india_bsf_394தினசரி இந்திய‍, பாகிஸ்தான் எல்லையான "வாகா"(WAGAH)வில் நடக்கும் கொடி ஏற்றம், இறக்கம் ஒரு பெரிய திருவிழாவாக, வேடிக்கைத் தெரு விழாவாக பல்லாண்டுகளாக நடைபெற்று வருவது பெரும்பாலானோர் அறிந்ததே.

இந்த "கண்றாவியை, கேலிக்கூத்தை" வெளிநாட்டினரும், இந்திய‌ பாகிஸ்தான் அப்பாவி மக்களும் பார்த்து ஆரவாரம் செய்வர். நாட்டுப்பற்றை, வெறியாக்கும் ஒரு மறைமுக நிகழ்வு அது. இந்நிகழ்வை நேரடியாகவோ, யு‍-டுயுப்(UTUBE) மூலமாகவோ கண்டால் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா சார்பாக "எல்லைப் பாதுகாப்புப் படை"யும்(BSF) பாகிஸ்தான் சார்பாக‌ "ரேஞ்சர்ஸ்" (Rangers) என்ற படைப் பிரிவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர். படைவீரர்கள் ஓடுவார்கள், நிற்பார்கள்..... மரியாதை செய்வார்கள். வெகு வேகமாக காலைத் தூக்கி தாய் மண்ணை உதைப்பார்கள் (பாரத மாதா, இந்த‌ உதையில் உடைந்து உருக்குலைந்து போயிருப்பாள்). 

இந்த மாதிரி உதை மரியாதைகளினால் "கால் மூட்டுகள்" சீக்கிரம் பயனற்றுப் போகும்; வலியினால் அவதிப்படுவார்கள். அறிவுள்ளவர்கள் இந்த மாதிரி செயல்கள் செய்ய முன்வர மாட்டார்கள். ஆனால் அதிகார‌ வர்க்கம் இந்த வீரர்களின் கால்களைப் பற்றியோ அல்லது உடல் நலனில் அக்கறை கொள்வதோ கிடையாது. 

ஆனால் தற்போது இரு நாட்டு வீரர்களும், தம் முன்னோர்கள் படும் அவதியைக் கண்டு உதையின் வீச்சை குறைக்க கேட்டுக்கொண்டுள்ளனராம். இதனால் இரு அரசாங்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனராம்.

இந்த உதை நிகழ்வை ஒரேயடியாக நீக்கினாலும் நல்லதுதான். ஏன் ஒரு "கைக் குலுக்களுடன்" இனிய தினத்தை புதிதாக‌ வரவேற்கக் கூடாது?.

 Photo Courtesy:npr.org
- எண்ணத்துப்பூச்சி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It