சட்டெனக் கிளம்பும் புது நோய்களில் இது சிக்கிச் சீரழிய பெரிய காரணங்கள் எப்போதும் தேவைப்படுவதில்லை.

பிரபாகரனின் தலைமையைப் பேசிப் பேசி நா வளர்த்த சுப வீபாண்டியன் கருணாநிதியின் தலைமை ஏற்றுக் கால் நக்கும் எளிய மாற்றங்கள் தமிழகத்தின் நஞ்சூறிய வரலாற்றிலிருந்து கிளைப்பவை.

பாப்பாத்தி செயலலிதாவைப் போலவே தமிழக வரலாறும் முரட்டுத்தனமான முட்டாள் தனங்களை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. இல்லையெனில் முத்துக்குமாரை நெஞ்சில் விதைக்கவும் அறுபத்து நான்கு தொகுதியில் காங்கிரசைப் புதைக்கவும் ஒலிபெருக்கி கதற ஓலமிட்ட கொள்கைச் சீமான்கள் நா மரக்க மரக்க நக்க முடியுமா பாப்பாத்தியின் பொற்பாதங்களை!

திரும்பவும் சொல்லுவோம்!

இது தமிழகத்தின் நாட்பட்டநோய்!

இது தமிழகத்தின் தேசிய நோய்!

எவரானாலும் என்ன இரு நச்சரவங்களில் ஒன்றேனும் தீண்டியாக வேண்டும். அரவம் தீண்டாத திசையில்லை. அரவம் தீண்டாத முகமில்லை. திமுக, அதிமுக எனும் அவ்விரண்டும் திராவிடம் எனும் மலை முழுங்கிப் பாம்பின் தலைவாசலில் இருந்து புறப்பட்டவை என்பதால் இந்த நோய்க்கு ஒரு கோட்பாட்டு அறுவை தேவையாக இருக்கிறது.

தேசிய விடுதலைக் களம் உலைக்களமாகி வெடிக்க வேண்டிய எல்லாப் பொழுதுகளிலும் இதுபோன்ற அதிகக் குருதி செலவாகும் அறுவை மருத்துவங்கள் தவிர்க்க முடியாதவை.

தமிழ் ஈழத்தின் உயிர் நரம்பை அறுத்த கத்திகளில் முதன்மைப் பங்கு திராவிடத்துக்கு, தலைமைப் பங்கு இந்தியத்துக்கு.

இப்போதெல்லாம் இந்தியத்தின் ஆழ் மனத்தில் இன்பக் கிளர்ச்சியூட்டும் புல்லாங்குழலை திராவிடம் மீட்டுகிறது.

நொதிக்க வைத்துக் காரமேறிய தரம்மிக்க சரக்கு அழகழகான கோப்பைகளில் ஊற்றப்பட்டு திராவிடத்தால், இந்தியம் விருந்தோம்பப்படுகிறது. அந்தப் புல்லாங்குழலும் அழகுக் கோப்பைகளும் நமது கைகளும் மண்டைகளும்தான் என்றும் அந்தச் "சரக்கு' நமது குருதியும் கண்ணீரும் கலந்த ஒரு சரிவிகிதக் கலவையில் அண்மை வரலாற்றுக் காலம் தொட்டே கிடைப்பது என்றும் சொல்பவர்கள் நச்சரவங்களின் தீண்டலிலிருந்து வெகு தொலைவு ஓடுகிறார்கள்.

முள்ளிவாய்க்காலின் முகத்தில் அம்மைத் தழும்புகளாய்ச் சிரிக்கின்றன கருணாநிதியின் செயாவின் ஈழ ஆதரவு ஒப்பனைச் சொற்கள்.

துரோகம் என எளிய சொல்லில் திராவிடத்துக்கு பெயர் சூட்ட முடியாது. வற்றாத தமிழ்த் தேசப் பேரழிவின் பேராறு அது. அதன்ஒரு சிறு கிளை நதி துரோகம்.

அறுநூறுக்கும் மேற்பட்ட தமிழ்த் தேசத்தின் கடலோரத் தமிழர்கள் சுமந்து வீழ்ந்த சிங்களக் குண்டுகளிலும் வீரியம் மிக்கவை. திராவிடத்தின் குரலிலிருந்து பிறக்கும் தேன் தமிழ்ச் சொற்கள்.

தமிழ்த் தேசியம் என்பது தமிழகத்தின் போர் முழக்கம்.

அது கருணாநிதிச் சாக்கடையில் நெளிகிற புழுக்களுக்கும், செயலலிதாப் புழுதியில் புரள்கிற ஒலி பெருக்கித் தவளைகளுக்கும் ஒருபோதும் புரியாது.

அந்தப் புழுக்கள் தமிழ்ப் புழுக்கள் என்றும் அந்தத் தவளைகள் வீரத் தவளைகள் என்றும் நீங்கள் உணர்வீர்களென்றால், உங்களின் உடலில் வெயில் படாத ஏதோவொரு பகுதியில் நச்சவரங்களின் பற்கள் பதிந்திருக்கின்றன என்று பொருள்.

அந்தத் தவளைகளையும் புழுக்களையும் தாண்டி நாம் நடக்கும் பாதையோரங்களில் பாப்பாத்தியை வாழ்த்திச் சுவரொட்டுகிற பகுத்தறிவின் புளகாங்கிதம் நமக்கு அயர்ச்சியூட்டுகிறது. மூடப் பகுத்தறிவின் நாற்றத்தில் தமிழகத்தின் வரலாற்று மணம் கரைந்துபோகிறது.

தமிழர்களின் அறிவார்ந்த மரபு நாமார்க்கும் குடியல்லோம் என முழங்கியதாக நாம் இன்றும் நம்புகிறோம்.

நிகழ்காலம் நம்மைப் பார்த்து விலா நொறுங்கச் சிரிக்கிறது.

“பிரபாகரனை சிறைப்படுத்த இடப்பட்ட சட்ட மன்றத் தீர்மானம் இன்று இலங்கைப் பொருளாதாரத் தடைத் தீர்மானத்தைப் பார்த்துக் கேலி பேசுகிறது.''

தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் விடுதலை இயக்கத்தை யாழ்ப்பாண திகில் படம் போல நம் மக்களுக்குப் போட்டுக் காட்டிய திராவிடக் கட்சிகளின் ஆகப் பெரும் மக்கள் தலைவர்கள் இன்று களிவெறியில் இருக்கிறார்கள். அதில் திகில் படம் ஓர் எளிய நாடகம் போல் முடிந்து போனதில் அவர்கட்கு நெஞ்சம் நிறைந்துகண்கள் பனிக்கின்றன.

உண்ணா நோன்பும் அறிக்கைத் தாள்களும் மனிதச் சங்கிலிகளும், நிறைந்த நம் திராவிடப் போராட்டங்களின் வெளிச்சத்தில் தமிழகத்தின் ஆயுதப் போராட்டம் ஓவியம் ஒரு கனவைப் போல் நம்முள் கலைந்து போனதை திராவிட நச்சரவு தீண்டாத தமிழ் மூளையின் ஆகச் சிறிய அணுத் திரளும் அறிந்தே இருக்கிறது.

வேண்டாம் துரோக வலைப் பின்னலில் தேள் கொடுக்குகள் கொண்ட பெருஞ்சிலந்திகள் போல் வலம் வருகின்றன திரா விடப் பிதுக்கிய கட்சிகள். அதில் ஓட்டுப் பொறுக் கும் ஓட்டுப் பொறுக்காது என்ற அறிவார்ந்த வேறுபாடுகள் அறவே இல்லை.

தமிழ்த் தேசியத்தின் விடுதலைக் குருதி பாயாத வெற்றுடம்புப் பூச்சிகள் அந்த துரோக வலையின் எந்த முனையிலும் கால் வைக்கலாம். எச்சிலூறும் சிலந்தி கள் அவற்றை ஆசையோடு அள்ளிக் கொள்ளலாம்.

விடியப் போகிற வேளையின் அணையப் போகிற விளக்குகள் இவை.

முன்னேறுவோம்!

திராவிடச் சுடுகாட்டு நெருப்பு நம் பயணத்திற்கு வெளிச்சம் தர ஒருபோதும் முடியாது. தமிழ்த் தேசம் தன் சொந்த நெருப்பை உமிழத் தொடங்கும் காலமிது. செந்தமிழ் சீமான்களும் பகுத்தறிவுக் கோமான்களும் தாண்டாத எல்லையிலிருந்து கிளம்புகிறது ஒரு போரணி.

நாமார்க்கும் குடியல்லோம் எனும் சினங் கொண்ட பெருங்குரலில் அடங்கிச் சிரிக்கிறது தமிழ்த் தேச ஆன்மா.

பேச்சாளர்களைக் கடந்து எழுகிறது மக்களின் குரல்.

அறிவாளிகளைக் கடந்து எழுதுகிறது மக்களின் அணி.

ஈழம் தந்த கனப்பில் குளிர் காயும் இந்தியத் திமிரின் உயிர் நாடியில் வெடி பொருத்தி தீக் கொளுத்தக் காத்திருக்கும் வட கிழக்கும் காசுமீரமும் பஞ்சாபும் ஒரு ஒற்றைத் தீக்குச்சிக்காகக் காத்திருக்கின்றன நண்பர்களே!

தமிழகம் எனும் அந்த ஒற்றைத் தீக்குச்சி தன் வீட்டுக் குப்பைகளைக் கொளுத்திய கையோடு புறப்படட்டும்!

இந்தியத்தின் இறுதிப் பயணத்தில் திராவிட ஒப்பாரி தொடங்கட்டும்!

இந்தியத்திற்கென சிறப்புக் கவனத்துடன் செய்யப்பட்ட தமிழ்த்தேசக் கொள்ளி திராவிடத்தைக் கொளுத்தும் தன் வரலாற்றுப் பங்கை இனியேனும் ஆற்றட்டும்!

தமிழ்த்தேச ஈரநிலமெங்கும் முளைத்து அடர்ந் திருக்கும் நச்சுக் காளான்கள் நம் குரல் சூடுபட்டுக் கருகட்டும்!

தோழர் தமிழரசனின் கனல் மிக்க கண்களும் கருத்தும் துருப்பிடிக்காத எஃகில் வார்க்கப்பட்ட கருவியும் இன்னமும் காத்திருக்கின்றன.

தோழமையுடன்,

இளங்கோவன்