இன்றைய நாளில் கணினி இல்லாத நிறுவனமே இல்லை. குறைந்தபட்சம் கணக்கீடு செய்யும் கணினியாவது இருக்கின்றது. கணினி இல்லை என்றால் அதிகமாகப் பாதிக்கப்படுவது ஊடகங்களே.

நொடியில் ஒரு செய்தி உலகின் பல மூலைகளுக்குச் சென்று சேருகின்றது. கணினி நிறுவனத்தில் மைக்ரோ சாப்ட்வேர் நிறுவனம் பெரும்பங்கைச் செய்து கொடுகின்றது. ஒருவர் வரும்பொழுதேயார் வருகின்றார்; என்ன எடுத்து வருகின்றார் என்பதைக் கண்டறியலாம்.

கதவுகள் ஆள் வரும்பொழுதே திறந்துவிடுகின்றன. உள்ளே சென்றதும் கதவு மூடிவிடுகின்றது. உட்கார்ந்த இடத்திலிருந்தே தொலைக்காட்சிப் பெட்டி, குளிரூட்டும் பெட்டி, மின்விசிறி, வானொலி, கார் கதவை மூடுதல் மற்றும் திறத்தல், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு குளிர்சாதனப் பெட்டிகள், விளக்குகள் நிறுத்தப்படுவது போன்ற பல செயல்களை எலக்ட்ரானிக் கருவிகள் மூலம் இயக்கலாம்.

ஆளில்லாமல் விண்வெளியில் ஏவுகணைகள் மூலம் ஆராய்ச்சிகள் செய்யலாம். கோள்களில் என்ன இருக்கின்றது என்பதைக் காணலாம். ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏவுகணைகள் கொண்டு தாக்கலாம். இப்படி இயங்கிக் கொண்டு இருக்கும் இந்தப் பூவுலகில் மனிதன்தான் அனைத்தையும் செய்கின்றான்.  மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் தன் மூளையைக் கொண்டு கணினியைச் செயல்படுத்த முடியாது. இவ்வளவும் இயக்கும் கணினிக் கருவிகள் பலப்பல கேடான செயல்களுக்கும் உதவுகின்றன.

நாம் தினசரி நாளிதடிநகளில் தொலைக்காட்சிகளில் கிரிட்டிட்கார்டு மூலம் ஒருவன் பயன்படுத்திய வங்கிக் கணக்கட்டையின் குறிப்புகளை இன்னொரு கணினிக் கருவி மூலம் கண்டு வங்கிகளில் உள்ள கணக்குகளில் கொள்ளை நடக்கின்றது என்ற செய்திகளைக் காண்கிறோம்.

பல உயிரினங்களை இரக்கமின்றி அழிக்கப் பயன்படுகின்றது. பல உயிரினங்கள் நம்மை விட்டுச்சென்றுவிட்டன (அ) அழிந்துவிட்டன. இப்படி இயங்கும் இந்தக் கணினி சில நேரங்களில் நம்மைக் குழப்புகின்றது.

கணினி மென்பொருள் இயக்குநர்கள் கூறுகின்றனர். “எவருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளே தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். இது உண்மையாகவே செயல்படுத்த முடியும் என்கின்றனர். ஒரு அறைக்குத் திறந்துபோகுமுன்பே உள்ளே உள்ள கருவிகளை இயக்க முடியும். பல ஆயிரம் கிலோ மீட்டர்களிலிருந்தும் இயக்கலாம்” என்று கூறுகின்றனர்.

இதே தன்மையில் வாக்கு இயந்திரங்களை இயக்க வழி இருக்கலாம் என்ற அய்யம் ஏன் பலருக்கு எழவில்லை? ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரும் வரி செலுத்துகின்றோம். ஏழைகள் வருமான வரி கட்டவில்லை. ஆனால் தாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுக்கும் வரி கட்டியே வாங்குகின்றனர்.

எத்தனைப் பேரிடம் கைமாறி விற்றாலும் வியாபாரி ஒருபொழுதும் விற்பனை வரியைத் தன் இலாபத்திலிருந்து கட்டுவதில்லை. அனைத்தும் நுகர்வோர்களே வரி செலுத்தி வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

இன்றைய நிலையில் அனைவரும் ஒன்றுசேர்ந்தாற்போல் முழு மதுவிலக்கு வேண்டும் என்றும் இதற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் அழிக்கப்படும் என்ற முனைப்புடன் சிந்தியுங்கள்!

Pin It