சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுடன் முரண்பட்டு நின்றாலும் அவரது அரசியல் வாரிசாகவே மதவெறி, இனவெறி, மொழிவெறிப் போக்குகளுடன் அரசி யல் களமாடி வருகிறார் நவ நிர்மாண் சேனா என்கிற வன்முறைக் கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே.

வன்முறை அரசியலை நடத்தி வரும் ராஜ் தாக்கரே... பேச்சிலும் வன்முறையைப் பிரயோகிப்பவர். சிறுபான்மையினர் மற்றும் பீகார் மாநிலத்தவர்களுக்கு எதிராக விஷம் கக்கும் ராஜ்தாக்கரே, கடந்த 12ம் தேதி மஹா ராஷ்டிரா மாநிலம் மாலேகான், பீவாண்டி முஸ்லிம்களை அவமானப்படுத்தும் வகை யில் பேசியிருப்பது முஸ்லிம்களை மாத்திர மல்லாமல் நடுநிலையாளர்கள், அரசியல் தலைவர்களையும் கொந்தளிக்க வைத்துள் ளது.

மாலேகான், பீவாண்டி உள்ளிட்ட 5 நகரங்களுக்கான மாநகராட்சித் தேர்தல் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக கடந்த 12ம் தேதி மாலேகானுக்கு வந்திருந்த ராஜ் தாக்கரே,

“பாகிஸ்தான் மற்றும் பங்களா தேஷைச் சேர்ந்த பயங்கரவாதிக ளின் புகலிடமாக மஹாராஷ்டிரா வின் மாலேகான், பீவாண்டி நகரங் கள் இருக்கின்றன. பயங்கரவாதிக ளின் சொர்க்கமாக இரண்டு நகரங்க ளும் திகழ்கின்றன...'' என விஷம் தோய் ந்த வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

மேற்கண்ட இரண்டு நகரங்களும் மஹராஷ்டிரா மாநிலத்திலேயே முஸ்லிம் கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதி களாகும். முஸ்லிம்களைக் கேவலப்படுத்தும் வகையில் ராஜ்தாக்கரே பேசியிருப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

முஸ்லிம்களுக்கு எதிராக மதவெறியை வெளிப்படுத்திய தாக்கரே, தனது அரசிய லின் அடிப்படைக் கொள்கையான மராத்தி யர் - மராத்தியரல்லாதோர் என்கிற மொழி வெறி முழக்கத்தையும் பீஹாரிகளுக்கு எதிராக முழங்கியிருக்கிறார்.

பீஹார் மாநிலம் உருவாகி 100 ஆண்டுகள் ஆனதையொட்டி நூற்றாண்டு விழாவை மும்பையில் கொண்டாடப் போவதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்திருந்தார் இந்த அறிவிப்பைக் கண்டிக்கும் வகையில் “நிதீஷ் குமாரை மஹராஷ்டிராவுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்...'' என ஆவேசப்பட்டிருக்கிறார் ராஜ்தாக்கரே.

ஒரு சமூகத்தை கொச்சைப்படுத்தியும் வன் முறையை தூண்டி விடும் வகையிலும் பேசு வது சட்ட விரோதம் என்பது தெரிந்த நிலையிலேயே திமிர்த்தனமாக பேசியி ருக்கும் ராஜ்தாக்கரே மீது நடவ டிக்கை எடுக்காமல் இருக்கும் மஹாராஷ்டிரா காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசை கோழைத்தனமான அரசாங்கம் என வர்ணித்திருக்கும் அகில இந்திய ஐக்கிய முஸ்லிம் மோர்ச்சா அமைப்பு, இந்த விஷயத் தில் பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் தலையிட்டு ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ராஜ்தாக்கரே மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளது.

முஸ்லிம் மோர்ச்சாவின் தலை வரான டாக்டர் இஜாஸ் அலி வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில், “ஏற்கெனவே பிஹாரிகளை குறி

வைத்து பால்தாக்கரே வகுப்புக் கலவரங்களைத் தூண்டினார். இதன் விளை வாக அப்பாவி ஏழை முஸ்லிம்களின் உயிர்க ளும், உடமைகளும் பறிபோனது. இப்போது ராஜ்தாக்கரே தனது பலத்தை நிரூபிக்க வன் முறையைத் தூண்டி வருகிறார்.

இந்நிலையில், முஸ்லிம்களும் இதனை உரிய வகையில் எதிர் கொண்டால் அது பாசிச இனவெறியர்களுக்கு வகுப்புக் கலவ ரத்தை உருவாக்கும் வாய்ப்பாக அமைந்து விடும். இந்தப் போக்கை அனுமதிக்கக் கூடாது...'' என தெரிவித்திருக்கி றார்.

ராஜ் தாக்கரேயின் பேச்சைக் கண்டித்திருக் கும் மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் (டெல்லி) பொதுச் செயலாளரான ஆஃப்தாஃப் அஹ்மத், ராஜ் தாக்கரேயின் வன்முறைப் பேச்சைக் கண்டு கொள்ளா மல் செயலற்று இருக்கும் மஹராஷ்டிரா அரசு குறித்த தனது வேதனையை வெளிப் படுத்தியிருப்பதுடன், உடன டியாக ராஜ் தாக்கரேவை கைது செய்து அவரது கட்சி யின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர்களும் வட இந்தியர்களிடம், குறிப்பாக பீஹாரிகளிடம் ராஜ் தாக் கரே நிபந்தனையற்ற மன் னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

தாக்கரேயின் விஷ வார்த்தைகளுக்கு கண் டனம் தெரிவித்திருக்கும் மஹாராஷ்டிரா சமாஜ் வாதி கட்சித் தலைவரான அபு ஹாஷிம் ஆஸ்மி, “தாக்கரேயின் பேச்சு சிறுபிள்ளைத்தனமா னது; தாக்கரேவிற்கு காங்கிரஸ் அரசின் மறை முக ஆதரவு இருக்கிறது. அதனால்தான் காங் கிரஸ் அரசின் துணையோடு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக அவரால் பேச முடிகிறது. தாக்கரேயின் பேச்சு முற்றிலும் சட்ட விரோதமானது...'' என காங்கிரஸ் அரசை குற்றம் சாட்டியிருக்கிறார்.

2006ல் நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்குகளில் கைது செய்யப் பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சில மாதங்களுக்கு முன் புதான் பிணை யில் விடுத லையானார்கள்.

இவர்கள் மீதான வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை. தேசிய புலனாய்வு ஏஜென்சியும் இவர் களுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

ஆனால் உண்மையில் மாலே கான் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சாமியாரினி பிராக்யா சிங், அசீமானந்தா, முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித் உள்ளிட்ட இந்துத்துவாவினர் கைது செய்யப்பட்டனர். இதனை குறித்து வாய் திறக்காத ராஜ் தாக்கரே, முஸ்லிம் இளைஞர் கள் விடுதலையானதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மாலே கான்வாசிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி உண்மை யான காவி பயங்கரவாதிகளான இந்துத்துவாவினரை மறைக்க முயற்சித்திருக்கிறார்.

தாக்கரே வகையறாக்களின் சூது நிறைந்த வார்த்தைகளை இனியும் நம்ப மாலேகான், பீவாண்டி பகுதி இந்துக்களே தயாராக இல்லை. மாலேகான் மாநகராட்சித் தேர்தலில் நவநிர் மாண் சேனா தோல்வியைத் தழு வும் என்கின்றனர் மாலேகான் முஸ்லிம்கள்.

- ஃபைஸ்

Pin It