Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

 

இணையதளத்தில் முகநூலில் (FACE BOOK) எனது நண்பர்களுடன் நாட்டு நடப்பு குறித்து விவாதங்களில் ஈடுபடுவது என் வழக்கம். சில நாட்களுக்கு முன்னாள் முகநூலில் (FACE BOOK) நான் பார்த்த ஒரு புகைப்படம் எனக்கு மிக அரிதான ஒன்றாகவும், ஆச்சரியமான ஒன்றாகவும் இருந்தது. முத்துராமலிங்கத் தேவரை இடப்புறமாகவும், பெரியாரை வலப்புறமாகவும் கொண்டு முத்துராமலிங்கத் தேவரைப் பெரியார் வாழ்த்தியிருப்பது போலவும், அவரது சமூக தொண்டினைப் பெரியார் பாராட்டியிருப்பது போலவும் அச்சிடப்பட்டிருந்தது. இந்தச் சுவரொட்டியை வெளியிட்டிருப்பவர்கள் “நாம் தமிழர்'' அமைப்பினர். இந்த சுவரொட்டியை கண்டித்து இணையதளத்தில் பல்வேறு கருத்துக்களை நண்பர்கள் பதிவு செய்திருந்தனர்.

பெரியாரிய உணர்வாளர்கள் பலர், பெரியார் முத்துராமலிங்க தேவரை இப்படிப் பாராட்டியதாக வரலாறு இல்லை எனவும், குடி அரசு இதழிலும், பெரியாரைப் பற்றிய திறனாய்வு நூல்களிலும் இதற்கான சான்றுகள் இல்லை எனவும் வாதிட்டனர்.

பெரியாரியவாதிகளின் இந்த குற்றச்சாட்டிற்கு “நாம் தமிழர்'' அமைப்பினர் இதுவரை பதில் தரவில்லை. சரி, அந்த சுவரொட்டியில் அப்படி என்ன இருந்தது என்று பார்ப்போமா? மூக்கையா தேவரின் சமூகப் பணிகளை பாராட்டியும், முத்துராமலிங்கத் தேவரைப் போலவே மூக்கையத் தேவரும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி, வேலைவாய்ப்புக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று பெரியார் மூக்கையாத் தேவரையும், முத்துராமலிங்கத் தேவரையும் மாறி மாறிப் பாராட்டியுள்ளார். இப்படியொரு சம்பவம் நடந்திருக்குமா? நடந்திருக்காதா? என்ற வரலாற்று ஆய்வுக்குள் நான் போகவிரும்பவில்லை. என்னுடைய கேள்வியெல்லாம் நம் நண்பர் சீமானுக்குத் தேவரையும், பெரியாரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்திப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது? அவர் மட்டும் ஏன் இதுவரை எந்த அரசியல் ஆளுமையும் சிந்திக்காத வண்ணம் வித்தியாசமாக சிந்தித்து கொண்டிருக்கிறார்? என்று நான் சிந்திக்கும்போதுதான் அவருடைய அரசியல் பிரவேசம் எனக்கு ஞாபகத்தில் வந்தது.

முத்துராமலிங்கத் தேவரை சீமான் துதிபாடுவது இன்று, நேற்று நடக்கும் சம்பவங்கள் அல்ல. அவரது முதல் படமான "பாஞ்சாலங் குறிஞ்சி'யில் “மன்னாதி மன்னருங்க மறவர் குல மாணிக்கமுங்க, முக்குலத்து சிங்கமுங்க முத்துராமலிங்கமுங்க'' என்று பாடல் வரிகளை அமைத்துத் தனது தேவரின் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

'தம்பி' படத்தில் தமிழ் உணர்வாளரான கதாநாயகன் வீட்டில் முத்துராமலிங்க தேவரின் படம் தொடங்கவிடப்பட்டிருக்கும். அதன் அருகிலேயே பெரியார் படம் தொங்கவிடப்பட்டிருக்கும். (இதுபோன்ற‌ நகைச்சுவை காட்சிகள் அத்திரைப்படத்தில் அதிகம் இருப்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதும்). எனவே, சீமான் கடந்த பதினான்கு ஆண்டுகளாக முத்துராமலிங்க தேவரைத் தலைவராக வணங்கி வருகிறார். இப்போது அவர் அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டதால் தென்மாவட்டங்களில் அதிகமுள்ள முக்குலத்தோர் வாக்கு வங்கியைப் பெறுவதற்கு, சராசரி வாக்கு வங்கி அரசியல்வாதிகளைப் போலவே, (வை.கோ.வில் தொடங்கிப் பொதுவுடைமை இயக்கத்தினர் வரை அனைவரும் தேவர் சிலைக்கு மாலை போடுகிறார்கள்) சீமானும் ஆயுத்தமாகி விட்டார். குறிப்பாக அவருடைய இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள மறவர்களின் வாக்கும், ஆதரவும் சீமானுக்குத் தேவைப்படுகிறது. ஆகவே, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துத் தனது அரசியல் முகத்தை மக்களுக்கு காட்டுகிறார். (அப்படியானால் தமிழ்த் தேசிய அடையாளம்(!) என்ன ஆனது?). இவர் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசிய கொள்கைக்கும், முத்துராமலிங்கத் தேவருக்கும் துளி அளவும் தொடர்பு இல்லை என்பது கற்றறிந்த தமிழ் உலகத்திற்கு நன்கு தெரியும்.

“தேசியமும் தெய்வீகமும்'' தனது இரு கண்கள் என முழங்கியவர் தேவர். தமிழ் தேசியத்திற்கு எதிரான இந்திய தேசியத்தையும், தமிழர்களை “வேசி மகன்'' என்று அழைத்த இந்து மதத்தையும் போற்றி பாதுகாத்தவர். முத்துராமலிங்கத் தேவர். சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் மக்களைச் சென்று சேர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், இந்து மத வெறியர் “கோலால்கரை'' (ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களில் ஒருவர்) அழைத்துத் தமிழகத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, இந்துமதப் பாசிசத்தை தமிழகத்தில் பரப்புவதற்கு உறுதுணையாக இருந்தவர். இன்னும் சொல்லப்போனால், தமிழ் சமூகமான மறவர் சமூகத்தை, பெரியாரின் இனஉணர்வுச் சிந்தனையிலிருந்தும், பகுத்தறிவு உணர்விலிருந்தும் அப்பாற்பட்டு சாதி உணர்வுக்கும், இந்திய தேசியத்திற்கும் அச்சமூகத்தைப் பலியாக்கியதில் முத்துராமலிங்கத்திற்கு முகாமையான பங்கு உண்டு.

பெரியாரின் சமூகநீதி கருத்துகளால் உந்தப்பட்டு எழுச்சி பெற்ற வன்னியர், நாடார், தலித் போன்ற சமூகங்கள் இன்று கல்வி அளவிலும், மாற்றத்தை நோக்கிச் சிந்திக்கும் முறையிலும் வியத்தகு பரிணாம வளர்ச்சியைப் பெற்று வளர்ந்து வருகின்றனர் என்பது கண்கூடு. ஆனால், பெரியாரின் இந்தச் சமூகநீதி அரசியலைத் தேவர் சமூகம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாவண்ணம் இந்து மத அரசியலையும், இந்திய தேசிய அரசியலையும் அவர்கள் மீது திணித்து அந்த மக்களை, தமிழ்த்தேசிய அரசியலில் பின்னோக்கி இருக்கச் செய்ததில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு அதிகம். ஒருவருக்கொருவர் முரண் அரசியல் பார்வை கொண்ட பெரியாரையும், தேவரையும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவர் என்று நேர்கோட்டு பாதையில் இருவரையும் நிறுத்துகிறார் சீமான்.

அரசியலில் இது போன்ற நிகழ்வுகள் சாதாரணம் என்று நகைச்சுவை நடிகர் பாணியில் நம்மவர்கள் இதற்கு பதில் சொல்லலாம். ஆனால், இதற்குப் பின்னால் அரசியல் இருப்பதை நாம் உணர வேண்டும். சமீபகாலமாக, பெங்களூர் குணா அவர்களின் கருத்தாக்கப்படி, “பெரியார் ஒரு கன்னடர், அவர் உருவாக்கிய திராவிட இயக்க அரசியல் மரபுதான் தமிழ்த் தேசியத்தை எழுச்சி பெறவிடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறது என்கிற கருத்தியலை உள்வாங்கிக் கொண்டார் சீமான். ஆகையால், தனது தலைவர்கள் பட்டியலில் இருந்து பெரியாரை நீக்கிவிட்டேன் என்று அறிவித்தார். அவரது “நாம் தமிழர்'' அமைப்புச் சுவரொட்டிகளில், பெரியாரோ, திராவிட இயக்க முன்னோடிகளோ இதுவரை இடம் பெற்றதில்லை. பார்ப்பன எதிர்ப்பை முன்னிறுத்தாமல், திராவிட அரசியலை விமர்சிக்கும் சீமான், மும்பை சென்றபோது பால்தாக்கரே போன்ற இந்துத்துவ சிந்தனைவாதியை மரியாதைக்குரிய தலைவர் என்று விளித்தார்.

சீமானுக்கு, முத்துராமலிங்கத் தேவர், பெரியார், சேகுவாரோ, பால்தாக்கரே என எல்லோருமே தேவைப்படுகிறார்கள், அரசியலுக்காக. அப்படியானால் அவருடைய கொள்கைத்தான் என்ன? நாம் கேட்க வேண்டியுள்ளது. சீமானின் இந்தக் குழப்பமான அரசியல் சிந்தனையின் தொடர்ச்சியாகத் தான் பெரியாரும், முத்துராமலிங்கத் தேவரும் ஒத்த சிந்தனையுடையவர்கள் என்றும், இருவரும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர்கள் என்றும் சீமான் கருத்து தெரிவித்திருக்கிறார். பெரியாரின் கருத்துக்களை மறுக்கவோ, எதிர்த்துப் பேசுவதோ சீமானின் தனிப்பட்ட சனநாயக உரிமை. ஆனால், பெரியாரின் கருத்துக்களைத் திரித்துப் பேசுவதற்கு சீமானுக்கு எந்த உரிமையும் கிடையாது. நமது நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் தலைவர் என்று எவரும் கிடையாது. தான் பிறந்த சாதிக்குத்தான் ஒவ்வொருவரும் தலைவராகிறார்கள். ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும் யாரும் இதுவரை தலைவராக இருந்தது கிடையாது. தன் சாதியைத் தாண்டி சிந்திப்பவன், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் தலைவனாகி விடுகிறான். அந்த வகையில், பெரியார், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்குமான மகத்தான தலைவர். அப்படிப்பட்ட தமிழினப் போராளி பெரியாரைப் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் தலைவராகப் பார்ப்பது சீமானின் பிழையான பார்வையைப் பட்டவர்த்தனமாக காட்டுகிறது.

ஒரு வாழ்நாள் முழுவதும் இன மேம்பாட்டிற்காக உழைத்த ஒரு தலைவரை, இந்தியத் தேசியத்திற்கும், மத அடிப்படைவாத சிந்தனைக்கும் தன் வாழ்நாள் முழுவதும் சேவகம் செய்த ஒருவருடன் ஒப்பிட்டதன் மூலம், தனக்கோ, தனது அமைப்பிற்கோ தெளிவான சிந்தனை இல்லை என்பதைச் சீமான் வெளிப்படுத்தியுள்ளார். 'நாம் தமிழர்' இளைஞர்களுக்குச் சாதி ஒழிப்பு சிந்தனையோ, நாத்திகச் சிந்தனையோ, பார்ப்பன எதிர்ப்போ வர்க்க விடுதலையோ பயிற்றுவிக்கப்படுவதில்லை. எந்த முற்போக்கு சிந்தனையையும் பயிற்றுவிக்காமல், பொருள் முதல்வாதச் செயல்பாடுமில்லாமல் இவர்கள் எப்படிட்ட தமிழ்த்தேசியத்தைக் கட்டமைக்க போகிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.

சீமான் வாக்கு அரசியலுக்கு முத்துராமலிங்கத்தையும், தமிழ்த்தேசிய அரசியலுக்கு மேதகு பிரபாகரனையும் முற்போக்கு அடையாளத்துக்குத் தந்தை பெரியாரையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஒரு சட்டசபை தேர்தலைக் கூட சந்திக்காத சீமான், பழம்பெரும் அரசியல்வாதியைப் போல் தேர்தல் நுணுக்கங்களை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார். எது எப்படியோ, பெரியார் படத்திற்குப் பூசை புனஸ்காரம் செய்து நானும் 'திராவிடன்' என்று சொல்லிக் கொள்ளும் புது அரசியல்வாதி நடிகர் விஜயகாந்தை போலவே, நமது சீமானும் தமிழ்த்தேசிய போராளி(!) என்று சொல்லிக்கொண்டு திரையுலகத்திலிருந்து அரசியலுக்குக் குதித்திருக்கிறார் என்றுதான் நாம் எண்ணிக் கொள்ள வேண்டும்.

- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 ம பொன்ராஜ் 2011-03-31 15:47
தேவரின் படத்தை 'தம்பி'யில் வைத்ததற்காக சீமான் பின்பு மன்னிப்பு கேட்டு கொண்டதாக தகவல். 'பசும்பொன்' படத்தில் 'தென்னாட்டு சிங்கமே தேவரைய்யா' தொடங்கி 'பாஞ்சாலங்குறிச ்சியில்' 'முக்குலத்து சிங்கமுங்க முத்துராம லிங்கமுங்க' வரை சீமான் பணியாற்றி இருந்தாலும் 'சேரிப் புலிகள் நடத்திய' ஒரு தாழ்த்தப் பட்ட தளபதி (பேர் நினைவில்லை) படத் திருப்பு விழா, அம்பேத்காரையும் அரசியல் குருவாக கொண்டது போன்ற செய்கைகளினால் சீமான் தேவர் சமூகத்திடமும் "இவன் உண்மையிலேயே நம்மாளு தானா?" என்று பிரித்து பேசும் வகையில் அவருடைய செயல் திட்டம் இருப்பதால் சற்று பொருத்தருள்வோம் . 'காங்கிரசை கருவருத்தல்' என்ற தொடக்க இலக்கில் இருந்து பயணிக்கும் சீமானின் செயல் திட்டங்களை நாம் பொறுமையாக கவனிப்போம். ஆதரவு தருவோம். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு இந்த கட்டுரை குறித்து பேசுவோம். இது சரியான நேரம் அல்ல.
Report to administrator
0 #2 இளங்கோவன் அன்பன் 2011-03-31 18:58
//இணையதளத்தில் முகநூலில் (FACE BOOK) எனது நண்பர்களுடன் நாட்டு நடப்பு குறித்து விவாதங்களில் ஈடுபடுவது என் வழக்கம். சில நாட்களுக்கு முன்னாள் முகநூலில் (FACE BOOK) நான் பார்த்த ஒரு புகைப்படம் எனக்கு மிக அரிதான ஒன்றாகவும், ஆச்சரியமான ஒன்றாகவும் இருந்தது. முத்துராமலிங்கத ் தேவரை இடப்புறமாகவும், பெரியாரை வலப்புறமாகவும் கொண்டு முத்துராமலிங்கத ் தேவரைப் பெரியார் வாழ்த்தியிருப்ப து போலவும், அவரது சமூக தொண்டினைப் பெரியார் பாராட்டியிருப்ப து போலவும் அச்சிடப்பட்டிரு ந்தது. இந்தச் சுவரொட்டியை வெளியிட்டிருப்ப வர்கள் “நாம் தமிழர்'' அமைப்பினர். இந்த சுவரொட்டியை கண்டித்து இணையதளத்தில் பல்வேறு கருத்துக்களை நண்பர்கள் பதிவு செய்திருந்தனர்.//
அது சுவரொட்டி இல்லை. மூக்கையா தேவரின் நூற்றாண்டு மலர். அதில் முத்துராமலிங்க பெரியார் என்ற தலைப்பில் பெரியார் எழுதிய கட்டுரை அது. ஜீவசகாப்தன் நீண்ட நாட்களுக்கு முன்பு பார்த்ததால் சுவரொட்டி என குறிப்பிட்டுவிட ்டார் போலும். மற்றபடி தொடருங்கள்.
Report to administrator
0 #3 பிரபு 2011-03-31 22:42
சாதி முத்திரையை மிக எளிதில் குத்திவிட்டார்.
Report to administrator
0 #4 durai ilamurugu 2011-04-01 15:05
சீமான் மட்டு அல்ல தமிழ்த்தேசியம் பற்றிப்,பேசும் பலகுழுக்களும் அப்படித்தான்
தமிழ்த் தேசியம் வெற்றி பெறும் வரை தேர்தல் கூடாது. அதைப்புறக்ககணிக ்க வேண்டும். தமிழ்த் தேசியம் என்றால் தமிழ் நாடு தனி நாடாகப்,போவதுதா ன் என்று கூறுபவர்கள். . தங்களுடைய இயலாமையை ஒரு பெரிய சாதனையைப்.போல காட்டும் இவர்கள் { எ.கா தேர்தலைப் புறக்கணிப்பது } உதட்டளவில் மார்க்சியம் பேசுபவர்க்ள் மண்ணுக்க்கேற்ற புண்ணுக்கேற்ற வைத்தியம் என்று பிதற்றும் இவர்கள் அனைவ்ரும் விரும்புவது "தூயதமிழ்க் குருதி உடையவர்கள் மட்டுமே தமிழ் நாட்டில் வசிக்க வேண்டும் என்பதே தமிழ் நாட்டைவிட்டு .மார்வாரிகளை வெளீயேற்றுவோம் என்று ஆரம்பித்து பின் மலையாளிகள் அப்புறம் வடுகர்கள் என்று வந்து பிறகு பெரியாரும் வடுகர்தாம் திராவிடத்தால் தமிழன் கெட்டான் என்று ஒப்பாரி வைப்ப்பவர்கள். ஒரு நாள் பால்தாக்கரே ராஜ்தாக்கரே பெருமகன்{GENTLE MAN)என்பார்கள். தேவர் சிலைக்கு மாலை போடுவார்கள். மு க அழகிரியை சந்திதுப் பேசுவாரகள் சசிகலா கணவன் நடராசனைக் கூப்பிட்டு விழாஎடுப்பார்கள ் ஆனால் தாங்கள் தூய தமிழ்த் தேசியம் பேசுபர்கள் என்று மார் தட்டி கொள்வார்கள் முடை நாற்றம் வீசும் அளவிற்கு பழமை வாதம் பேசும் இவர்களுக்கு அகஸ்தியயர், ராமன் , கிருட்டிணன் எல்லோரும் தமிழர்க்ளே .ராசராசசோழன் தான் முன் மாதிரித்தமிழன் . அவனுடைய முதுகிற்குப்,பி ன் நின்று பார்ப்பனியத்தின ் அடிவருடிகளாக விளங்குமிவர்கள் .ராசராசசோழன் பார்ப்பனர்களை எதிர்த்தவன் பறையருக்கு இறையிலி கொடுத்தவன் என்று சிறிது நாணமின்றி ஆயவுக்கட்டுரைகள ை வெளியிடுபவர்கள் . ஆனால் இவர்க்ளுக்குகுள ் ஒரு ஒற்றுமை உண்டு . இவர்கள் எல்லாம் ஆதிக்க சாதியை சார்ந்தவர்கள் ஒருவர் பாக்கி இல்லாமல் நாடார் நாயுடு , முக்குலத்தோர் என்று நாட்டுப்,புறங்க ளில் தலித்களுக்கு எதிராக பஞ்சாயத்து பண்ணுபவர்கள். தலித் விடுதலை ,பெண்ணுரிமை ,தீண்டாமை என்று எல்லாம் பேசுவார்கள் நடை முறையில் தங்களுடைய சாதியை காட்டுவதில் மற்ற அரசியல் வாதிகளுக்கு எந்த விததிலும் சளைத்தவர்கள் அல்லர். இவர்கள்பேசும் வீரியமான தமிழ்த்தேசியம் ஃபாசிசத்திற்கு நிகரானது. தமிழ் மொழி முதற் கொண்டு அனைத்தையும்" தரப்,படுத்த" விரும்பும் இவர்கள் வட்டார வழக்கு , தலித் மொழி நடை இவற்றிற்கெல்லாம ் எதிரிகள் சுருக்கமாக சொன்னால் இவர்கள் தலிதகளின் அய்யத்திற்கு உரியவர்களகாக இருக்கிறார்கள் . எதிரிகள் என்று கூட சொல்லலாம் /தமிழ்த் தேசியத்தை தலிதகள் கையில் போய்விடாமல் தடுத்துக் கொண்டு இருக்கும் பெருமை இவர்களுக்கு உண்டு . இவர்களுடைய தீவிரமான பழமைவாதம் தலித்களை சற்று எட்டியே நிற்க செய்கிறது இந்திய விடுதலைப் போரை ஒரு காரணமாகக் காட்டி பார்ப்பனியத்தை வளர்த்த திலகர் , காந்தி,போல் இவர்கள் தமிழதேசியத்தை ஒரு காரணமாக காட்டி சாதிக் கொடுமைகள் நிறைந்த பண்டைய தமிழகதை மீட்டுருவாக்க நினைப்ப்பவர்கள் தமிழ்ப்,பொற்கால த்தைக்கொண்டு வருகிறேன் என்ற பெயரில் சாதிக்கொடுமைகள் நிறைந்த க்லவியைக்கூட பொதுவாக்காத கடந்த காலத்தை உருவாக்க மட்டர்கள் எனபது என்ன உறுதி? மரபு என்ற பெயரில் பழங்ககதைகளை சிலாகிக்கும் இவ்ர்கள் அவ்ற்றை நடைமுறைப்படுத்த மட்டர்கள் என்பது என்ன நிச்சயம்? அறிவியலுக்கும், பகுத்தறிவிற்கும ் பொருந்தாத கருத்துகளை மக்கள் மீது திணிக்க மாட்டர்களா? பழமையை மீட்டுக் கொணர்வது என்பது சாதியத்தையும் பெண்ணடிமைத்தனதை யும் மீட்டுக்கொண்டு வருவதற்கு ஒப்பாகும் என்பதைப் பெரியார் திறம்பட தமிழ் மக்களிடம் பரப்,ப்புரை செய்துள்ளார் என்பதுவே இவர்களுக்கு அவர் மீது உள்ள சினத்தின் காரணமாகும்.
தேர்தல்புற்க்கண ிப்பு என்றல் என்ன? தேர்தல் நடக்கும் வரை முக்காடுப்,போட் டுக் கொண்டு மூலையில்முடங்கி ப்,போவதுதானா? அன்று ! தேர்தலை தாங்கள் ஏன் புற்க்கணிப்பு செய்கிறோம் என்பதை மக்களிடம் பரப்புரை செய்யவேண்டும் வை. கோ செய்வரா? செயலலிதவின் ஆணவப்,போக்குகுற ித்து பொது மேடையில் பேசுவாரா? தன்னுடைய மபெரும் பேச்சாளர்களை பேசவிடுவாரா? குறைந்த அளவு அவர்கள் அனைவரும் 49 ஓ பிரிவின் படி யாருக்கும் வாகளிக்கவில்லை என்பதை பதிவு செய்யவேண்டூம் என்பதை உறுதி செய்வாரா? அவர் செய்ய மாட்டார் அவர் தேர்தல்புற்க்கண ிப்பு ஒருதிட்டமிட்ட நாடகம்.. செயலலிதா போட்டி இடும் தொகுதியும் குறையக் கூடாது .ம தி மு க வின் ஒட்டும் சிதறமல் அதிமுகவிற்குசெல ்லவேண்டும் என்பது தான் அவர் நோக்கம்!. *** *** ** ***** *********
செயலலிதா வெற்றி பெற்றால் முதல் பூச்செண்டு கொடுப்ப்வர் வை. கோ அல்லது சீமான் அல்லது வீரமணியாக இருக்கலாம்
Report to administrator
0 #5 vinosubra 2011-04-04 16:23
ungaludaya katturai, seemanin meethana ellorum kondulla melatomanna parvaiyai matrum endru nambukiraen.ava r theeveera theerka sinthanaigalil pin thangiyirukalam ,aanal avarin tamizh unarvu theeviramanadhu .jeevan innum satru koormaiyana vaathangalai munniruthungal. vazhthugal.
Report to administrator
0 #6 selvarasu 2011-04-04 16:24
we prefer a confused Seeman than a cunning karuna or jeya.
Report to administrator
0 #7 elagnairu 2011-04-06 03:27
கருணாநிதிக்கு 55 வருடம்.... ஜெயலலிதாவுக்கு 20 வருடம்... ஏன் இப்படி ஒரு 5 வருட வாய்ப்பு கூட கொடுக்காமல் சீமானை விமர்சிக்கிறீர் கள்... இன்றைய தமிழ் இளைஞனுக்கு ஒரு புது விதைய்யாக சீமான் தென்படுகிறார்.. . (விஜய்..அஜீத்.. .ரஜினி என்று சுற்றும் முட்டாள்களுக்கு இவர் பரவாயில்லை என்று நினைக்கலாமே) இங்குள்ள தாமரை முதல் அறிவுமதி வரை யாராலும் முன்னெடுக்க முடியாத ஈழப் போராட்டம் padriya ninaivukalai மக்கள் மத்தியில் மறக்க முடியாத செய்தியாக கொண்டுசெல்லும் சீமானின் செயலை... 2ஜி... விலைவாசி உயர்வு... என்று ஏகப்பட்ட பிரச்சனைகளை ஆக்ரோசமாக கொண்டுசெல்கிறார ்... இதைச் செய்ய கையாலாகாமல் பலர் அவர் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள். .. இணையத்தில் எழுத கைவந்த பல அறிவுஜீவிகள் மக்கள் மத்தியில் போக வெட்கப்படுகிறார ்கள்... சீமான் எழுத்தில் ஒழிந்துகொள்ள‌வி ல்லை.. உங்களால் செய்ய இயலாததை செய்யும் ஒருவனை உங்கள் கண்ணோட்டத்தில் பார்த்து விமர்சிக்காமல். .. அவன் செயல்பாட்டை பாருங்கள்,, இன்று உள்ள அரசியல்வாதிகளீல ் எவன் பொய் பேசாத.. கொள்கை மாறாத.. அயோக்கியத்தனம் செய்யாதவன்... இந்த அரசியல் களத்தில் புதிதாக வந்துள்ளவன் சீமான். அவ‌ன் வளர்ச்சி விதை.. முளை விட்டுள்ளது... சாதியாக தியாகிகளை பிரித்துக் கேவலப்படுத்துவோ ர் மத்தியில் எதோ ஒரு நூலில் இணைக்கப்பார்க்க ிறான்.. அதில் சீமானுக்கு பெரியார் காமராசர் ஜீவா கொள்கைக்கு பயன்படுவதுபோல் முத்துராமலிங்கத ்தேவரும் பயன்படலாம்.. எது எப்படியோ இளைஞர்களுக்கு ஒரு நல்ல முன்னோடி தேவை.. அது கிடைக்கிறதா பாருங்கள்.. விமர்சனம் என்ற போர்வையால் அவன் செயல்பாட்டு வளர்ச்சியைத் தடுக்காதீர்கள். . விவாதிக்க..9443 761307
Report to administrator
0 #8 Guest 2011-04-07 12:40
பெரியார் தன் சொத்துக்களை வீரமணி குடும்பத்திற்க் கு மட்டும் விட்டு சென்றார்.தேவர் தன் சாதியை மக்கள் அனைவருக்கும் பிரித்து கொடுத்துள்ளார். அதற்காகவாது அவரை பாராட்லாம் இல்லையா? வீரமனி ஒரு நூலை வெளியிடவிடாமல் உச்சநீதிமன்றம் வர சென்றாரே ஏன்? தேவரை ப்ற்றி tamilpriyan balamurugan என்ற facebook பதிவு செய்துள்ளேன் பார்த்துவிட்டு மறுமொழியிடவும்.
Report to administrator
0 #9 Senthamil 2011-04-08 01:12
//தனக்கோ, தனது அமைப்பிற்கோ தெளிவான சிந்தனை இல்லை என்பதைச் சீமான் வெளிப்படுத்தியுள்ளார்//

உண்மையிலேயே மிகச்சிறந்த கட்டுரையை தேவையான நெரத்தில் எழுதியுள்ளீர்கள ். இதை படித்தாவது சிமான் மாதிரியே உருப்படியா யோசிக்க தெரியாத தெளிவான சிந்தனை இல்லாத அந்த இளைனஜர்கள் பார்த்து திருந்தினால் நன்று.

Report to administrator
0 #10 thamizhan prabhu 2011-04-08 17:14
naamellaam eezha porinbothu 'maanada mayilada' paarthu kondirundha bodhu medai medaiyaaga kadharinaan... naam panju methaiyl urangi kondirundha bothu avan sirayil kosukkadyil amarndhu poraligalukku aarudhal sollikondirundh aan...

seemaan irundha idam then maavattam enbadhaal devarin thaakkam adhigam irukkum...

unmaiyl seemaan devar inathil pirandhavar kooda illai...
avaradhu varalaatrai padithu vittu pinbu sollungal...

periyaarin mozhi kolgaiai mattumdhaan thavirkkiraarey thavira endrum avaradhu thalaivar periyaar dhaan...

saandraaga avar periyaar D.K'IL irundhirukkiraa r, marksia periyaar podhuvudaimai katchi'il irundhirukkiraar...

suvarottigalil periyaar pdathirku pinnaal thaan varum alavukku periyavan illai enbadhaal pottukolvadhill ai... devarin padam idhuvarai podappadavillaiye...

devar congress 'i edhirthadhaal andha samooga makkalukku adhanai puriya vaikkiraar..... .
Report to administrator
0 #11 aaruran 2011-04-10 12:27
பெரியாருக்கும் தமிழ்த்தேசியத்த ுக்கும் எந்த வகையான தொடர்பும் கிடையாது. உண்மையில் தமிழர்களின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் பெரியார் தான். அவர் கன்னடராக இருந்தமையால், திராவிடம் என்ற் கொள்கையை வகுத்து, தமிழர்களை வெறுக்கும் தெலுங்கர்களையும ், கன்னடர்களையும், மலையாளிகளையும் இணைத்து, தமிழ்நாட்டில் அவர்களின் ஆதிக்கத்துக்கு மேலும் வழிவகுத்து, தமிழ்த்தேசியத்த ை தலையெடுக்காமல் செய்தவர் தான் பெரியார்.

பெரியாரின் சமூகநீதிக் கொள்கைகள் பாராட்டப்பட வேண்டியவையாக இருந்தாலும், அவர் தமிழரல்லாதமையால ், தமிழர்களின் தமக்கென ஒரு நாட்டை, பாதுகாப்பை முதலில் பெற்றுக் கொண்டால், தமிழர்களுக்கிடை யேயுள்ள வேறுபாடுகளைப் பின்னால் தீர்த்துக் கொள்ளலாம் என்பதை அவர் உணரவில்லை. அதுமட்டுமல்லாமல ் இந்தியா முழுவதும் ஆதரவுள்ள, அரசியல் பலம்வாய்ந்த பிராமண சமூகத்தை, தமிழ்த்தேசியத்த ுக்கும், தமிழர்களுக்கும் எதிரிகளாக மாற்றியதும் பெரியார் தான்.

தமிழ்தேசியமும், தமிழர்களின் இந்துமதமும் பிரிக்கமுடியாதவ ை, "நாமார்க்கும் குடியல்லோம்" என்றும், தமிழோடிசை பாடல் மறந்தறியோம் எனவும் சூளுரைத்த தமிழன் அப்பர் சுவாமிகளும் ஒரு தமிழ்த்தேசியவாத ி தான்.சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை என்பதில் உறுதியாகவுள்ள ஈழத்தமிழர்களிடம ் இல்லாத தமிழ்தேசியமா? ஆகையால் தமிழ்தேசியம் பேசும் சீமானும் , நாம்தமிழர் கட்சியினரும் தமிழர்களனைவரையு ம், சாதி வேறுபாடில்லாமல் ஒன்றிணைக்க விரும்பினால், பெரியாரின் திராவிடம் என்ற வார்த்தையையே கைவிடவேண்டும். ஈழத்தமிழர்களைக் கொலைசெய்ய துணைபோன மலையாளிகளும், தமிழர்களை வெறுக்கும் கன்னடர்களும், தமிழர்களைச் சுரண்டும் தெலுங்கர்களும் திராவிடர்கள் என்ற வார்த்தையையே தீண்ட விரும்பாத போது, தமிழர்கள் மட்டும் திராவிடத்தையும் , பெரியாரின் கொள்கைகளையும் எதற்காகக் கட்டியழ வேண்டும்.

தமிழ்நாட்டிலும் , தமிழீழத்திலும் தமிழர்களினதும், , தமிழுணர்வுள்ளவர ்களினதும் ஆட்சி மலர வேண்டும், சுவரிருந்தால் தான் சித்திரம் கீறலாம். மறவர்களும், நாடார்களும், வன்னியர்களும், பறையர்களும், இன்னும் பலகோடி தமிழ்நாட்டுச் சாதிகளும், தமது சாதி வேறுபாட்டை மறந்து நாம் தமிழர்களாக மாற வேண்டும். அண்ணன் சீமான் அவர்கள் அதில் வெற்றி காணா வாழ்த்துவதை விட்டு, செத்துப் போன பெரியாரையும் முத்துராமலிங்கத ் தேவரரையும் சிண்டு முடித்துச் சீமானுக்குச் சீண்டிப் பார்க்க விரும்பும் ஜீவசகாப்தன்களை முதலில் ****** *******
Report to administrator
0 #12 Ravichandran 2011-07-26 18:03
ayya aruran avargale periyar onrum iranthuvidavill ai. innum tamil makkalin manathi valnthukondutha n irukkirar. neengal solliyathupol arasiyal atharavu athikarabalam antha kurippita inathidam irunthathaithan ethirthu poradi vettri kandavar periyar. tamildesiyam enbathu mattra inakiladamirunt hu innum nammai pirikkathan uthavum.
Report to administrator
0 #13 raja 2012-06-15 14:08
Seeman gain historical & geographical thoughts,knowll edge from Nedumaran,Balaa n & others who oppose Dravidaism and Specifically who against Dravidam,Periya r @Karunanidhi. That’s why he repeat the same thing which said by MA.PO.Sivagnana m,Muthuramaling am,and other party leader like Ramados….and if you go deeply the NAAM TAMILAR stage is full of Congress thoughts. Trully Elangovan, Gnansekaran, Kumariananthan, Thangabalu and other congress leaders will support the seemans speech. Because as others said when compare to vijaykanth, Rajinikanth, Vijay Seeman is better….the same thought to Tamilnadu congress also..Because they din’t got anything to lose politically or Vote Bank but anyhow dravida parties should collapse …then any one can Lead or rule tamilnadu even it can Seeman.
Report to administrator
0 #14 prabakaran 2012-06-18 01:14
அருமையான பதிவு.... சீமான் ஒரு போலி தமிழ் தேசியவாதி
Report to administrator
0 #15 vijayakumar 2012-06-19 00:33
"சீமான் ஒரு போலி தமிழ் தேசியவாதி"
சரி ஆன்றோர்களே உங்களுடைய வாதத்தை ஒப்புக்கொள்ளுகி றோம்.
தயவு கூர்ந்து மெய்யான தமிழ் தேசியவாதியை அடையாளப்படுத்து மாறு தாழ்ந்த பணிவேன்புடன் கேட்டுக்கொள்கிற ோம் - எம் தமிழ் வாழ காத்து கொண்டிருக்கும் உண்மை தமிழன்
Report to administrator
0 #16 RRaj 2013-03-30 23:38
"பெரியார், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்குமான மகத்தான தலைவர். அப்படிப்பட்ட தமிழினப் போராளி பெரியாரைப் பிற்படுத்தப்பட் ட சமூக மக்களின் தலைவராகப் பார்ப்பது சீமானின் பிழையான பார்வையைப் பட்டவர்த்தனமாக காட்டுகிறது.".. ........... பின்ன எதுக்கு திராவிடம் வந்தது.... திராவிடம் திராவிடம் என்று சொல்லும் நீங்கள்... திராவிட கட்சி இல் எவன் ஒருத்தன் தலைவன இருக்கான் சொலுங்கள்..... எந்த திராவிட நும் தமிழ் நட அழ வேண்டாம்.... ஒரு தமிழன் தமிழ் நடை ஆண்டல் போதும் திராவிடன் திராவின் என்று சொல்லும் எல்லாரும் முதலில் பொய் கேரளா, ஆந்திர, கர்நாடக எல்லா மாநிலதியும் முதலில் திராவிடம் ம மாத்திகிட்டு அப்புறம் இங்க வந்து திராவிடம் பேசுங்கள்... இல்லாவிடில் கொஞ்சம் வாய்யை மூடுங்கள்....
Report to administrator
0 #17 ராகவ ராஜ் 2013-06-17 20:38
இளஞாயிறு
அழகாக சொல்லிவிட்டார், "கருணாநிதிக்கு 55 வருடம்.... ஜெயலலிதாவுக்கு 20 வருடம்... ஏன் இப்படி ஒரு 5 வருட வாய்ப்பு கூட", " இன்று உள்ள அரசியல்வாதிகளீல ் எவன் பொய் பேசாத.. கொள்கை மாறாத.. அயோக்கியத்தனம் செய்யாதவன்... இந்த அரசியல் களத்தில் புதிதாக வந்துள்ளவன் சீமான்". இதற்கு மேல் திருவாளர் சீமான் (அவர் இயற்பெயர் ஸைமன் ) அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்புபவர்கள் வாய்ப்பு கொடுங்கள் !
Report to administrator
0 #18 Muthukumar 2015-12-21 15:01
முத்துராமலிங்க தேவரின் படமும், பெரியாரின் படமுமே அருகில் இருந்தது நகைச்சுவை காட்சி என்றால்..பெரியா ரும் இராஜாஜியும் அருகருகே இருக்கும் பல நிகழ்வுகளை கொண்டிருக்கும் திராவிட இயக்கங்கள் எவ்வளவு பெரிய நகைச்சுவை இயக்கங்கள் ..?
Report to administrator

Add comment


Security code
Refresh