“தமிழே இருபத்தியோறாம் நூற்றாண்டில் உன் பெயர் அறிவியல் தமிழ்” என்கிறான் ஒரு புதுக்கவிஞன். தமிழில் இயல், இசை, நாடகத்தைக் காட்டிலும் அறிவியல் விரைந்து வளர்ந்தோங்க வேண்டும் என்பதே, அக்கவிஞனின் கருத்தாகும். தமிழ் நாட்டில் அறிவியல் அறிஞர்களிடையே தமிழார்வம் மிகுந்து வருவதும், தமிழ்ப் பல்கலைக் கழத்தில் அறிவியல் தமிழ்த்துறை இயங்கிவருவதும், தமிழ் அறிவியல் மயமாக்கப்படும் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்தி வருகின்றன.

‘தமிழ்மக்கள் அறிவியல் வளர்ச்சிப் போக்குகளைத் தம் மொழிமூலம் அறிந்து அறிவியல் விழிப்புணர்வு பெற்றுத் தம்வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்பார். டாக்டர் இராம சுந்தரம். இதற்கேற்ற வகையில் தமிழில் அறிவியல் கலைச்சொல்லாக்க முயற்சிகளும் அறிவியல் நூல்களை வெளிக்கொணரும் முயற்சிகளும் முன்பு எப்போதுமிருந்ததைக் காட்டிலும் இப்போதுமிகுந்து காணப்படுகின்றன. இதற்கு கலை இலக்கியங்களும் தம்மாலான பங்கினை ஆற்றி வருகின்றன. உலகம் நித்தம் நித்தம் புதிய புதிய அறவியல் சிந்தனைகளால் புத்துருவாக்கம் பெற்று வருவதை வெளிபடுத்திக் காட்டுவதில் புதுக்கவிதைக் முன்னணியில் நிற்கின்றன. கணிப்பொறி முதல் இயந்திர மனிதன் வரை அனைத்து அறிவியல் தொழில் நுட்ப விளைச்சல்களையும் புதுக்கவிதைகள் பதிவு செய்து வருகின்றன. அக் கவிதைகளில் அறிவியல் கலைச்சொற்கள் எவ்வௌ;வகைகளில் பயன் படுத்;தப்படுகின்றன என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நால்வகை நிலைகள்:

 புதுக்கவிதையில் அறவியல் கலைச்சொற்கள் பல்வேறு நிலைகளில் கையாளப்பட்டு வருவதக் காண முடிகிறது. அவற்றுள் கீழ்க்காணும் நான்கு நிலைகள் முதன்மையிடம் பெறுகின்றன.

1. அயன்மொழி நிலை

2. எழுத்துப் பெயர்ப்பு நிலை

3. மொழிபெயர்ப்பு நிலை

4. புதுச்சொல்லாக்க நிலை

அயன்மொழி நிலை:

 புதுக்கவிதகளில் பிறமொழிச் சொற்கள் மிகுந்திருப்பதை அதன் தொடக்கக் கலந்தொட்டு இன்று வரை காணலாம். குறிப்பாக ஆங்கிலச் சொற்கள் அறிவியல் சிந்தனைகளோடு எழுதப்பெறும் புதுக்கவிதகளை மேலண்மை செய்கின்றன. ஆங்கிலச் சொற்களை எழுத்துப் பெயர்ப்பாகவோ, மொழிப்பெயர்ப்பாகவோ தராமல் ஆங்கிலத்தில் அப்படியே எழுதப்படும் அயன்மொழி நிலையைப புதுக்கவிதைகள் காட்டுகின்றன.

 “வானமென்னும் காதலன்
 மின்னலே Flash light ஆக
 கிளிக் என்றே ஒரு snap எடுத்தான்”

என்னும் புதுக்கவிதையில் இரண்டு அறிவியல் கலைச்சொற்கள் ஆங்கிலத்திலேயே எழுதப் பெற்றுள்ளன. இததகைய அயன்மொழிப் பயன்பாட்டு நிலையால் அறிவியல் தமிழுக்கு எவ்வித ஆக்கமும் நேராது. மொழிபெயர்ப்பாகவோ புதுச்சொல் படைக்கவோ சிறுமுயற்சியும் எடுக்காமல் மூளையைக் கச்ககாமல் முத்தமிழ்க் கவிஞனாகிவிடும் போக்கு எதிர்காலத் தமிழன் ஏற்றத்திற்குத் தடைக்கற்களாக அமையும் என்பதில் ஐயமில்லை. தமிழன் நலத்திற்குச் சிறதும் பயன்படாத அயன்மொழி நிலை புதுக்கவிதைகளில் அறவே ஒழிக்கப்பட்டதால் தான் கலைச் சொல்லாக்க முற்சியில் புதுகவிதைகளும் முழுமையாகப் பங்கேற்க இயலும்.

எழுத்துப் பெயர்ப்புநிலை:

 தமிழில் அறிவியல் வளர மொழிபெயர்ப்பு நிலை சிறந்ததோர் அடித்தளம் அமைக்கும். கலைச் சொற்களின் வேரை ஆராய்ந்து அவை எந்தப்பொருளில் உருவாக்கப்பட்டுள்ளன. எனத் தெளிந்து மொழிபெயர்ப்புக் கலைச்சொற்களை உருவாக்கலாம். தமிழில் வழக்கில் உள்ள சொற்களைக் கொண்டே இம்மொழி பெயர்ப்பு நிலையை வளாப்படுத்த முடியும்.

 “வெள்ளைப் புறாக்கள்
 ------------------
 ஏவுகணைத்
 தளங்களில் முட்டையிடும்”.

என்னும் புதுக்கவிதையில் ‘ஏவுகணைத் தளம்’ என்னும் மொழிபெயர்ப்பு சிறப்பாகக் கையாளப்பெற்றுள்ளதைக் காண முடிகிறது.

 சிறந்த மொழிபெயர்ப்புகள் இருந்தும் சாதாரண மொழிபெயர்ப்புச் சொற்களைக் கொண்டும் சில புதுக்கவிதைகள் எழுதப்பட்டு வருகின்றன.

 “அறுக்கப்பட்ட தவளைகளும்
 பூக்களும்
 பௌதிகத் தராகம்
 என்
 கனவுகளைக் காயப்படுத்தி
 உறக்கத்தைத் தண்டித்தன”

என்னும் கவிதையில் ‘இற்பியல் தராசு’ என்று பாடநூல்களில் பயன்படுத்ப்பெறும் கலைச்சொல் தவிர்க்கப்பட்டு ‘பௌதிகத் தராசு’ இடம்பெறுவதைக் காணலாம்.

 மொழிபெயர்ப்பு நிலையில் சிறந்த அறிவியல் கலைச்சொற்கள் பயன்படுத்தப்பெற்றால் அறிவியல் தமிழ் வளர்ந்தோங்க வழி ஏற்படும் எனலாம்.

புதுச்சொல்லாக்க நிலை

 அறிவியல் தமிழ் மேம்பாடடைய புதுச்சொல்லாக்கம் பெரிதும் பயன்படும். ஆனால் புதுக்கவிதைகளில் இப் புதுச்சொல்லாக்கநிலை அருகியே காணப்படுகிறது. இயந்திர மனிதனை ரோபோ என்றே புதுக்கவிதைக் குறிக்கின்றன.

 “பூஜ்யம் வாட்ஸ்
 மின்குமிழியைக் கூடக்
 கொய்து கொள்ளத் துடிக்கிறீர்கள்”

என்னும் புதுக்கவிதையில் ‘மின்குமிழி’ என்ற புதுச் சொல்லாக்கம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. புதுக்கவிஞர்கள் இதுபோன்ற புதுச்சொல்லாக்கப் பணிகளில் இனியேனும் ஈடுபாடு காட்டினால் தமிழும் வளரும். தமிழில் அறிவியலும் செழிக்கும்.

 புதுக் கவிதையில் காணப்படும் நால்வகைக் கலைச் சொல் பயன்பாட்டு நிலைகளில் அயன்மொழி நிலையும் எழுத்துப்பெயர்ப்பு நிலையும் மறைந்து மொழிப்பெயர்ப்பு நிலையும் பெருகினால் அறிவியல் தமிழ் அடுத்த நூற்றாண்டில் தழைத்தோங்கும் எனலாம்.

Pin It