பிறசொல்                    தமிழ்ச்சொல்

ஆரணியம்       -           காடு, அடவி

ஆரம்               -           மாலை, கோவை

ஆரம்பம்          -           தொடக்கம்

ஆராதனை      -           வழிபாடு, தொழுகை

ஆராதித்தல்     -           வழிபடுதல், தொழுதல்

ஆரூடம்           -           குறிநூல்

ஆரோக்கியம்  -           உடல்நலம், நோயின்மை

ஆலயப் பிரவேசம்      -           கோயிற்புகவு, கோயில் நுழைவு

ஆலிங்கனம்    -           தழுவுகை, சேர்ந்துகட்டுகை

ஆலோசனை   -           சூழ்வு, சூழ்வினை, சூழ்வுரை

ஆவர்த்தனம்   -           வட்டணை

ஆவாரசக்தி     -           மறைப்பாற்றல்

ஆவேசம்         -           பேய், பேயாட்டம், சினம், வெகுளி

ஆனந்தமய கோசம்     -           மகிழியலுறை

ஆன்மா           -           புலம்பன், ஆதன்

ஆன்மீகம்        -           ஆதனியல்

ஆஸ்தி            -           உடைமை, சொத்து, செல்வம்

ஆஸ்திகன்      -           நம்புமதத்தன்

ஆஸ்துமா        -           மூச்சுத்திணறல்

ஆஸ்பத்திரி     -           மருத்துவமனை

ஆஜர்               -           வரவு, நேர்நில்

ஆஜரான         -           வந்த, நேர்நின்ற

இச்சகம்           -           முகமன், முகப்புகழ்

இச்சாசத்தி      -           விருப்பாற்றல்

இச்சை                        -           வெஃகம், விருப்பம்

இடபம்                        -           காளை, எருது

இடபாரூடன்   -           விடையேறி

இடம்பம்         -           ஊதாரித்தனம்

இதம்               -           நன்று

இந்திரன்         -           வேந்தன்

இந்திரியம்      -           புலன்

இமயம், இமாசலம்     -           பனிமலை

இம்சை            -           துன்பு, துன்பம்

இயந்திரம்       -           பொறி, மனை, சூழ்ச்சியம்

இயமம்                       -           அடக்கம்

இயமன், எமன்            -           கூற்றுவன்

இரகசியம்       -           மறைபொருள், மருமம், குட்டு

இரசம்             -           சாறு, மிளகுநீர், சுவை

இரசவாதம்      -           பொன்னாக்கம்

 

ஆங்கிலம்               தமிழ்

Articles            -           உருப்படிகள்

Articulate         -           இழைத்தல்

Articulatory Phonetics            -           பலுக்கொலியம்

Artist                -           கம்மியன், ஓவியன்

Ascending Order        -           ஏறுவரிசை

Assembly        -           பேரவை

Assistant         -           உதவியாளர்

Assistant Secretary    -           உதவிச்செயலாளர் (செயலர்)

Assonance      -           ஒலிப்பொலி

Asterist            -           உடுக்குறி, விடுபாட்டுக்குறி

Astronomy      -           வானநூல்

Atheists           -           நம்பாமதத்தார்

Attendance      -           வரவுப்பதிவு

Auto biography            -           தன்வரலாறு

Auto Cracy or Dictatorship     -           தன்மூப்பாட்சி

Audiliary Verb -           துணைவினை

Average          -           சராசரி, நிரவல்

 

B

Bachelor of Arts          -           கலையிளைஞர், இளங்கலைஞர்

Badge  -           சின்னம், குத்தி

Bag      -           பை, பையில்போடு,

சொந்தமாகக் கொள்

Bad      -           கேடானது

Badminton       -           பூப்பந்து

Bail      -           பிணை

Balance           -           நிலுவை, துலாக்கோல், சமனிலை

Balance Sheet            -           சமனிலைப் பட்டியல்

Balanced Diet -           சமச்சீர் உணவு

Balcony           -           பலகணி, பலகணி முற்றம்

Balcon -           புகைக்கூண்டு, கூடு

Band    -           கட்டு, கயிறு, குழாம், கூட்டியம்

Bank    -           வைப்பகம், வட்டிக்கடை, காசுக்கடை, கரை

Bankrupt         -           கடன்மூழ்கி, கடன்தீர்க்க வழியற்றவன்

Bar-at-law       -           சட்டப்பாரர்

Barbarism       -           கொச்சை, கொச்சை நடை

Bare outline     -           வெறுஞ்சட்டகம்

தரவு: 'முதன்மொழி' சிற்றிதழ் - அக்டோபர் 2010

Pin It