உத்தரவிட்ட டெல்லி நீதிமன்றம்

மும்பைக்குள் ஊடுறுவியுள்ள பீகாரிகளை மும்பையை விட்டு துரத்தியடிப்போம் என்று பேசி பீகாரிகள் மீது கொலைவெறி தாக்கு தல்களை நடத்தி வருகின்ற நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரேவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை பிறப்பித்துள்ள டெல்லி நீதிமன் றம், அவரை கைது செய்து கோர்ட்டுக்கு இழுத்து வருமாறு போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

ராஜ்தாக்கரே மட்டுமல்லா மல், சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே மற்றும் அக்கட்சியின் செயல் தலைவ ரான உத்தவ் தாக்கரே ஆகியோ ருக்கும் - பீகாரிகளுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும், இந்த வன்முறைப் பேச்சுகள் இந்திய அரசியல் அமைப்பை மீறுவதா கவும் கூறி கோர்ட்டில் ஆஜராகு மாறு சம்மன் அனுப்பியிருக்கி றது நீதிமன்றம்.

நாங்கள் வைத்ததுதான் சட் டம். மும்பைக்குள் எங்களை எவ ரும் அசைக்க முடியாது. நாட் டின் சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது என்ற திமிருடன் ரவுடித்தனம் செய்து வந்த தாக்க ரேக்களுக்கு எதிராக சவுக்கை எடுத்திருக்கிறது டெல்லி நீதி மன்றம்.

கடந்த 28ம் தேதி ராஜ் தாக்கரேவுக்கு எதிராக புதிய ஜாமீனற்ற வாரண்டை டெல்லி பெருநகர நீதிமன்ற கூடுதல் தலைமை நீதிபதி மனீஷ் யாதுன்ஷி பிறப்பித்திருக்கிறார்.

முன்னதாக ராஜ் தாக்கரே வின் வன்முறைப் பேச்சிற்கு எதி ராக கடந்த ஆகஸ்டு 31ம் தேதி டெல்லி நீதிமன்றம் அனுப்பியி ருந்த சம்மனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறி யதோடு, தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் ஆஜராவதை விட்டும் தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந் தார் ராஜ் தாக்கரே.

இதற்கு எதிராக இந்த ஜாமீ னற்ற வாரண்டை பிறப்பித்தி ருக்கும் நீதிபதி மனீஷ், நவம்பர் 17ம் தேதிக்குள் இந்த வாரண்ட் மீது நடவடிக்கை எடுத்து ராஜ் தாக்கரேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டிருக் கிறார்.

முன்னதாக, பீகாரிகளுக்கு எதிரான ராஜ் தாக்கரேவின் வன் முறைப் பேச்சுக்களுக்காக அவர் மீது பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது உச்ச நீதி மன்றம்.

இந்த இரு வழக்குகளுக்கா வும் ராஜ் தாக்கரேவிற்கு புதிய சம்மன்களை அனுப்ப உத்தர விட்டிருக்கிறார் நீதிபதி மனீஷ்.

மேலும், பீகாரிகளை மும் பையை விட்டே விரட்டியடிப் போம் என்று பேசிய சிவ சேனா கட்சியின் பால் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு எதிராகவும் சம்மன்களை அனு ப்ப உத்தரவிட்டிருக்கிறார் நீதி பதி.

நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரும் இந்த ஆணைகளை நீதிபதி வெளியிடக் காரணமாக இருந்தவர் ராம் லோச்சன் ஷர்மா என்கிற பீகாரி.

பீகார் மாநிலம் பெகுசாராய் நீதிமன்றத்தில் ராம் லோச்சன் தாக்கல் செய்த வழக்கு டெல் லிக்கு மாற்றப்பட்டு அதன் அடிப்படையில்தான் தாக்கரேக் களுக்கு சம்மன்களை வழங்கி, இப்போது டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ராம் லோச்சன் தாக்கல் செய் திருந்த மனுவில், தாக்கரேக்கள் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல், பிறரை வேண்டு மென்றே உள்நோக்கத்துடன் அவமானப்படுத்துதல், பத்திரி கைகள் மூலம் அவதூறு பரப்பு தல், சமூகங்களுக்கிடையே பகை மையை ஊக்கப்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு வரு கின்றனர்.

அவர்களின் கட்சிப் பத்திரி கையான சாம்னாவில் வட இந்தி யர்களுக்கு எதிராக (விஷக்) கருத்துகளை வெளியிட்டு வரு கின்றனர். இவையெல்லாம் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுக ளின்படி குற்றத்திற்குரிய செயல் களாகும் எனக் குறிப்பிட்டி ருந்தார்.

ராம் லோச்சனின் இந்த மனு டெல்லிக்கு மாற்றப்படுவதற்கு முன் பீகார் மாநிலம் பெகுசா ராய் நீதிமன்றத்தில் 2008ல் தாக் கல் செய்யப்பட்டிருந்தது. அப் போது, பெகுசராய் நீதிமன்றம் ராஜ் தாக்கரே, பால் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகி யோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி யது. ஆனால் அவர்கள் ஆஜராக வில்லை.

ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் தாக்கரேக்களுக்கு எதிராக ஏழு புகார்கள் பதிவாகி யுள்ளன. தனது உயிருக்கு அங்கு (ஜார்கண்ட் மற்றும் பீகார்) உத்த ரவாதமில்லை; அதனால் நீதிமன் றங்களில் ஆஜராக முடியாது என்று ராஜ் தாக்கரே அண்மை யில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்துதான் மேற்கண்ட வழக்குகள் டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டு தாக்கரே வகைய றாக்களுக்கு சம்மன் வழங்கியிருக் கிறது டெல்லி நீதிமன்றம்.

பீகார், ஜார்கண்டில் கால் பதி க்க பயமாக இருக்கிறது என்று கூறி தாங்கள் கோழைகள் தான் என்பதை நிரூபித் துள்ளனர் தாக் கரேக்கள்.

மும்பையில் ரவுடித்த னம் செய்யும் இவர் கள் தங்கள் ஏரியா வில் மட்டும் முஷ் டியை உயர்த்தும் பேட்டை ரவுடி களுக்கு ஒப்பா னவர்கள்தான். தங்களை வீரப் புருஷர்களாக மராத்திய மக்கள் மத்தியில் வெளிப் பத்திக் கொள்ளும் இவர்கள் மும் பைக்குள்ளேயே முடங்கிப் போய் கிடப்பதற்கு பீகாரிகளோ, இதர வட இந்தியர்களோ காரண மல்ல... இவர்களின் தீய நாக்குகள் தான் அதற்கு காரணம்.

- அபு

Pin It