ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தேறிகள் என்ற வாதம் தொடர்ச்சியாக ஆரியர்கள் அல்லாதவர்களால் குறிப்பாக திராவிடர்களால் முன் வைக்கப்பட்டு வருகின்றது. திராவிடம் என்ற அடையாளத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களும் ஆரிய மேலாண்மையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களும் ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தேறிகள் என்ற கோட்பாட்டை தொடர்ச்சியாக எதிர்த்து வந்திருக்கின்றார்கள்,இல்லை திராவிடம் என்ற கோட்பாட்டை எதிர்த்து வந்திருக்கின்றார்கள். இன்னும் சில பேர் ஆரியம் என்பதும் திராவிடம் என்பதும் போலியாக தோற்றுவிக்கப்பட்ட வாதம் என்றுகூட சொல்லிவருகின்றார்கள். ஒவ்வொரு கோட்பாடும் தன்னை மெய்பித்துக்கொள்வதற்கான ஆதாரங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. சில மொழி அடிப்படையிலும் சில தொல்பொருள் ஆய்வுகள் அடிப்படையிலும் சில புராணங்கள், இலக்கியங்கள் அடிப்படையிலும் இன்னும் சில எந்தவித அடிப்படையும் அற்ற போலியான அறிவியலின் துணையுடனும் தங்களுக்கான ஆதாரங்களைக் கட்டமைத்துள்ளன. இதில் நமக்குத் தேவையான அடையாள முன்நிறுத்தலை நாம் முதன்மையாக அறிவியல் அடிப்படையிலும் மற்ற புரண இதிகாசங்கள் என்பவைகளை இரண்டாம் பட்ச ஆதாரங்களாகவும் கொண்டு அதன் அடிப்படையில் செய்வது எப்போதுமே பாதுகாப்பானாது மற்றும் ஆதார பூர்வமானது.

 ஆங்கில இந்து நாளிதழில் 17/06/2017 அன்று டோனி ஜோசப் என்பவர் டிஎன்ஏ அடிப்படையில் இந்தியாவில் ஆரியர்களின் வருகை என்பது நிச்சயம் நடந்த ஒன்று என்று மெய்ப்பிக்கும் ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கின்றார். அதில் தந்தைவழியில் கடத்தப்படும் Y குரோமோசோம்களை அடிப்படையாக வைத்து ஆரியர்களின் வருகை என்பது இந்தியாவிற்கு வெளியில் இருந்துதான் நிச்சயம் நிகழ்ந்தது என்பதை நிறுவியிருக்கின்றார். இதுநாள்வரை பெண்களின் தாய்வழி மரபணுக்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் சரியான முடிவை எட்ட முடியவில்லை அதற்குக் காரணம் ஆரியர்களில் ஆண்களே பெரும் அளவில் புலம் பெயர்ந்து வெண்கல யுகத்தில் வந்ததே காரணம் ஆகும். தற்போதைய ஆய்வுகள் தந்தைவழி குரோமோசோம்களான Y யின் அடிப்படையில் நடத்தப்பட்டிருப்பதால் ஆரியர்களின் வருகைப்பற்றிய அடிப்படையான ஆதார உண்மை கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் Y டிஎன்ஏக்களின் ஆய்வில் 17.5% சதவீத இந்திய ஆண்கள் ஹப்லோ க்ரூப் எனப்படும் ஆர்1ஏ என்ற பிரிவினர் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆர்1ஏ என்ற பிரிவினர் மத்திய ஆசியா, அய்ரோப்பிய மற்றும் தெற்கு ஆசியாவில் விரவி இருக்கின்றார்கள்.

 வெண்கல யுகத்தில் மத்திய ஆசியாவில் நிகழ்ந்த புலப்பெயர்வு ஆண்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை டிஎன்ஏ முடிவுகள் காட்டுகின்றன. மேலும் பண்டைய இந்தோ ஆசிய இனத்தின் பாகுபாடுள்ள சமூக அமைப்பையும் இது காட்டுகிறது என்கின்றார் இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்டின் பி. ரிச்சர்ட்ஸ். ஆர்1ஏ பிரிவில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. ஒன்று Z282, Z93. இதில் Z282 அய்ரோப்பாவுக்குள் மட்டுமே பிரிந்துசென்றனர். Z93 என்ற பிரிவினர் மத்திய ஆசியாவிற்கும் கிழக்கு ஆசியாவுக்கும் பரவினர். மேலும் Z93ந் மூன்று துணை பிரிவினர் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்  இமாலய பகுதியில் பரவினர். இதற்கு முந்திய ஆய்வுகளில் ஆர்1ஏ பிரிவினர் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டு அங்கிருந்து பரவியதாக கருதப்பட்டனர். அந்தக் கருத்தை தற்போதைய ஆய்வு முடிவுகள் தகர்த்திருக்கின்றது என்கின்றார் அறிவியலாளர் பீட்டர் அண்டர்ஹில்.

 பீட்டர் அண்டர்ஹில்லுடன் இணைந்து டேவிட் போஸ்னிக் 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட  ஒரு ஆய்வு முடிவில் Z93 பிரிவினர் பரவல் 4000 லிருந்து 4500 ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என்கின்றன. அதாவது 4000 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி நாகரிகம் அழியும் தருவாயில் இந்தப் பிரிவினர் வருகை நடந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர் வருகையால்தான் அழிந்தது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லை என்கின்றார் கட்டுரையாளர் டோனி ஜோசப். ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே காலத்தில் நடந்தேறியிருக்கின்றன என்பதையும் சுட்டுகிறார்.( (நன்றி: the times tamil)

  இந்த ஆய்வு முடிவுகள் ஆரியர்கள் வந்தேறிகள் என்ற கோட்பாட்டுக்கு மிகப் பெரிய வலிமை சேர்த்து இருக்கின்றன. ஏற்கெனவே தொல்லியல் ஆய்வுகள் அடிப்படையிலும், வேதங்களின் அடைப்படையிலும் , மொழி அடிப்படையிலும் அவை நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியன் அய்ரோப்பிய மொழி பேசிய ஆரியர்கள் மத்திய ஆசியாவை தங்கள் பூர்வீகமாக கொண்டவர்கள் .அவர்கள் கால்நடை மேய்ப்போராக புல்வெளிகளைத் தேடி பல இடங்களுக்கும் பரவினர் மேலும் சரக்குகளை சுமந்து செல்லும் வேலைகளையும் அவர்கள் செய்துவந்தனர். அவர்களில் சிலர் அனடோலியாவிற்கு புலம் பெயர்ந்தார்கள். சிலர் ஈரானுக்கு புலம் பெயர்ந்தார்கள். அப்படி ஈரானில் நுழைந்தவர்களில் சிலர் இந்தியாவிற்கு வந்ததாக கருதப்படுகின்றது. அவர்களால் பாடப்பட்ட நூல்களில் அதாவது ஈரானில் அவெஸ்தா, இந்தியாவில் ரிக்வேதம் ஆகியவற்றில் தங்களை ஆய்ரிய, ஆரிய என்றழைத்துக்கொண்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதனை அய்ரோப்பியர்கள் ஆரியன் என்றனர். மேலும் ஹாரப்பா நாகரிகம் மனுவின் ஆட்சிக்குத் தடயம் எதனையும் வழங்கவில்லை என்றும் வேதத் தொகுதிக்கும் அடையாளம் எதுவுமில்லை என்றும் என்று  வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் தன்னுடைய முற்கால இந்தியா என்ற நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் இந்தோ ஆரியன் மொழியை பேசிய மக்கள் குழுக்கள் சிறிது சிறிதாக இந்திய ஈரான் எல்லைப்பகுதியிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் வட இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்தனர். ஆரியமொழி பேசியவர்கள் வெளியிலிருந்து இந்தியாவிற்குள் வந்தவர்கள் என்னும் கருத்தை எதிர்ப்பவர்களிடையே அது படையெடுப்பு, புலம் பெயர்தல் அல்ல என்னும் போக்கு இருக்கின்றது. படையெடுப்பில் ஈடுபட்ட அமைப்பு மற்றும் செயல்பாடுகள் என்பதுபோல அல்லது அதன் விளைவாக ஏற்பட்ட சமூகப்பாங்கு மற்றும் வரலாற்று மாற்றங்கள் என்பதுபோல ஏதாவது ஒரு முன்நிபந்தனை இருந்திருத்தல் வேண்டும் என்று பார்க்கும் போது வரலாற்றுரீதியாக படையெடுப்பு என்பதும் புலம்பெயர்தல் என்பதும் வெளிப்படையாக வேறுபாடுடையவை. உள்ளே நுழைந்த குழுக்கள் மிகச்சிறியவையாக இருந்திருத்தல் வேண்டும்.ஏனெனில் மிகப்பெரிய புலம்பெயர்தலுடன் தொடர்புடைய பெருமளவு கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டன என்பதற்குச் சான்றுகள் இல்லை

 ஆனால் மொழிச்சான்றுகள் உறுதியாக நிற்கின்றது. இந்திய ஆரியன் மொழி இந்திய அய்ரோப்பிய மொழிகளின் கூட்டத்தைச் சேர்ந்தது. மேற்கு ஆசியாவிலும் ஈரானிலும் வழங்கிய மொழிகளுடனும் பிற்காலத்தில் அய்ரோப்பாவில் உருவான மொழிகளுடனும் மொழி உறவு இருக்கின்றது. இந்திய ஆரியன் பழைய ஈரானிய மொழியோடு நெருங்கிய உறவுடையது. அதனுடைய காலம் கி.மு.இரண்டாம் ஆயிரமாவது ஆண்டு. இந்தக்காலப்பகுதியில்தான் சிந்துசமவெளி நாகரிகமும் அழிந்தது. அவெஸ்தாவிலுள்ள ஒரு புராணக்கதை ஈரானிய மண்ணிலிருந்து சிந்துவெளிக்கு திரும்பத் திரும்ப இடப்பெயர்வுகள் நடந்ததை குறிக்கின்றது. மக்கள் தொகையும் விலங்குகளின் தொகையும் மிகுதியானதால் ஏற்பட்ட இட நெருக்கடியைச் சமாளிக்க இடம்பெயர்தல்கள் நடைபெற்றதை விளக்குகின்றன.  ரிக்வேதமும் அப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் நெருங்கிய அண்மையைக் குறிக்கின்றது.

 அவெஸ்தாவில் வருகிற ஹோமா, தாஹா, ஹெப்டா, ஹிந்து, அஹூரா என்ற சொற்கள் முறையே ரிக் வேதத்தில் சோமா, தாசா, செப்தா, சிந்து, அசுரா என்று நிலைமாறாமல் வருகின்றன. சமயக்கொள்கைகளைப் பொறுத்தவரையில் கடவுள்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ள குணங்கள் அடிக்கடி தலைகீழாக வருகின்றன. அவ்வழியில் இந்திரன் அவெஸ்தாவில் ஒரு அரக்கன், ரிக் வேதத்தில் ஒரு தேவன்.ஆஹூரா-அசுரா மிக உயர்ந்த தெய்வமாக வெளிப்படுகின்றது. இது பழைய ஈரானியர்களும் இந்திய ஆரிய மொழி பேசியவர்களும் ஒற்றைக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்னும் கொள்கைக்கு இட்டுச் செல்கின்றது.

 மேலும் ஹாரப்பா நாகரிகத்தின் முக்கியமான குணாதிசயங்கள் என்று எவற்றை அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்களோ அவை ரிக் வேதத்தில் இல்லையென்பதையும் கண்டார்கள். அவற்றில் சில. அவர்களுடைய நகரமைப்புத் திட்டத்தில் குறுக்கும் நெடுக்குமான பாங்கில் உருவான நகரங்கள், விரிந்த அளவில் மண் செங்கற்களாலான மேடைகள், அம்மேடைகளை அடிப்படையாகக் கொண்ட மிகப்பெரிய கட்டிடங்கள் பிரம்மாண்டமான நினைவுக்கட்டிடங்கள், சிக்கல்வாய்ந்த புரங்கள், நுண்மைவாய்ந்த சாய்க்கடை வழி அமைப்புத் திட்டம், மண்செங்கற்களையும் சுட்ட செங்கற்களையும் கட்டிடங்களுக்குப் பயன்படுத்துதல், தானியக்களஞ்சியங்கள் அல்லது கிடங்குகள், சடங்கிற்காக ஒரு குளம், செம்பு வார்ப்பிலிருந்து உற்பத்தி செய்வதோடு தொடர்புடைய விரிந்த அளவில் மேற்கொண்டிருந்த கைவினைப் பொருள்களின் செயல்பாடுகள் செதுக்கப்பட்ட ஸ்படிகக்கல்லின் உருள்மணிகள், சவர்க்காரக் கல்லில் வெட்டப்பட்ட முத்திரைகள், பெண் தெய்வங்களாகக் கருதப்பட்ட மண்ணினால் செய்யப்பட்ட பெண் உருவச்சிலைகள் போன்றவை ஆரியர்களின் ரிக் வேதம் அறியாதது ஆகும்.மேலும் புலியும் காண்டாமிருகமும் ஆரியர்கள் அறியாத ஒன்று. இவை ஹாரப்பா முத்திரைகளில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டு விலங்குகள் பற்றி ரிக் வேதத்தில் எங்குமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 இவை மட்டும் அல்லாமல் பல நூற்றுக்கணக்கான தொல்லியல் சான்றுகளின் அடிப்படையிலும் வேதங்களின் அடிப்படையிலும் ரொமிலாதாப்பர் அவர்கள் ஆரியர்களின் வருகையைப் பற்றி நிறுவியிருக்கின்றார். தற்போதைய கண்டுபிடிப்புகள் ரொமிலாதாப்பரின் கருத்துக்குக் கூடுதலான வலிமையைச் சேர்த்திருக்கின்றது. இதன் மூலம் இந்த நாட்டை சொந்தம் கொண்டாட நினைக்கும் ஆரிய வந்தேறிகளின் கள்ளத்தனமான மோசடியான முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஆரியர்கள் வந்தேறிகள் என்பது உண்மை என்றால் அவர்கள் உருவாக்கிய வேதங்கள் புராணங்கள், இதிகாசங்கள், தர்ம சாஸ்திரங்கள் அனைத்தும் இந்த மண்ணுக்குத் தொடர்பற்றவை என்பதையும் அவை எல்லாம் இந்த மண்ணில் பூர்வகுடி மக்களை ஏய்த்துப் பிழைப்பதற்காக ஆரியர்கள் உருவாக்கிய அசிங்கங்கள் என்பதும் இதன் மூலம் நிறுவப்படுகின்றது.

 உண்மையிலேயே இந்த முடிவுகள் மகிழ்ச்சியைத் தருகின்றது. பார்ப்பன பயங்கரவாதிகள் உருவாக்கிய குப்பைகளை எதிர்ப்பவர்கள்  அனைவரையும் தேசதுரோகிகள் என்று முத்திரை குத்திய இவர்களுக்கான தேசமே இது கிடையாது என்னும் போது அடுத்தவனைப் பார்த்துத் தேசத்துரோகிகள் என்று சொல்ல எந்த யோக்கியதையும் அற்றவர்களாக இன்று மாறியிருக்கின்றார்கள் பார்ப்பன பயங்கரவாதிகள். இந்த மண்ணின் பூர்வகுடி மக்களை வேசி மக்களாக(சூத்திரன்) பஞ்சமர்களாக மாற்றி இத்தனை நாட்களாக வயிறு வளர்த்துவந்த இந்தக் கும்பலின் கொட்டத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இனி எந்தப் பார்ப்பனனாவது இந்த மண்ணின் பூர்வகுடி மக்களை பார்த்துத் தேசதுரோகி என்று சொன்னால் அதற்கான விலையை அவர்களுக்கு இந்த மண்ணின் தன்மானமுள்ள பூர்வகுடி மக்கள் உடனே கொடுத்துவிட வேண்டும். ஆரியர்களின் வேதங்களையும், புராணங்களையும், இதிகாசங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் நெருப்பிட்டுத் திராவிட மக்கள் எரிக்க வேண்டும். பார்ப்பனியத்தைக் கடைபிடிப்பதைத் தன்னுடைய சுயமரியாதைக்கும் தன்மானத்திற்கும் இழிவான ஒன்றாக பார்க்க வேண்டும்.

 தமிழ்நாட்டில் ஒழுங்காக இருக்க வேண்டும் என்றால் இந்த மக்களின் பழக்க வழக்கங்களுடன் ஒத்திசைந்து வாழ ஆரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு மாட்டுக்கறி தின்னக்கூடாது, பாரத்மாத கீ ஜே சொல்லவேண்டும், இந்திபடிக்க வேண்டும், சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று தனது மாமா வேலையையும், இன துரோக வேலையையும் செய்துகொண்டு இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயிலும் இருந்து பார்ப்பனர்களை வெளியேற்றுவதுடன் அவனின் கடவுள்களையும் அழித்து திராவிட மக்கள் சுயமரியாதையுடன் வாழ வழி  ஏற்படுத்த வேண்டும். பெரியார் சொன்னது போல திராவிட இனத்தை ஒன்றிணைத்து ஆரியத்துக்கு எதிரான போரை நாம் தொடங்கவேண்டும். தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றில் உள்ள சமஸ்கிருத சொற்களை நீக்கிவிட்டு அவை அனைத்துமே தமிழ் மொழியே என்று நிறுவி  ஒரு ஒன்றுபட்ட திராவிட இனத்தின் பூமியை உருவாக்க பெரியாரிய இயக்கங்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். இந்த மண்ணின் பூர்வகுடி மக்களின் பண்பாடுகளையும், நாகரிகத்தையும் அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் பார்ப்பன கும்பலுக்குச் சரியான புத்தி புகட்ட வேண்டும்.

- செ.கார்கி

Pin It