பாரதிய சனதாக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம், ஒடிசா மாநிலத் தலைநகரமான புவனேஸ் வரத்தில், 15.4.2017 சனி, 16.4.2017 ஞாயிறு இரண்டு நாள்களிலும் நடைபெற்றது.

அண்மையில் நடந்த உத்தரப்பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் 403 இடங்களில் 312 இடங்களைக் கைப் பற்றிய மாபெரும் வெற்றியைக் குவிக்க பாரதிய சனதா கையாண்ட அதே வாக்குச் சேகரிப்பு முறையை அப் படியே கையாண்டு, இந்தியா முழுவதிலுமுள்ள :

1.            ஊராட்சிகள் அனைத்தையும்

2.            நகராட்சிகள் அனைத்தையும்

3.            பெருநகராட்சிகள் அனைத்தையும்

4.            மாநிலச் சட்டமன்றங்கள் எல்லாவற்றையும்

5.            நாடாளுமன்றத்துக்கு உள்ள 543 தொகுதிகளையும்

2019இல், பாரதிய சனதா கைப்பற்றத் திட்டமிட்டு விட்டது.

என்னென்னத் திட்டங்கள்?

முதலாளித்துவமும்  இந்துமதமும் கைகோத்துக் கொண்ட பெரிய பணத்தெம்பில், பாரதிய சனதாக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் 2 ஆண்டுகளுக்கு முந்தியே வலி வான திட்டங்களைத் தீட்டிவிட்டனர்.

அத்திட்டங்களாவன :

1.  அமித் ஷா, இந்தியா முழுவதையும் 95 நாள்களில் வானூர்தியில் இப்போதே வலம் வருவார்.

2. இந்தப் பயணத்தைப் பயன்படுத்தி, ஊராட்சி உறுப் பினர் தொகுதி முதல் நாடாளுமன்றத் தொகுதி வரையில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் - வாக்குச் சேகரிக்க வேண்டிய ஊதியப் பணியாளர் களை விரைவிலேயே அமர்த்திவிடுவார்.

இந்த வசதி, பணத்தைப் பொறுத்த வரையில், இந்தியாவிலுள்ள வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை.

இது நடக்குமா? ஆம்! நடக்கும்!

எதை முகாந்திரமாக வைத்து இதை நாம் கூறுகிறோம்?

நாம் 2017 ஏப்பிரல் “சிந்தனையாளன்” தலையங் கத்தில் எழுதியுள்ளதை ஒவ்வொருவரும் இங்கு நினைவு கூருங்கள்!

இதோ அது :

“அமித் ஷா பா.ச.க.வின் தேசியத் தலைவர்.

அவர் ஓராண்டுக்கு முன்னரே உ.பி.யில் ஒரு வாக்குச்சவாடிக்கு 10 முதல் 21 பேர்கள் வீதம் வாக்குச் சேகரிப்போரை அமர்த்திவிட்டார்.

உ.பி.யில் மொத்த வாக்குச்சாவடிகள் 1,47,401 ஆகும்.  இவற்றில்  வாக்குச் சேகரிக்க 13,50,000 ஆள்கள் அமர்த்தப்பட்டிருந்தனர்.

அதனால்தான் உ.பி.யில் பதிவான மொத்த வாக்குகளில், பாரதிய சனதா கூட்டணியினர் 41.4 விழுக்காடு வாக்குகளை வாரிக் குவிக்க முடிந்தது.

இவ்வளவு பெரிய பட்டாளத்துக்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபா செலவாயிற்றோ!

மோடிக்கும் ஷாவுக்கும் தான் அது தெரியும்!”

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

எல்லோருக்கும் எச்சரிக்கை!

Pin It