் தான் இது. வேல ராம மூர்த்தி என்ற குறியீடு ஒருவகையில் இன்றிருக்கும் அரசியல் கட்சிகளின் குறிப்பாக திராவிட கட்சிகளின் படிக்காத ஆனால் அதனாலேயே ‘திருடர்கள்’ என நடுத்தர வர்க்கம் பார்க்கும் பிரதிநிதிகள் தான். தாமரை மலர வேண்டுமானால் படித்த ‘திருடர்கள்’ வர வேண்டும் என்பது தான் மோடியின் டிஜிட்டல் இந்தியா. டாக்டர் இஞ்சினியர் ஐஏஎஸ் என பலரும் அரசியலுக்கு வர வேண்டும் என பாசிஸ்டுகள் பிரச்சாரம் செய்வதை அறம் கோபி மிச்சப்படுத்திய ிருக்கிறார் இந்த விளம்பர படம் மூலம்.
Report to administrator
-1 #17 saravanan s 2017-11-26 20:34
தோழர் என்ற சொல்லைக் கொள்கைக்காக மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது ஏற்புடையதல்ல. நயன்தாராவைத் தோழர் என்று சொல்லக் கூடாதா? தங்களின் பார்வைக்கு சன்னிலியோன், ஷகிலா மட்டும் தான் தெரிகிறார்களா? எம்ஜியார், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர் ஆபாசமாக நடிக்கவில்லையா? அம்பேத்கரியம் பேசிக் கொண்டு ஒருவன் வருகிற போது அவனைக் குறி வைக்க வேண்டிய தேவை என்ன? அம்பேத்கரைக் கூட தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பேசிவிடக் கூடாதா? அதைக் கூட பெரியாரியவாதிகள ும் மார்க்ஸியவாதிகள ும் மட்டும் தான் பேச வேண்டுமா? ரஞ்சித் மீது இவ்வளவு கோபம் எதற்காக? கோபி நயினாருக்கும் ரஞ்சித்துக்கும் இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லையே? இவர்களைப் பிரித்து விட வேண்டும் என்கிற வன்மம் எதற்காக?
Report to administrator

Add comment


Security code
Refresh