உணவுக்காக வாழ்பவர் நடுவில்
உணர்வுக்காக வாழ்பவளே!

காலை சிற்றுண்டிக்கும்
பகல் சோற்றுக்கும்
இடையில் நோன்பிருக்கும்
தறுதலை(வர்)கள் வாழும் நாட்டில்
பத்தாண்டுகளாய் நோன்பிருக்கும்
நல்லாளே!

நீ வாழும் திசை நோக்கி
வணங்குகிறேன் தாயே!

கருவில் உதித்த கண்ணிவெடியே
விரைவில் விடுதலை மலரும்
உன் எண்ணப்படியே!

விலங்குகூடத் தன்
இனத்தைக் கொல்ல அஞ்சும்
மாந்தம் மட்டுமே
விலங்கையே விஞ்சும்!

அருள்கூர்ந்து உன் நோன்பை
முடித்துக் கொள் தாயே...
அடிபணிந்து வேண்டுகிறான்
உன் அன்புச் சேயே!

ஆண்டைகள் ஆளும்
அயோக்கிய நாட்டில்
அமைதி வழியில் சென்றால்
அடிமையாய் வீழ்வோம்..
மறவழியில் அறவழி நின்று
மாவீரராய் வாழ்வோம்!

- நா.செந்திசை
சென்னைப் புழல் நடுவண் சிறை

Pin It