சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்க்கை மதக்கலவர இழப்புகளோடுதான் தொடங்கி யது. சுதந்திர பொன் விழாவை நாடு கொண்டாடிய பிறகும் மதக்கலவரங்களினால் முஸ்லிம் களின் உயிர், உடமை, இழப்புகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இக்கலவரங்களை குறித்து ஆய்வு செய்த உ.பி. முன்னாள் காவல்துறை அதிகாரி விபூதி நாராயண் ராவ் தனது ஆய்வு நூலில், “இந்தியாவில் நடை பெறுகிற எந்த மதக்கலவரமும் உருவாகி 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்கிறது என்றால் அது நிர்வாகத் தின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது என்பதே உண்மை. மேலும் ஒரு ஊரில் மதக்கலவரம் நடக்க இருக்குமானால் அதனை முன் கூட்டியே கண்டறியவும், அதனை கட்டுப்படுத்தவும் மாநில அர சால் முடியும். இருப்பினும் சில மாநில அரசுகள் அதனை கண்டு கொள்வ தில்லை...'' என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிகழ்ந்த கலவரங்களினால் பாதிக்கப்படுவது சிறுபான்மை முஸ்லிம் கள்தான். உயிரும், உடமையும், பாதிக் கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எந்த வித இழப்பீடுகளும் வழங்கப்படுவ தில்லை. தவறிழைத்த அதிகாரிகளும், கலவரம் நிகழ்த்தியர்களும் தண்டிக்கப் படவில்லை என்பது மட்டுமில்லாமல் அவர்கள் பதவி உயர்வு பெறுவதும் வாடிக்கையாகி விட்டது.

தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். கலவரங்களினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப் பீடு வழங்க வேண்டும் என்று சிறு பான்மை மக்கள் நீண்ட நெடுங்காலமாக மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து தேசிய ஆலோச னைக்குழு வரையறுத்த சட்டத்தை மத்திய அரசு சட்ட மசோதாவாக நிறை வேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தில் சொல்லப்படும் பிரிவுகள் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஷரத்து 8ல்...

சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மையினரில் ஒருவர் வாய்ச் சொற்கள் மூலமாகவோ அல்லது குழு வைச் சார்ந்தவர்களுக்கு எதிராகவோ துவேஷம் ஏற்படுமாறு நடந்து கொள் வது துவேஷப் பிரச்சாரம் என்றும் குற் றத்தைச் செய்ததாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஷரத்து 9ல்...

ஒருவர் தனியாகவோ, கூட்டாகவோ ஒரு நிறுவனத்துடன் இணைந்தோ, நிறு வனத்திற்கு ஆதரவாகவோ, ஒரு கூட் டத்திற்கு எதிராக கூட்டத்திற்கு புறம் பான வகையில் தொடர்ந்து செயல் பட்டால், அச்சுறுத்தினால் இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவர்களாவர்.

ஷரத்து 12ல்...

குழுவைச் சேர்ந்தவருக்கு மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ வலி யும் வேதனையும் ஏற்படுமாறு ஒரு பொது (அரசு) ஊழியர் நடந்து கொண் டால் அவர் சித்திரவதைக் குற்றத்தை புரிந்தவராவார்.

ஷரத்து 13ல்...

அவ்வாறு இந்த மசோதாவில் கூறப் பட்டுள்ள குற்றங்கள் சம்பந்தமாக பொது (அரசு) ஊழியர் கடமை தவறி யதாகக் கருதப்பட்டு அவருக்கு தண் டனை அளிக்கப்படும்.

ஷரத்து 14ல்...

ராணுவத்தையோ, பாதுகாப்பு படை களையோ கட்டுப்பாட்டில் வைத்திருக் கும் அரசு அதிகாரி அவர்கள் தங்களு டைய கடமைகளைச் சரியாக செய்யா விட்டாலோ அல்லது தன் கீழ் இருக்கும் ஊழியர்களை கட்டுப்பாட்டில் வைத்தி ருக்காமல் போனாலோ தண்டனை அளிக்கப்படும்.

ஷரத்து 15ல்...

தன் மேற்பார்வையில் பணியாற்று பவர்கள் தவறு இழைக்கும்போது அர்களைக் கட்டுப்படுத்த இயலாதவராக கருதப்படும் அதிகாரி மறைமுகப் பொறுப்பின்படி தவறிழைத்தவராகி றார்.

அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்டவர் களின் இழப்பீடுகளை மாநில மதிப்பீட்டு குழு ஒன்றை அமைத்து அதன் மதிப் பீடுகள் அடிப்படையில் இழப்பீடுகள் வழங்க வேண்டும். இழப்பீடு என்பது கருணைத் தொகையல்ல... உரிமைத் தொகை என்று கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த இழப்பீட்டுத் தொகையும் 30 நாட்களுக்குள் அளிக் கப்பட வேண்டும்.

மேற்கண்ட பிரிவுகளைக் கொண்ட சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத் தியவுடன் பாஜகவும், சங்பரிவாரத்தின ரும் அதற்கு எதிராக கச்சை கட்ட ஆரம் பித்து விட்டனர். சேராத இடந்தனிலே சேர்ந்த பாஜகவின் கூட்டணிக் கட்சி முதல்வர்களும் இந்த சட்டத்தை எதிர்த் துள்ளனர்.

1992ம் ஆண்டு டெல்லியில் கூட்டப் பட்ட தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத் தில் பாஜக முதல்வர்களே அமைதியாக இருந்த நிலையில் கரசேவைக்கு ஆதர வாக பேசிய திராவிட இயக்கத்தின் பரி ணாம வளர்ச்சி(?)யான தமிழக முதல் வர் ஜெயலலிதா இந்தச் சட்டத்திற்கு எதிராக கண்டனத்தை எழுப்பியுள்ளார்.

மாநில அரசின் உரிமைகளில் தலை யிட்டு அதைக் கலைக்க வழிவகை செய் யும் இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று மற்றமாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள் ளார் ஜெயலலிதா.

நாங்களும் ஜெயலலிதாவும் இயற்கையான கூட்டணியில் அமைந்திருக்கிறோம் என்று அத்வானியால் பாராட்டப் பட்ட நரேந்திர மோடியின் அன்புச் சகோதரி ஜெயலலிதாவிடத்தில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

ஆனால் இந்த வரிசையில் முஸ்லிம் களின் பெருத்த ஆதரவோடு மேற்கு வங்கத்தில் ஆட்சி யைக் கைப்பற்றிய மம்தா பானர்ஜியும், கேரளாவின் இடது சாரி முதல்வரும் இணைந்தது தான் வேதனை அளிக்கிறது.

சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசின் பொறுப்பு. மதக் கலவரங்களின் போது மத்திய அரசு தலையிடும் வகை யில் சட்டம் இயற்றப்படுவது மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதா கும் என்று எதிர்ப்பிற்கான காரணத் தைக் கூறுகிறார்கள்.

1992ம் ஆண்டு பாபர் மஸ்ஜித் இடிக் கப்பட்டபோது உச்ச நீதிமன்றத்தின் முன் உ.பி. மாநில அரசு அளித்த வாக்குறுதி யைக் காப்பாற்றாமல் இடித்தவர்க ளுக்கு துணை நின்றதே, ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் முஸ்லிம்களுக்கு எதி ராகவும், சங்பரிவாரத்திற்கு ஆதரவாக நின்றதே இதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

2002ல் குஜராத்தில் கலவரம் நிகழ்த்தப்பட்டு முஸ்லிம்கள் தாக்கப்ப டும்போது குஜராத் அரசும், காவல்துறை யும் அதற்கு துணை நின்றதே அதில் பாதிக்கப்பட்டவர்களின் ஓலங்களுக்கு இன்றுவரை நியாயம் வழங்கப்பட வில்லையே அதற்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

சிறுபான்மையினர் விவகாரத்தில் மட்டும் வாய் கிழிய மாநில உரிமைகளை பேசும் இவர்கள் எல்லா விஷயத்திலும் இப்படித்தான் நடந்து கொள்கிறார் களா?

ஆக மாநில உரிமை என்பது இவர்களுக்கு வெளி வேஷம்தான். உள்ளுக்குள் சிறுபான்மையின ருக்கு எந்த பலனும் கிடைத்து விடக் கூடாது என்பதில் இவர்கள் ஒன்று பட்டு நிற்கிறார்கள்.

இந்தச் சட்டம் மதச் சிறுபான்மையின ருக்கு மட்டுமல்லாமல் மொழிச் சிறுபான் மையினர், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் என பாதிக்கப்படும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் வகுக்கப்பட் டுள்ள நிலையில் மாநில உரிமை பேசி இந்த சட்டத்தை எதிர்ப்பது எந்த விதத்தி லும் சிறுபான்மையினருக்கு நன்மை கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் காட்டுவதாக உள்ளது.

மாநில முதல்வர்களின் எதிர்ப்பைக் கண்டு இந்தச் சட்டத்தை நிறைவேற்றா மல் மத்திய அரசு பின் வாங்கி விடாமல் இருக்க வேண்டுமென்றால் இந்தச் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட சிறுபான்மை மக்கள் உறுதியாக குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம்கள் இதில் முன்னணியில் நிற்க வேண்டும். அப்போதுதான் மாநில அரசுகள் இதனை எதிர்ப்பதில் வேகத்தை குறைக்கும். அது சட்டம் அமுல்படுத்தப் பட வழி வகுக்கும்.

Pin It