தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் அன்னையாரும், வேலுப்பிள்ளை அவர்களின் துணைவியாருமான பார்வதி அம்மையார் 20-02-2011 அன்று காலை இலங்கை வல்வெட்டித்துறை மருத்துவமனையில் மறைவுற்றார். தமிழ் இனத்தின் நெடிய வரலாற்றில் என்றுமே நடந்திராத தன்மையில், நிறுவப்பட்ட ஓர் அரசினை எதிர்த்து 30 ஆண்டு களுக்குமேல் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக் காக வீரப்போராட்டம் நடத்திய ஈடுஇணையற்ற ஒரு மாவீரனை ஈன்று தந்த அன்னையார் பார்வதியின் மறைவு உலகெங்கும் வாழும் தமிழருக்கு ஆராத் துயரத்தையும் துன்பத்தையும் அளிப்பதாகும்.
சில ஆண்டுகளாகவே நீரிழிவு, இதயக்கோளாறு போன்ற நோய்களால் துன்புற்றிருந்த நிலையில், பக்கவாத நோய் தாக்கியதால், பார்வதி அம்மையாரின் உடல்நிலை மேலும் சீர்குலைந்தது. அதனால் சென் னையில் மருத்துவம் செய்து கொள்வதற்காக மலே சியாவிலிருந்து இந்தியாவுக்கு கடந்த ஆண்டு வந்தார். ஆனால் இந்திய வல்லாதிக்க அரசு மனித நேயமற்ற முறையில் அவரை சென்னை வானூர்தி நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பிவிட்டது. தமிழ்நாட்டில் ஆறு கோடித் தமிழர்கள் இருந்தும் இந்த அவலம் நேர்ந்தது. தமிழ் நாடு, தில்லி ஒற்றையாட்சிக்கு அடிமையாக உள்ள வரை இது போன்ற அவலங்களும், கொடுமைகளும் இன இழிவுகளும் தொடரும்.
பார்வதி அம்மாள்-வேலுப்பிள்ளை இணையர்க்கு, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தவிர, மனோகரன் என்ற மற்றொரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். ஒரு மகள் கனடா நாட்டில் உள்ள டொராண்டோ நகரிலும், மற்றொரு மகள் சென்னையிலும் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்ற னர். மனோகரன் டென்மார்க் நாட்டில் குடும்பத்தி னருடன் உள்ளார்.
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர் களை ஈன்றளித்த பார்வதி அம்மையாருகு மா.பெ.பொ.க. வீரவணக்கத்தையும் செலுத்துகிறது.