தில்லியில் நடைபெற்ற "ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்'' நூல் வெளியீட்டு விழாவில் புகழ்மிக்க வழக்கறிஞர் இராம். ஜெத்மலானி தமது தலைமை உரையில் :

இந்தியாவில் காசுமீர் பிரச்சனையும்,இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்சனையும் ஒன்றாக வைத்து அணுகக்கூடாது. இரண்டும் வெவ்வேறான பிரச்சனைகள்.

காசுமீர் மாநிலம் ஒரே அரசாக இருந்தது. இலங்கையில் தமிழர் அரசு வேறு, சிங்களர் அரசு வேறாக இருந்தன.

பாகிஸ்தான், ஆக்கிரமிப்புச் செய்த காசுமீரில் இருந்து வெளியேறிய பின்னரே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐ.நா.தீர்மானம் போட்டது.பாகிஸ்தான் வெளியேறவில்லை. பொது வாக்கெடுப்பு நடக்கவில்லை.

பிரதமராக இருந்த இராஜுவ்காந்தியை, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே சுலபமாக ஏமாற்றினார். பிரபாகரனை அரசு விருந்தாளியாக இந்தியாவுக்கு அழைத்து வந்து இராஜுவ்காந்தி பின்னர் நம்பிக்கை துரோகம் செய்து இந்திய இராணுவத்தை அனுப்பித் தமிழர்களைத் தாக்க செய்தார்.

வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வது இல்லை என்ற தொலைநோக்கோடு முடிவு எடுத்தார். ஆனால் இந்தியாவில் காங்கிரசு அரசு தமிழர்களுக்குத் துரோகம் செய்தது. ஈழத்தமிழர் படுகொலைக்கு உதவியது மிகவும் கண்டனத்திற்குரியது.

வைகோ அவர்கள் தமிழர்களுக்காகப் பாடுபடுகிறார். அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நான் துணையாக இருப்பேன். என் உயிர் உள்ளமட்டும் வைகோவுக்கும், தமிழர்களுக்கும் என்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்திப் பாடுபடுவேன்.

Pin It