பில்டிங்கும் வீக்கு, பேஸ் மட்டமும் வீக்கு

கட்டுரையை வாசிக்கும் முன்னர் இந்த முன்குறிப்பை மனதில் ஏற்றிக்கொண்டு வாசகர்கள் கட்டுரையைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். எதற்காக இந்த முன்குறிப்பு என்றால் நாம கஷ்டப்பட்டு கண்டதையும் வாசிச்சு கட்டுரை எழுதினால் பிரசுரிக்கும் ஒரே காரணத்திற்காக கீற்று நந்தனுக்கு அத்தனை பெருமையும் போய்ச்சேருகிறது என்பதாலும், சோதாசக்தியின் தயவால் அவர் நோகாமல் நொங்கு தின்ன அனுமதிக்கக்கூடாது என்பதாலும்.

 முன்குறிப்பு்: இந்தக் கட்டுரையில் வரும் அனைத்து கருத்துக்களும் எனக்கு மட்டுமே சொந்தமானவை, இதன் ஒட்டுமொத்த உரிமையாளரும் நானே நானே. இந்தக் கட்டுரைக்கு தோழர் கீற்று நந்தன் அல்லது ரமேசு சொந்தம் கொண்டாடினாலோ அல்லது மற்ற சிலர் இது தோழர் கீற்று நந்தன் அல்லது ரமேசு கட்டுரை என்றாலோ அல்லது அவருக்கும் இந்தக் கட்டுரை மீது அனுபவப்பாத்தியதை உண்டு என்றாலோ மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன் என்று இதன்மூலம் அறிவிக்கிறேன்.

இந்திய மாணவர் சங்கத்தோழர் ஒருவர் மதுரை மாநகர மாவட்டக்குழுவில் இருந்தார். இவர் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர். ஒருமுறை அவருக்கும் இன்னொரு தோழருக்கும் (மாநில அளவில் பொறுப்பில் இருந்த தோழர்) இடையே விவாதம் எழுந்தபோது (அந்த முக்கிய பொறுப்பிலிருக்கும் தோழர் ஒரு பெண்ணை பற்றி பாலியல் ரீதியாக கொச்சையாகப் பேசியதையடுத்து எழுந்த விவாதம் அது) அந்த மாநிலக்குழுத் தோழர் இந்த மருத்துவக் கல்லூரித் தோழருக்கு சப்பைக்கட்டு விளக்கமளிக்க முயற்சித்தபோது, அவர் “தோழர் நான் சொல்வது என்னவென்றால்" என்று சொல்லி ஆரம்பித்தார். அதற்கு இந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சொன்ன பதில் இன்னும் என் மனதில் நிழலாடுகிறது. இவர் சொன்னார். “அய்யா இனிமேல் நீங்கள் என்னை தோழர் என்று அழைக்கவேண்டாம். அதற்குப் பதிலாக என் பெயரை சொல்லி அழையுங்கள், இல்லை, வாடா போடா ஏன் தேவடியாப்பயலே என்றுகூட அழைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். இப்போது வாசகர்களுக்கு தோழர் என்பதின் முக்கியத்துவம் புரியும். ஏனென்றால் இடதுசாரிப் பார்வை என்பதும், தோழர் என்பதும் புரட்சி என்பதும் நம் வாழ்வின் மகத்துவமான வார்த்தைகள். அதுவும் இடதுசாரிகளுக்கு வெறும் வார்த்தைகளைத் தாண்டியும் விரியும் அதன் உள்ளார்ந்த பரிமாணம் நன்றாகவே புரிபடும். அதன் அருமை நம்மைவிட நமது எதிரிகளுக்கு புரிபட்டதால்தான் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சிப்புயல், புரட்சிக்கலைஞர் மற்றும் இன்னபிற புரட்சிகர சொல்லாடல்களும் மற்றும் வந்தவன் போனவன் எல்லாம் தம்மை இடதுசாரி என்று சொல்லிக்கொள்வதும் நடைமுறையில் இன்று நாம் காண்பது. நிற்க.

சோதாசக்தி (ஏன் சோதாசக்தி என்பதற்கான விளக்கம் பின்னால் கொடுக்கப்பட்டுள்ளது) இணையதள வாசகர்களுக்கு மிகவும் பரிச்சையமான பெயர். இவர் சமீபத்தில் தனது இணையதளத்தில் தூற்று.கொம் என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதியிருந்தார். அதில் அவர் கீற்று.கொம் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாகவும் அது பொய்யென்றும் நிரூபிக்க முயற்சித்திருந்தார். அதுபோக தனது இறுதிக்கட்டுரையில் தோழர் சந்திரசேகர ஆசாத்தின் மீதும் தோழர் கீற்று ரமேசின் மீதும் ஒரு முக்கியமான குற்றச்சாற்றொன்றை வைத்துள்ளார். தோழர் ஆசாத் “அன்புத்தோழர் அ.மார்க்சுக்கு… அரசியலை ஆணையில் வைப்போம்” என்னும் தலைப்பில் கீற்றுவில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் என்பது வாசகர்கள் அறிந்த ஒன்றே. சோதாசக்தி தனது கட்டுரையான “அவதூறுகளிலிருந்து வன்முறையை நோக்கி” என்பதில் தோழர் ஆசாத்தும் கீற்று நந்தனும் வன்முறை அரசியலைத் தமக்கெதிராக தூண்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்திருந்தார். ரொம்ப சிம்பிளா சொன்னா சோதாசக்தியை கொலை செய்யத் தூண்டுகிறார்கள்.

அதுபோக இந்தக் குற்றச்சாட்டை சிறிது நாட்களுக்கு முன்பாக தனது முகப்புத்தகத்தில் கீற்றுவில் வெளியான ஒரு வாசகரின் பின்னூட்டத்தை வெளியிட்டதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அந்தப் பின்னூட்டம் என்னவென்றால் “சோபாசக்தி இந்தியா வரட்டும். இவரை உப்புக்கண்டம் போட்டு விடலாம்” என்று ஒரு வாசகர் எழுதியதுதான். (உப்புக்கண்டம் போடுமளவிற்கு இவர் மாமிசம் மட்டுமல்ல, மனித மாமிசமே உபயோகமானதல்ல என்றாலும்…). சரி என்னதான் இந்த பஞ்சாயத்து இந்த பச்சைப்புள்ளைய யார்ருடா மிரட்டினார்கள் என்று சொல்லி நானும் அந்த கட்டுரையைப் படித்தேன். வாசகர்களும் சோதாசக்தியின் அந்தக் கட்டுரையைப் படித்திருக்கலாம் என்றே எண்ணுகிறேன். ஆயினும் மீண்டும் வாசிக்கவும் (மறுபடியும் முதல்லயிருந்தா என்று நினைக்கவேண்டாம். அருள்கூர்ந்து கீழ்க்கண்ட பத்தியையாவது வாசிக்கவேண்டும். அட முணுமுணுனு முணங்காம வாசிங்கப்பா, அவரு படைப்பிலக்கியம் பக்கம் போயிட்டாரு, இனிமே கட்டுரை மாதிரி ரம்பக் கத்தியெல்லாம் இல்ல, படைப்பிலக்கியம் என்னும் வெட்டருவாளால் ஒரே போடுதான்).

“வன்முறை அரசியல் எப்போதும் வானத்திலிருந்து குதிப்பதில்லை. வெறுமனே தனிநபர்களின் அல்லது ஒரு குழுவின் முரட்டுத்தனத்தால் அவை தான்தோன்றித்தனமாக உருவாக்கப்படுவதுமில்லை. அரசியலில் வன்முறைக்கான விதைகளை சொற்களே முதலில் விதைக்கின்றன. வன்முறை மட்டுமல்லாமல் எல்லாவித முற்போக்கு பிற்போக்கு அரசியல் செயற்பாடுகளும் செயல்களில் ஆரம்பிக்காமல் சொற்களிலேயே ஆரம்பிக்கின்றன. சொற்கள் செயற்பாடுகளுக்கான களங்களைத் தோற்றுவிப்பதோடு செயற்பாடுகளுக்கான நியாயங்களையும் ஓயாமல் கட்டியெழுப்புகின்றன.”

மேலே கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள் இன்னும் விளக்கமாக விரிந்து செல்கிறது. அதையும் முடிந்தால் வாசகர்கள் வாசிக்கவும் (முறைக்க வேண்டாம்). சரி இப்போது மேட்டருக்கு வருவோம். வெறும் இணையத்தளத்தில் வரும் வாசகங்கள் எப்படி இவரை குத்தி கிழித்து விடும் என்பதற்கு இவர் உதாரணம் வேறு தருகிறார். அந்த உதாரணம் மேயர் துரையப்பா அழித்தொழித்தல்தான். அதாவது தமிழரசுக் கட்சியினரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் பிரபாகரன் உள்ளடங்கிய இளைஞர்கள் குழாமை துரையப்பாவை அழித்தொழிக்கச் செய்தததாம். சரி வாசித்து முடித்த வாசகர்களுக்கு இன்னொன்றையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். சோதா சக்தி சேனனோடு நடந்த விவாதத்தில் 'தமது பார்வை இடதுசாரிப் பார்வை' என்று இடதுசாரி விளக்கமளிக்கிறார். மேலும் சமீபத்தில் அவரின் முகப்புத்தகத்தில் பேராசான் லெனினின் பிறந்த நாளுக்கு வாழ்த்து வேறு. அதுபோக தான் ஒரு டிராட்சிகியவாதி என்ற தம்பட்டம் வேறு. சரி இவரின் இடதுசாரித்தனம் என்னமாய் இவரின் கட்டுரையில் முக்கியமாக மேலே நாம் கூறியுள்ள பத்தியில் வெளிப்படுகிறது என்பதை நாம் இப்போது பார்த்துவிடலாம்.

shoba_sakthi_cartoon_600

நாம் இவரின் கட்டுரையின் இடதுசாரித்தனத்தின் கோமணத்தை அவிழ்த்தோமென்றால் (எம்மாம் தடவதான் சும்மா கட்டவிழ்க்கிறது?) வரும் அர்த்தம் ரொம்ப எளிது. சொல்லிலிருந்து செயல் பிறக்கும். இந்த கேடுகெட்ட கருத்துமுதல்வாதத்திற்கு உதாரணம் தமிழரசுக்கட்சியும் தோழர் பிரபாகரனுமாம். வாசிக்கும் தோழர்கள் உடனடியாக வாசிப்பதை நிறுத்திவிட்டு திரும்பி நின்று கொண்டு ‘அதால’ சிரிக்கவும். வாசகர்களே இதுதான் நமது சோதாசக்தியின் 'இடதுசாரி'த்தனம். இதுதான் இவரின் பொருள்முதல்வாதம். ஆனால் உண்மையான இடதுசாரித்தனம் என்ன சொல்கிறது என்பதை நாம் மார்க்சின் மேற்கோளிருந்து பார்ப்போம். பேராசான் மார்க்சு சொல்கிறார்.

“என்னுடைய இயக்கவியல் அணுகுமுறை ஹெகலின் இயக்கவியல் அணுகுமுறையிலிருந்து மாறுபட்டது மட்டுமல்ல, அதற்கு நேர் எதிரானதாகும். ஹெகல், கருத்து என்றதன் பெயரில் சிந்தனையின் இயக்கப்போக்கையே ஒரு சுயேச்சையான பொருளாக மாற்றி விடுகின்றார். மேலும், இந்த சிந்தனையின் இயக்கமே யதார்த்த உலகைப் படைத்து விடுகிறது என்றும், யதார்த்த உலகம் என்பதே ‘கருத்தின்’ வெளித்தோற்றம் என்றும் கூறுகின்றார், ஆனால் உலகு பற்றிய என் பார்வை இதற்கு நேர்மாறானதாகும். பொருளியல் உலகத்தை மனித மூளை பிரதிபலித்து எண்ணங்களாக மாற்றுகிறது. மனதிலிருக்கும் எண்ணம் என்பது, பொருளியல் உலகத்தின் பிரதிபலிப்பைத்தவிர, வேறு எதுவுமில்லை.” (மூலதனம்- முதற்தொகுதி)

மார்க்சு சொல்கிறார் “செயலிருந்து சொல் பிறக்கும்” என்று. நம்ம சோதாசக்தி சொல்கிறார் “சொல்லிலிருந்து செயல் பிறக்குமென்று”. அட அறிவுக்கொழுந்தே, இதுதானா உன் இடதுசாரித்தனம். இதுதானா நீ முன்னாள் மாலெக்காரர் அ.மார்க்சிடம் கற்றுக்கொண்ட பாடம். தோழர்களே எனக்கு முன்னாலேயே அந்த சந்தேகம் இருந்தது. அந்த நல்லாயிருந்த மனுசன் உளறிக்கொட்ட ஆரம்பிக்கும்போதே, சரி இவரு இந்த சோதா சக்திக்கு பாடம் சொல்லித்தரல. இந்த சோதா சக்திதான் அ.மார்க்சுக்கு ஊத்திவிட்டு பாடஞ்சொல்லித்தர்ராருன்னு. யாரோட யாரு சேர்ந்து கெட்டாலும் பரவாயில்ல. ஆனா எங்கேயோ போற மாரியத்தா என்மேல வந்து பாயத்தாங்கிற கதையா இவரும் இடதுசாரினு கதைவிட்டு இடதுசாரித்தனத்துக்கு விளக்குமாத்தடி வேறு. இதுல லெனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து வேற. அந்த மனுசன் உயிரோட இருந்தா இந்த நேரம் தூக்கிலேயே தொங்கியிருப்பாரு.

சொல்லிலிருந்து என்னைக்கு செயல் பிறக்கும்? எப்ப பிறந்துச்சு? இந்த பாடத்தை அ.மார்க்சிடம் கற்றிருக்கவே முடியாது. ஏனென்றால் அவரு இப்போது ஒரு வெத்து பெருங்காய டப்பாவாகயிருந்தாலும், மணமாவது மிஞ்சியிருக்கும். இது செத்துப்போன சாய்பாபா வேண்டுமானால் சாகப்போகும்போது சோதாவிடம் சொல்லிவிட்டு போயிருக்கலாம். சோதா தம்பி இப்போ புரியுதா? ஏன் கட்டுரைக்கு தலைப்பு பில்டிங்கும் வீக்கும் பேஸ் மட்டமும் வீக்குன்னு. நீ இன்னும் படிக்கணும் தம்பி. இதுக்குப்பேரு கருத்துமுதல்வாதம். நீ டிராட்சிகிவாதி (டிராட்சிகியின் இறுதி எழுத்துக்களில் கருத்து முதல்வாதக்கருத்துக்கள் மட்டுமன்றி இறுதியில் அவர் அப்பட்டமான வலதுசாரியாக மாறிப்போனது பற்றி பின்னால் பேசுவோம்) என்றும், இடதுசாரி என்றும் தம்பட்டம் அடிக்கிறாயே அதற்கு எதிரானது தம்பி நீ சொன்ன வன்முறைக்கருத்து.

உண்மையைச் சொல்வதென்றால் சோதாவிற்கு அரசியல் புரிதல் ரொம்ப கம்மி. ஆனால் அதை இலங்கை மற்றும் ஈழம் பற்றிய சம்பவங்களைப் பற்றி சும்மா சராமாரியாக அளந்து விடுவதன் மூலமாகவும் நிறைய பேசுவதன் வாயிலாகவும் தனக்கு அரசியல் புரிதல் நிரம்ப இருப்பதாக காட்டிக்கொள்வார் (இவர் அளந்து விடும் சம்பவங்களின் உண்மைகளைப் பற்றியும் பின்வரும் கட்டுரைகளில் காண்போம்). அவ்வளவுதான். ஆனால் ஒரு விடயத்தைப்பற்றி பேசுவதற்கு முன்னால் அந்த விடயத்தை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கப்போகிறோம் என்பது அவசியம். இயக்கவியல் பொருள்முதல்வாத மற்றும் வரலாற்றுப்பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தின் படிதான் ஒருவர் எந்த வரலாற்றையும் பார்க்கவேண்டும். அப்படித்தான் எந்த நிகழ்வையும் பார்க்க முடியும். அப்படி பார்த்தால்தான் அது இடதுசாரிக்கண்ணோட்டம். இல்லாவிட்டால் கோயில்நுழைவு போராட்டத்தின்போது இடதுசாரிகள் மீது பரவலாக ஒரு குற்றச்சாட்டை ஒடுக்கும் சாதியினர் வைப்பார்கள். அதாவது நல்லாயிருந்த ஊருக்குள்ளே வந்து சண்டை இழுத்துவிட்டு போயிட்டான் இந்த கம்யூனிஸ்டு. அந்தக் கதையாய் ஆகிப்போய் விடும். அதுபோன்ற கதையாகத்தான் நமது சோதாசக்தியின் இடதுசாரித்தனமும்.

இடதுசாரித்தனத்திற்கு அடிப்படையான இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டங்களும் சிறிதளவும் இன்றி ஒரு கட்டுரை. பின்பு தான் இடதுசாரி என்ற ஜம்பம் வேறு. சொற்கள், கருத்துக்கள் தான் செயல்களை உருவாக்குகின்றன என்பது கருத்துமுதல்வாதம் என்பதை தோழர் ஸ்டாலினும் நிரூபிக்கிறார். சொற்களின், கருத்துக்களின், கொள்கைகளின், அரசியல் கண்ணோட்டங்களின் முக்கியத்துவத்தை தோழர் ஸ்டாலின் என்றுமே மறுப்பதில்லை. ஆனால் அவர் அக்கருத்துக்கள் செயல்களை உருவாக்குகின்றன என்பதோடு முரண்படுகிறார். சொல்லிலிருந்து செயல் வரும் என்பது கருத்துமுதல்வாதமே என்று தனது புத்தகத்தில் (இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்) விளக்கமாக நிரூபிக்கிறார்.

அதுபோக அரசியலில் வன்முறைக்கான, செயலுக்கான விதைகளை சொற்கள் என்றும் விதைக்காது. உதாரணமாக இருஞ்சியூர் கோபாலகிருஷ்ணனை போட்டுத்தள்ளினார்களே மாலெ தோழர்கள். எந்த சொல்லிலிருந்து பிறந்தது அந்த பாட்டாளிவர்க்க வன்முறைக்கான செயல்? கோபாலகிருஷ்ணனின் ஆதிக்கசாதி கொழுப்பிலிருந்து, அவனின் மக்கள்விரோத செயலிலிருந்து எழுந்தது அந்த பாட்டாளிவர்க்க வன்முறை. மக்கள் எதிர்ப்பு செயலிலிருந்து பாட்டாளி வர்க்க வன்முறைக்கான விதை தோன்றியது அல்லது மக்கள் ஆதரவு செயலிலிருந்து ஆளும் வர்க்க வன்முறைக்கான விதை தோன்றும். இப்போது மேயர் துரையப்பாவின் அழித்தொழிப்பு சம்பவத்தை எடுத்தோமென்று சொன்னால் மார்க்சு சொல்வதைப்போல “பொருளியல் உலகத்தை மனித மூளை பிரதிபலித்து எண்ணங்களாக மாற்றுகிறது.” இலங்கை அரசுப் பிரதிநிதியான‌ மேயர் துரையப்பாவின் செயல்கள் (புறநிலை யதார்த்தம்) இந்த எண்ணத்தை தமிழரசுக்கட்சியினர் மூளையில் பிரதிபலித்து எண்ணங்களாக மாற்றுகிறது. அந்த எண்ணங்கள் சொற்களாக வெளிப்பட்டன.

நடந்த சம்பவத்தை சோதாசக்தி பார்க்கும் கருத்துமுதல்வாதப் பார்வைக்கும் நாம் பார்க்கும் பார்வைக்கும் ஒரு கோடி வித்தியாசங்கள் இருந்தாலும், உதாரணமாக அவர் மேயர் துரையப்பா அழித்தொழிப்பைப் பற்றிப் பேசும்போது ஏதோ தமிழரசுக்கட்சியும் பிரபாகரன் உள்ளடங்கிய குழுவும் மட்டுமே அவரைக்கொல்ல விரும்பியது போலவும் மற்ற ஈழத்து மக்கள் அனைவரும் மேயர் துரையப்பாவை “எங்க முதலாளி தங்க முதலாளி தங்கமனம் சிங்ககுணம் கொண்ட முதலாளி” என்று தோளில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடிப்பாடியதாகவும் சொல்வது, அவரின் கருத்துக்கள் அதாவது சொல்லிலிருந்து செயல் பிறக்கிறது என்று சொல்வது இடதுசாரித்தனமல்ல மற்றும் அவரின் பார்வையே கருத்துமுதல்வாதக் கருத்துத்தளத்தால் ஆனது என்று சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். ஒன்று இந்தக் கருத்தை, பார்வையை அவர் மாற்றிக் கொள்ளட்டும். அப்படி இல்லையென்றால் அவர் தன்னை இடதுசாரி என்று சொல்லிக்கொள்வதை தனது கருத்துக்கள் இடதுசாரிப் பார்வையால் ஆனது என்று சொல்வதை மாற்றிக்கொள்ளட்டும். இரண்டையும் ஒருசேர கைக்கொள்வது மலத்துவாரத்தான் வழியாக உணவு உண்பது என்பதை நாம் மிகுந்த பணிவன்போடு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறோம்.

அதுபோக முதலில் சோதாசக்திக்கு இடதுசாரி அறிவு (இயக்கவியல் பொருள்முதவாத மற்றும் வரலாற்றுப்பொருள்முதல்வாதம் பற்றிய) வேண்டும். அதுதான் பேஸ்மட்டம்; அப்புறம் தான் அவரின் கட்டுரை இடதுசாரிப்பார்வையோடு கூடிய அரசியல் கட்டுரையாக முடியும். பேஸ்மட்டம் ஸ்டிராங்கா இல்லாம பில்டிங்கும் ஸ்டிராங்கா இருக்கமுடியாது. பில்டிங் ஸ்டிராங்கு; பேஸ்மட்டம் வீக்கு என்பது வடிவேலு காமெடிக்கு வேணும்னா சரியாக இருக்கலாம். ஆனால் இயங்கியல் விதிப்படி அது தவறு. அதனாலதான் சோதாசக்திக்கு பேஸ்மட்டமும் வீக்கு பில்டிங்கும் வீக்கு. இப்போது தெரியுதா ஏன் சோபா சக்தி சோதாசக்தி ஆனாருன்னு.

அவர் தன்னை தனது சீடகோடிகளைவிட்டு சிறந்த திரைப்பட நடிகர் என்று சொல்லிக்கொள்ளட்டும், நமக்கு கவலையில்லை. சிறந்த புனைவு எழுத்தாளன் என்றும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்றும் கலகக்காரர் என்றும் இன்னும் பிற சொல்லாடல்கள் தன்னைத்தானே அல்லது தனது சீடகோடிகளை விட்டோ வாழ்த்திக்கொள்ளட்டும். அதுபற்றி நமக்கு எந்தக் கவலையுமில்லை, பிரச்சனையுமில்லை. ஆனால், இடதுசாரித்தனம் என்பது வரலாற்று வழிவந்த ஒரு எதிர்ப்புக்கதையாடல். ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களின் விடுதலைக்கான வழி அது. இருண்ட ஆதிக்கவானத்தில் கிழித்துக்கிளம்பிய விடிவெள்ளி அது. இந்த ஆதிக்கமலைகளை அள்ளி வீச வந்த கீழைக்காற்றது. மார்க்சும், ஏங்கெல்சும், லெனினும், மாவோவும் எமக்கு கையளித்துச்சென்ற தீப்பந்தம் அது. அதில் மட்டும் அவர் விளையாடவேண்டாம்.

தான் சொல்வதை எவனும் கேட்கமாட்டேன்கிறார்கள் என்ற கவலையும், அ.மார்க்சை முன்பு தமிழ்ச்சமூகம் ஒரு மார்க்சிய அறிவுஜீவி என ஏற்றுக்கொண்டதுபோல தம்மையும் ஏற்றுக்கொள்ளவில்லையே என்ற ஆதங்கமும், ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவாவும் அவருக்கும் இருப்பது நம்மால் புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் அதற்காக அவர் செய்யவேண்டியது ரொம்ப சாதாரணமான விடயம்தான். அது மக்களிடையே களமாற்றுவதும், வர்க்கநெருப்பில் தன்னை புடம்போட்டுக்கொள்வதும், மக்களிடமிருந்து பாட்டாளிவர்க்க பண்பாட்டையும், பாட்டாளிவர்க்க கருத்தியலையும் உள்வாங்கிக்கொள்வதும்தான்; தொடர்ச்சியாக வர்க்கப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்வது மட்டும்தான். இப்படிச் செய்வதன் மூலமாக அவர் தனது பேஸ்மட்டத்தை ஸ்டிராங்கிக் கொள்ளலாம். அதன்மூலம் அவரின் பில்டிங்கும் ஸ்டிராங்காகும். அதைவிடுத்து சும்மா பரந்துபட்ட மக்களிடமிருந்து அந்நியப்பட்டுக் கொண்டு, மக்களின் எதிரிகளோடு கூட்டணி சேர்ந்துகொண்டு தமது பார்வையை இடதுசாரிப்பார்வை எனும்போதுதான் நமக்கு பிரச்சனை வருகிறது. இதை விவரமாக பின்வரும் கட்டுரையில் காண்போம்.

அவர் முடிந்தால் தோழர் ஸ்டாலின் எழுதிய அந்த நூலை வாசிக்கட்டும். விலை ரூ.20தான். காண்டம் வாங்கற காசுல இதுக்கும் கொஞ்சம் செலவளிங்கப்பு. கீழைக்காற்றுப் பதிப்பகம் வெளியீடு. நம்ம மகஇக பதிப்பகம்தான். உங்கள் அன்புக்குரிய புரட்சி எழுத்தாளர் லீனா மணிமேகலையைக்கூட வாங்கித்தரச் சொல்லலாம்.

இறுதியாக இந்த சொல்லிலிருந்து செயல் பிறக்கும் என்னும் தத்துபித்துவத்திற்கும் நம்மாளு விளக்கம் வச்சிப்பாரு. 'கருத்துமுதல்வாதம்தான் இலங்கை நிலவரப்படி பொருள்முதல்வாதம். அது புரிந்து கொள்ளாததுதான் ஈழத்தோல்விக்கு காரணம். இடதுசாரித்தனத்தை கருத்துமுதல்வாத அடிப்படையில் நான் புரிந்து கொண்டேன். இடதுசாரித்தனத்தை இப்படியும் சொல்லலாம்' என்று சொன்னாலும் சொல்வார். பூவை பூவும் சொல்லலாம், புஷ்பம்னு சொல்லலாம். நீங்க சொன்னமாதிரியும் சொல்லலாம் கதைதான் அது.

சனநாயகவழிப்பட்ட எதிர்ப்பரசியலின் குத்தகைதாரரும் வன்முறை அரசியலும்

எனக்கு தோழர் சந்திரசேகர ஆசாத் மீது கொஞ்சம் கோபம்தான். பச்சைப்புள்ளைய இப்படியா மிரட்டுறது. புள்ள ரொம்ப பயந்துடுச்சு. அதிலும் சவரக்கத்தி, அழுக்குச்செருப்பு என்று ஏகத்திற்கும் புலம்ப ஆரம்பித்து விட்டார் நமது சோதா சக்தி. சரி அப்படி என்னதான் இருக்கிறது அந்த கட்டுரையில் சோபாசக்தி தொடுத்துள்ள 307 வழக்கில் என்பதைத்தான் பார்த்துவிடுவோமோ.

shobasakthi_351பெரிய சூரப்புலி வேடம் கட்டியவர்கள் எல்லாம் மக்களுக்கெதிரான அரசியலுக்குப் போகும்போது மக்கள் சக்தியைப் பார்த்தவுடன் பயம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துவிடும். உதாரணம் கோயம்புத்தூர் கூட்டத்தில் 'நடந்தது என்ன' என்று விஜய் தொலைக்காட்சி பாணியில் விசாரித்தால் கால்சட்டையில் நனைத்துக்கொண்டவர் கதை வெளியே வரும். அதுபோல சோதாசக்தி பயப்படுகிறார் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் பேராசான் மாவோ சொல்கிறார். ஆளும் வர்க்கங்களும் அவர்களின் ஊதுகுழல்களும் வெறும் காகிதப்புலிகளே என்று. ஆனால் காகிதப்புலிகள் அனைத்தும் ஆளும் வர்க்கங்களின் ஊதுகுழல்களா என்று என்னைக் கேட்கக்கூடாது.

இந்த காகிதப்புலி சோதாசக்தி பயத்தில் ஏதேதோ உளறுகிறார். அதில் ஒன்றுதான் இந்த கடைசிக்கட்டுரை. அதை அவர் ஆரம்பிப்பதே மிகவும் வேடிக்கையானது. வடிவேலு சொல்ற மாதிரிகூட இல்ல நம்மாளுக்கு. தம்பி உங்களுக்கு ஆரம்பமும் நல்லாயில்ல, பினிஷிங்கும் நல்லாயில்ல. ஆரம்பமே டிராட்சிகியின் மேற்கோளுடன்தான். அப்படி என்னதான் சொல்லிவிட்டார் நம்ம முன்னாள் தோழர் டிராட்சிகி என்று பார்த்துவிடலாம். அதற்கு முன்பாக முதலில் சோதாசக்தி எதையும் முழுமையாக படிக்காமல் சும்மா கூகுளில் மேற்கோள் எடுக்கும் பழக்கத்தை நிறுத்தவேண்டும். ஒரு மேற்கோளை பயன்படுத்துகிறோம் என்றால் அது எந்த சூழலில் பயன்படுத்தப்பட்டது என்பதை புரிந்துகொள்ள அந்த புத்தகம் முழுமையும் வாசிக்கவேண்டும். சரி பரவாயில்லை அந்தக் கட்டுரையாவது முழுமையாக வாசிக்கவேண்டும். எதிலும் அவசரம், அரைவேக்காட்டுத்தனம். இப்படியெல்லாம் மேற்கோள்கள் பயன்படுத்தினால் நம்மையும் இடதுசாரியாக இந்த அப்பாவித் தமிழினம் ஏற்றுக்கொண்டுவிடும் என்ற அசட்டுத்தனம்.

முதலில் அந்த மேற்கோள் எடுக்கப்பட்ட கட்டுரையே ஒரு அவதூறுக் கட்டுரை. தோழர்கள் லெனினையும் ஸ்டாலினையும் இன்னபிற மத்தியக்குழு உறுப்பினர்களையும் அவதூறாக பேசுவதற்கென்றே எழுதப்பட்ட சுயசரிதைக் குறிப்பது. கம்யூனிஸ்டுகள் பிரச்சனைகளை மேசைமேல் வைப்பார்கள் என்பார் எம் பேராசான் மாவோ. ஆனால் பிரச்சனைகளை மேசைமேல் வைக்காமல், முரண்பாடுகளின் மூலத்தை செயல்வழியை தெளிவுற புரிந்துகொள்ளாமல் வெறும் கிசுகிசு அரசியலாக்கி அவதூறு கிளப்புவதில் டிராட்சிகி பேர் போனவர் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கும் கட்டுரை அது. முடிந்தால் அந்தக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள். ரசிய கம்யூனிஸ்டுகள் தன்னை போட்டுத் தள்ளிவிட்டால் என்ன செய்வது, அய்யய்யயோ அம்மம்மா என்று தான் செத்துப்போனால் உலகப்புரட்சியே படுத்துவிடும் என்று அலட்டிக்கொண்டு டிராட்சிகி உளறிக்கொட்டும் கட்டுரை அது. மத்தியக்குழு உறுப்பினராக இருந்துகொண்டு மத்தியக்குழுக் கூட்டத்தில் இருக்கும் முரண்பாடுகளை அவ்விடத்திலேயே போட்டு உடைத்து அதற்கான நீண்டதொரு போராட்டத்தை தொடங்காமல் சும்மா மூடி மூடி வைத்து முகத்தில் புன்னகையையும், மனதில் குறுங்குழுவாதத்தையும் தேக்கி வைக்கும் டிராட்சிகியிசத்தின் உண்மை முகத்தை வெளிச்சம் போடும் கட்டுரை அது.

முரண்பாடுகளை மூடிவைத்து மூடிவைத்து புரையோடிப் போகச்செய்யும் இந்த சோ கால்டு குட்டிமுதலாளித்துவ அறிவுஜீவி முகத்திற்கு நேராக முரண்பாடுகளை உடைந்தெறிந்து அதற்கான தீர்வு நோக்கி போவதுதான் மார்க்சியத்தின் திருபுவாதத்திற்கு எதிரான பாலபாடமே. அதுபோக அந்த மேற்கோள் தொடைநடுங்கி சோதாசக்திக்கு உபயோகமானதுதான். ஏனென்றால் அவரும் அவர்சார்ந்த கும்பலும் சுயநலவாதிகள், தன்னிச்சைவாதிகள். தாம் இல்லையென்றால் ஏதோ உலகே மூழ்கி விடும் என்று பேசுபவர்கள். டிராட்சிகி அளவிற்கு ஒரு வீரஞ்செறிந்த வரலாற்றை வாழ்ந்து விட்டு அப்புறம் துரோகியாக திரிந்தாலும் பரவாயில்லை. ஆனால் எந்த வீரஞ்செறிந்த வரலாறும் இல்லாமல் பிஞ்சிலேயே இவர் மொள்ளமாரித்தனம் வெளிப்பட ஆரம்பித்துவிட்டது. இந்த உதிரி குட்டிச்சாத்தானுக்கு அந்த பெரிய சாத்தானின் மேற்கோள் துணை. அதுபோக இன்னொன்று இருக்கிறது. அதாவது அ.மார்க்சு அடிக்கடி சொல்வார். மார்க்சிய பேராசான்கள் அந்த காலகட்டங்களில் அந்த சூழலுக்கேற்ப எழுதிய மேற்கோள்களை அப்படியே வைத்துக்கொண்டு பிரச்சனைகளை பார்க்கக்கூடாதென்று. அதில் ஓரளவிற்கு உண்மையிருக்கிறது. 1920களில் எழுதப்பட்ட இந்த மேற்கோளை கொண்டுபோய் இப்போது ஜார்ஜ் புஷ்ஷிடம் சொன்னால் என்ன சொல்வார். அழுக்கடைந்த செருப்பின் வீரம் என்னவென்று அவருக்கும் நம்ம சிதம்பரத்திற்கும்தான் தெரியும். சவரக்கத்தியை விட செருப்புதான் அவர்களை மிகவும் பயமுறுத்தியது என்பது உலகறிந்த உண்மை. இது ஒரு மேற்கோளு, இதுக்கு ஒரு பில்டப் வேற.

சரி இப்போது கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு வருவோம். தோழர் ஆசாத் இவரிடம் கணக்கு கேட்கிறார். அந்தக் கணக்கை மக்கள் மன்றத்தில் வைக்கவேண்டும் என்கிறார். அதற்கு சோபாசக்தியின் பதில் என்னவென்றால் மக்கள் மன்றத்தை கூட்ட வேண்டுமாம். அதன்பின்னால் வருவாராம். வந்து கணக்கு ஒப்படைப்பாராம். எதுக்கு இந்த பஞ்சாயத்து? தோழர் ஆசாத் மக்கள் மன்றத்தை கூட்டுவதாக சொன்னதும் அல்லது அவர் கூட்டுவதும் இருக்கட்டும். சோதாசக்தி உங்களிடம் காண்டம் வாங்கியது வரை கணக்கிருக்கிறது. அதனால என்ன பண்ணுங்க. அத்தனை கணக்கையும் உங்க இணையத்தளத்தில போட்டுருங்க. ஒரு கட்டுரையில எக்கச்சக்க புத்தகம் வைத்திருப்பதாகச் சொன்னீர்கள். அந்தக் கணக்கையும் மறந்து விடவேண்டாம். அப்படியே கடவுச்சீட்டு (அது இல்லையென்றால் அதுக்குண்டான டாக்குமெண்டு) உங்களுக்கு இருந்தால் அதை ஸ்கேன் செய்து போட்டுவிடவும், எந்தெந்த நாட்டுக்கு போனீர்கள் என்பது மக்களுக்கு தெரிய வேண்டுமல்லவா.

வரவு என்ன, செலவு என்ன, கடன் எவ்வளவு, கடன் கொடுத்த வங்கி எது, வேலையில்லாத ஒருவருக்கு எவ்வளவு வங்கிக் கடன் கிடைத்தது, கடனுக்கு வெளிநாட்டுப் பயணச்சீட்டு கொடுத்த நிறுவனம் எது, அங்கு எவ்வளவு கடன் உள்ளது, காண்டம் கணக்கு எவ்வளவு எல்லாத்தையும் இணையத்தளத்தில் போட்டுவிடலாமே? எதுக்கு தோழர் ஆசாத், தோழர் நந்தன்? சட்டுப்புட்டுன்னு செய்யுங்கப்பு... வழக்கு, விசாரணை, மக்கள் மன்றம் எல்லாம் அப்பால பாத்துக்கலாம். நம்ம கருணாநிதியே கணக்கை செய்தித்தாளில் வெளியிடும்போது, சோதா சக்தி வெளியிடுவதில் என்ன சிக்கல் இருக்கமுடியும்? ஆனால் ஒண்ணு, எல்லாத்தையும் தெளிவாக ஸ்கேன் செய்து கொடுத்துப்புடணும். வெறுமனே வங்கிப் பெயர் தரக்கூடாது. எந்தக் கிளை, கிளை முகவரி, வங்கிக் கணக்கு விவரம், டிராவல்ஸ் ஏஜென்சியின் முகவரி எல்லாம் சாப்ஜாடா கொடுத்துவிட வேண்டும். அவதூறுகளுக்கு உடனடியா பதில் போடும் நம் சோதாசக்தி இதையும் வேகமா செய்தால் நலம்.

இங்கு யாரும் சோதாசக்தியை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியவில்லை. அவர்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இல்லை நான் சத்தியவான் என்று நிரூபித்துவிட்டால், எல்லோரும் ஜோரா கைதட்டி 'ஜே' போடப்போகிறார்கள். நான் வேண்டுமானால், சோதாவை தோளில் ஏற்றி சென்னையை ஒரு ரவுண்ட் வருகிறேன்.

சரி அடுத்து அந்தக் கட்டுரையின் விறுவிறுப்பான மேட்டர்கள் சிலவற்றை பார்த்துவிடுவோம். தோழர் ஆசாத் அழைக்கும் விசாரணைக்கு தோழர்கள் மருதய்யனும், வீராச்சாமியும் அழைக்கப்படுவார்கள் என்பதே அது. அன்பு நண்பர் சோதாசக்தி அவர்களே தோழர்கள் மருதய்யன், வீராச்சாமி வரவேண்டும் என்பது தோழர் ஆசாத்தின் வேண்டுகோள் அல்ல. அது எங்காளாயிருந்து உங்காளா மாறிப்போன அ.மார்க்சின் வேண்டுகோள். அவர்தான் சொன்னாரு. அடிதடி கூட்டமென்றால் கீழ்மட்ட தோழர்களையும், அறிவுசார்ந்த கூட்டமென்றால் மேல்மட்டத்தோழர்களையும் அனுப்புவது மக்கள் கலை இலக்கியத்தின் வழமையென்று. அதனால்தான் தோழர் ஆசாத் மருதய்யனையும், வீராச்சாமியையும் அழைத்திருக்கிறார். ஒரு பேச்சுக்கு உங்களுக்குத் தண்டனை வழங்குவது என்று மக்கள் மன்றம் வைத்துக்கொண்டால் (பயப்படக்கூடாது, சும்மா பேச்சுக்குத்தான், நெருப்புன்னா சுட்டுறவா போகுது, அதுபோக நீங்க காந்தியார் புத்தகங்களை இப்போ படிச்சுட்டுக்கிறீங்க. அது முக்கியம்) முதல் கல்லை அவர்களேயே எறியச்சொல்லி தண்டனையை ஆரம்பித்து வைக்கலாம் என்று ஆசாத் நினைத்திருக்கலாம். எனவே நீங்கள் இந்த மேட்டரில் தோழர் ஆசாத்தை காய்வது நல்லதல்ல. அழைத்தது அண்ணன் அ.மார்க்சே. எனவே அக்கட சருகண்டி சருகண்டி. அதுபோக ஈடுசெய்யவேண்டிய அல்லது ஈடு செய்யமுடியாத என்பதெல்லாம் உங்க அ.மார்க்சு ஸ்டைல்தான்ப்பு.

அடுத்து சோதா எழுதுவதுதான் உண்மையிலேயே அவரின் பயத்தை வெளிக்காட்டுவது. செம்படை இத்தாலியின் உள்ளே நுழைந்தபோது முசோலினி ஒரு ராணுவ லாரியில் ஏறி தப்பி ஓடுகிறான். செம்படை லோக்கல் படையோடு அந்த வாகனத்தை சுற்றிவளைக்கிறது. முசோலினி இருக்கைக்கு அடியில் ஒளிந்து கொள்கிறான். இழுத்து வருகிறது மக்கள் படை. பயத்தில காற்சட்டையிலேயே மூத்திரம் அடிக்கிறான் அந்த மாபெரும் வீரன். இதுதான் இந்த காகிதப்புலிகளின் வீரம். கொள்கையில் புடம்போடப்பட்ட மக்கள் தலைவர்கள், பிரதிநிதிகள் பதறுவதில்லை. உதாரணமாக வெறும் பதின்ம வயதில் ஆங்கிலேயரால் துன்புறுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட குதிராம் போசின் வீரம் நாம் அறிந்த ஒன்று. ஆனால் நம்ம சோதாசக்தி பதறிச் சாகிறார். அந்தப் பயம் நம்ம வடிவேலு மாதிரி 'நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான்' என்பதுபோல் 'நான் பயப்படல நான் பயப்படல' என்று அவரை சொல்ல வைக்கிறது. பயம் அல்லய பிடித்தாலும் முகத்தில பயத்தக்காட்டாதபடி தனது சிஷ்ய கோடிகளிடம் “என்ன நடந்தாலும் க்குரௌட அண்ணன் பக்கத்துல அண்ட விடக்கூடாது” என்று கெஞ்சுகிறார். “சிரிக்காதீங்கப்பு, சீரியசு, இது தூய்மையற்ற சவர அலகு” என்கிறார்.

மக்களுக்காக நிற்பது என்று ஆகிவிட்டது. இதில் இருந்தால் என்ன, செத்தால் என்ன? ஏனிந்த பயம்? இந்த பயம் இவர் பற்றியிருக்கும் கருத்தால் வருவது. அது கருத்துமுதல்வாதத்தால் வரும் பயம். அதுதான் நாம் கண்ட சோதாசக்தியின் கருத்துமுதல்வாத வாந்தி. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் அரண்ட சோபாசக்திக்கு இருண்டதெல்லாம் விடுதலைப்புலிதான். கவலையே படாதீங்க, நான் சொல்றேன். அப்படியெல்லாம் நீங்க சட்டுபுட்டுனு சாகமாட்டீங்க. நெடுநாள் வாழ்வீங்க. எங்க ஊருப்பக்கம் ஒரு பழமொழி உண்டு, நீ செஞ்ச பாவத்திற்கு உனக்கு நல்ல சாவு வராதுடி, புழுத்துதாண்டி சாவேனு. எனக்கு பாவம் புண்ணியத்திலெல்லாம் நம்பிக்கையில்லை, உங்களுக்கு?

சரி இப்போது வன்முறை அரசியலின் தேவை பற்றிப் பேசுவோம். வன்முறை அரசியல் என்பது ஒன்றும் மக்களே வலிந்து மேற்கொள்வதல்ல. அந்த .303 துப்பாக்கியோடும், இதர சுமைகளோடும் மனைவி மக்களைவிட்டு விட்டு காடுகளிலும், மேடுகளிலும் அலைய வேண்டும் என்பது ஒன்றும் நம் ஊர் நக்சல்கள் அல்லது விடுதலைப்புலிகளின் விருப்பமுமில்லை, அதற்காகவே அவர்கள் ஒன்றும் பிறப்பெடுக்கவுமில்லை. ஆனால் எதிரியே அதை நாம் செய்யுமாறு தூண்டுகிறான். அந்த நிலைக்கு நம்மை உள்ளாக்குகிறான். அமைதியான வாழ்க்கையையே நாமும் விரும்புகிறோம். ஆனால் பேராசான் மாவோ சொல்வதுபோல் நாம் எடுக்கவேண்டிய ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கிறான். அதுபோக நாம் ஆயுதங்தாங்கிய படையாகவேண்டியதன் அவசியத்தையும் பேராசான் மாவோ விளக்குகிறார். மக்கள் படையின்றி மக்களுக்கு எதுவுமேயில்லை என்கிறார் தோழர் மாவோ. சரி அதுவெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும். சோபாசக்தி தெய்வமாக வழிபடும் டிராட்சிகியின் கருத்துக்களில் எப்போது சீரிய இடத்தைப் பெறும் நகர்ப்புற பாட்டாளிவர்க்கம் காவாத்துக்கு துப்பாக்கியோடு சென்றது பற்றி தேவைப்படுபவர்கள் நூல்களில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இப்போது சோதாசக்தி சொல்லும் வன்முறைக்கெதிரான அமைதிப்பயணத்தை பார்க்கலாம். அவரின் கட்டுரையின் இறுதிப்பகுதியில் அவர் சொல்லும் அந்த வேதாந்தங்கள் அவரின் நண்பர்களுக்கு மட்டும் பொருந்தாது போலிருக்கிறது. மக்கள் கலை இலக்கியத் தோழர்கள் அமைதியான முறையில் கேள்விகளைக் கேட்டபோது அடிக்கப் பாய்ந்தாரே லீனா மணிமேகலை, அந்த வன்முறைப் பண்பாட்டை எதிர்த்து எத்தனை இடங்களில் தனது எதிர்ப்பை பதிவுசெய்தார் இவர்? அது வன்முறையாகாதா? மலந்துடைந்து ஒரு பெண் பத்திரிக்கையாளருக்கு அனுப்பினாரே அ.மார்க்சு அது வன்முறைக் கலாச்சாரமாவாதா? அப்பாவி தொழிலாளியை சோதாசக்தி அடித்தாரே அது வன்முறைப் பண்பாடாகாதா? இராணுவம், காவல்துறை தவிர மற்ற எல்லோரையும் (பெண்கள் உட்பட) திருப்பி அடிப்பேன் என்று சோதாசக்தி சொல்வது வன்முறையாகாதா? லீனா அடித்தால், நீங்கள் அடித்தால் அந்த இடத்தில் அது சனநாயகவழிப்பட்ட எதிர்ப்பரசியலின் பரிணாம வடிவம், அ.மார்க்சு மலந்துடைத்து அனுப்பினால் அது சனநாயக எதிர்ப்பரசியலின் நவீன வடிவம். ஆகா... உங்களுக்கு சனநாயக வழிப்பட்ட எதிர்ப்பரசியலை வடிவமைக்கும் பொறுப்பை குத்தகைக்கு விட்டவன் எவன்? நீங்களும் உங்கள் கூட்டமும் செய்தால் அதற்குப் பெயர் வன்முறைப் பண்பாடல்ல, அவதூறுக் கலாச்சாரமல்ல, மாறாக மற்றவர்கள் செய்தால் அது அப்படித்தான். என்னங்கடா ஞாயம் இது.

தோழர்களே கூர்ந்து கவனியுங்கள்.

இலங்கையின் முன்னாள் பொதுவுடமை இயக்கத்தலைவர் தோழர் ராபர்ட் பெரைராவிற்கும் நம்ம ஊரு ஜித்து கிருஷ்ணமூர்த்திக்கும் இடையிலான உரையாடலை முன்பு ஒருமுறை மையம் என்ற குறுபத்திரிக்கையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடல் சோசலிசக்கட்டுமானம் பற்றியது. அதில் கிருஷ்ணமூர்த்தி சோசலிசக்கட்டுமானம் மற்றும் தனிமனித சுதந்திரம் பற்றிப் பேசுகிறார். அப்போது அவர் 'சோசலிசக் கட்டுமானத்தின்போது நான் தனிமனித சுதந்திரத்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்தினால் என்ன செய்வீர்கள்?' என்று பெரைராவிடம் வினவுகிறார். அதற்கு பெரைரா 'உம்மை நாம் மறுசீரமைப்பு முகாமிற்கு அனுப்புவோம்' என்கிறார். மீண்டும் 'அந்த தனிமனித சுதந்திரத்தை விட மறுத்தால்' என்று கேட்கிறார் கிருஷ்ணமூர்த்தி. 'மீண்டும் மறுசீரமைப்பு முகாமிற்கு அனுப்பப்படுவீர்கள்' என்கிறார் பெரைரா. 'மீண்டும் மீண்டும் நான் என் தனிமனித சுதந்திரத்தை விட மறுத்தால்' என்று அழுத்துகிறார் கிருஷ்ணமூர்த்தி. 'நீங்கள் கொல்லப்படுவீர்கள்' என்கிறார் பெரைரா. 'நீங்கள் என்னை தியாகியாக்குகிறீர்கள்' என்று முடிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

உதாரணமாக சோசலிச கட்டுமானத்தின்போது - பண்பாட்டு ரீதியிலான புரட்சியின்போது - ஆதிக்கசாதியம் என்னும் நோயை விடாமல், தனிமனித சுதந்திரம் என்னும் பெயரால் தூக்கிப்பிடித்தால் என்னதான் செய்வது என்ற கேள்விக்கு அழகாக பதிலளிக்கிறார் தோழர் பெரைரா. இது தான் நடைமுறைக்கு சரியான பதில். அந்த அதிசனநாயகவாதி அந்தக் குறிப்பிட்ட சாதியக்கும்பலால் தியாகியாக மதிக்கப்படுவான் என்று தெரிந்தாலும் வேறு வழியில்லை, போட்டுத் தள்ளுவதைத்தவிர. அதீத சனநாயகவாதிகளுக்கே இந்தக்கதி என்றால் துரோகிகளுக்கு?

மேற்கண்ட பத்தியை முன்னோட்டமாக வைத்துக்கொண்டு பின்வருவனவற்றை வாசிக்குமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

'கீற்றை முடக்க அ.மார்க்சு குழு சதி' என்ற தலைப்பில் கீற்று நந்தன் ஒரு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதற்கு பதிலளிக்கையில் சோதாசக்தி தெளிவாகச் சொல்கிறார். “ஓர் ஊடகம் அவதூறுகளையே பரப்பும்போது அதனடிப்படையில் தவறான அரசியலையும் குழுக்களையும் கட்டமைக்க முற்படும்போது அந்த ஊடகத்தை நிராகரிக்குமாறு சக படைப்பாளியிடமும் அல்லது சக களச்செயற்பாட்டாளரிடமும் ஒருவரோ அல்லது ஒரு குழுவினரோ கோருவது மிக அடிப்படையான சனநாயக வழிசார்ந்த எதிர்ப்பு. இதில் சதியுமில்லை. ஒரு மயிருமில்லை…. எனவே இதுவெல்லாம் ஒன்றும் கீற்றுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய எதிர்ப்பு வடிவமோ, கருத்துரிமை மறுப்போ, சதியோ கிடையாது.” இப்போது நமக்கு இரு கேள்விகள் இருக்கின்றன. இப்படிக்கோருவது மிக அடிப்படையான சனநாயக வழிசார்ந்த எதிர்ப்பு என்கிறாரே சோதா, எந்த சனநாயகம், முதலாளித்துவ சனநாயகமா? முன்பு ஒரு கட்டுரையில் அ.மார்க்சு சொல்வார். முதலாளித்துவ சனநாயகம் ‘சனநாயகம்' என்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ‘சர்வாதிகாரம்’ என்றும் கொச்சையாக வாசிக்கப்பட்டுவிட்டது என்பார் அவர்.

அந்த சனநாயகத்திற்கான சட்டதிட்டங்களை வகுத்தவன் எவன்? உங்கள் கட்டுடைப்புக்கணக்கில் இந்த சனநாயக கட்டை அவிழ்க்கக்கூடாதா? அதுபோக இந்த சனநாயக வழிசார்ந்த எதிர்ப்பு என்றால் என்ன? அதன் விளக்கங்கள் என்ன? அப்படித்தான் எதிர்ப்பை காட்டவேண்டும் என்று யார் வரையறுத்தது? அது யாருக்கான சனநாயகம்? எங்களுக்கு நீங்கள் சொல்லும் சனநாயகமும் தெரியாது; அது வழிப்பட்ட எதிர்ப்பும் தெரியாது.பேராசான் லெனின் சொல்வார், பசித்தவனுக்கு குடியரசும் ஒன்றும் தான் முடியரசும் ஒன்றுதான் என்று. அதுபோக, நீங்கள் எப்போது இந்த சனநாயக வழிப்பட்ட எதிர்ப்பரசியலின ஜவாப்தாரி ஆனீர்கள்? யார் உம்மை ஆக்கியது? அதுபோல் வழி வழியாக வந்த சனநாயக வழிசார்ந்த எதிர்ப்பைப் பின்பற்றுவது சோதாவின் பாசையில் சரியென்றால், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் வழி வழியாக வந்த போட்டுத்தள்ளுவதையும் பின்பற்றுவதில் இவருக்கென்ன பயம், தயக்கம்? இவருக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா?

அதுவும் தோழர் ஆசாத் கேட்டது என்ன? சோதா கேட்டதுபோல் கீற்று நந்தன் நடுவராக இருக்கட்டும் என்று சொல்லவில்லையே; மாறாக மக்களை நீதிபதியாகக் கொண்ட மக்கள் மன்றத்தில் வைத்து விசாரிப்போம் என்றுதானே சொன்னார். அதன் பின்பாக குற்றச்சாட்டு நிரூபணமானால் அதற்கான தண்டனை வழங்குவதை அ.மார்க்சே முடிவு செய்யட்டும் என்றுதானே சொன்னார். அவர் ஒன்றும் சோதாவை கொலை செய்யவேண்டும் என்று சொல்லவில்லையே. இவரின் (முதலாளித்துவ)சனநாயகப்படி வழி வழியாக வந்த எதிர்ப்பை பின்பற்றுவது சரியாம், ஆனால் அதே சனநாயகப்படியோ அல்லது பாட்டாளி வர்க்கச்சர்வாதிகாரத்தின்படி போட்டுத்தள்ளுவது என்ற முடிவை மக்கள் மன்றம் எடுத்தால் இவர் அய்யோ அம்மா என்று கதறுவாராம். தம்பி மடியில கனமிருந்தால்தானே வழியில பயம். அதுபோக நீங்க இடதுசாரி, இவ்வளவுதானா உங்க இடதுசாரித்தனம்.

ஒரு இணையத்தை முடக்க முயற்சிப்பது கருத்து சுதந்திர மறுப்பு கிடையாதாம். அது வழி வழிப்பட்டதாம். ஆனால் வன்முறைக்கலாச்சாரம் வழிவழிப்பட்டதில்லையாம் மாறாக தோழர் ஆசாத்தும் கீற்றும் சேர்ந்து ஆய்வுக்கூடத்தில் வைத்து கண்டுபிடித்து கொண்டு வந்ததாம். என்னா லாஜிக்குங்கண்ணா? இந்தக்கருத்து சட்டைக்காலரில் அழுக்குப்படாமல் அரசியல் செய்ய நினைக்கும் குட்டிமுதலாளித்துவ அரசியல். ஆனால் இந்த இடதுசாரி வேடம் போட்ட உதிரிக்கு எப்படி குட்டி முதலாளித்துவ அரசியல் என்று நினைத்து வாசகர்கள் குழம்ப வேண்டாம். கைக்கூலிகள் எந்த வேடமும் புனைவார்கள்.

இப்போது இடைவெளி. மயக்கந்தெளிய விட்டு அடிப்போம்.

- சார்லசு அன்ரனி, மங்களூர் (+917259591948, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It